திருமணத்திற்கு பின்பு ஆபாச வீடியோ பார்ப்பது திருமண வாழ்க்கையை விவாகரத்து வரை கொண்டு செல்லும் என ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி ஆபாச வீடியோ பார்ப்பதால் எப்படியெல்லாம் உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்பதை விவரிக்கிறது.
ஆபாச வீடியோக்களை உங்கள் மனைவிக்கே தெரியாமல் பார்க்கிறீர்கள் எனில் அதுவும் இரவில் பார்க்கிறீர்கள் எனில் திடீரென அதை அவர் தூக்கத்தில் எழுந்து காண நேர்ந்தால்..அந்த கணமே உங்கள் மீதான நம்பிக்கை அற்று போகும். வெளிப்படைத் தன்மையில் சந்தேகம் எழும். இதுவே உங்களுக்குள்ளான விரிசலை பலப்படுத்தும்.
ஆபாச வீடியோக்களைப் பார்த்துவிட்டு பல எதிர்பார்ப்புகளோடு மனைவியை அணுகுவீர்கள். அதில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை எனில் அவர் மீது வெறுப்பு உண்டாகும். அதேபோல் உங்களுக்கு திடீரென ஆசை வரும் அந்த சமயம் உங்கள் துணைக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் பிரச்னை உண்டாகும்.
இவற்றால் அடிக்கடி சண்டை வரும். இதை கட்டுப்படுத்த ஒரு கட்டத்தில் உங்கள் மனைவி பொய்யான உணர்வுகளை வெளிப்படுத்த நேரிடும்.இப்படி பொய்யான உச்சகட்ட உணர்வை இந்தியாவில் உள்ள பெண்கள்தான் அதிகம் செய்வதாகவும் சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆபாச வீடியோக்களை பார்த்து அது போன்ற உடலமைப்பு இல்லையோ என்ற தயக்கம் ஏற்பட்டு உங்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும்.
Also Read : தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் உண்டா..? ஒரு நாளைக்கு எத்தனை முறை வைத்துக் கொள்ளலாம்..?
அதேபோல் ஆய்வு ஒன்று, தொடர் ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்தால் துணையைத் தாண்டி மற்ற பெண்களுடனும் உறவு வைத்துக்கொள்ள தூண்டும் என்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கையே சீர்குலையும்.
NoFap நடத்திய ஆய்வில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் உடலுறவில் ஈடுபாட்டைக் குறைக்கும் என்கிறது. அந்த ஆய்வில் 25% செக்ஸில் ஈடுபாடு இல்லாமலும், 19% உடனே விந்து வெளியேறும் குறைப்பாடு கொண்டவராகவும், 34% ஆண்குறி விரைப்பில் குறைபாடு என இப்படி பல காரணங்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த ஆய்வு சிறந்த உதாரணத்தையும் அளிக்கிறது. அதில் மது அடிமை என்றால் அடுத்து அடுத்து என மேலும் குடிக்கத் தூண்டும். ஆனால் ஆபாச வீடியோக்களுக்கு அடிமை என்றால் அதை விட சிறப்பாக கிடைக்காதா என்ற தேடலே அடுத்தடுத்து இருக்கும். அந்த தேடுதல் திருப்தி அடையாததாக இருக்கும். அதனால்தான் ஆபாச வீடியோக்களுக்கு அதிக அளவில் அடிமையாவதாக தெரிவித்துள்ளது.
இப்படி திருமண வாழ்க்கையில் திருப்தியின்மை, தனிமை, அழுத்தம் , மனநிலை மாறுபாடு, மனைவிக்கு அழுத்தம் கொடுப்பது என பல பிரச்னைகள் உங்கள் திருமண வாழ்க்கையையே நாசமாக்கும். அதோடு இன்று பல விவாகரத்திற்கு இதுவும் காரணமாக இருப்பது ஆச்சரியத்திற்கு இல்லை.ர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Porn websites, Relationship Tips