பால்வினை நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!

காட்சிப் படம்

பால்வினை தொற்றுநோய் பொதுவானது என்றாலும், இந்த தொற்று ஏற்பட்ட பலர் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுகின்றனர்.

  • Share this:
உடலுறவில் அதீத ஆசை இருந்தாலும், அதனால் பரவக்கூடிய நோய்கள் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக பால்வினை நோய்கள் ஏற்படுகின்றன. உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மேற்கொள்ளும் பாதுகாப்பற்ற உடலுறவு, தொற்றப்போகும் பால்வினை நோய்களுக்கான வழி என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Mankind Pharma நிறுவனத்தின் மேனேஜர் ஜாய் சார்ட்டர்ஜி பேசும்போது, ஆணுறை என்பது செக்ஸ் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட பாதுகாப்பான வழிமுறை என்றாலும், உடலுறவு கொள்ளும்போது பரவும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் கவசம் எனத் தெரிவித்துள்ளார். சொறி சிரங்கு, கிளைமீடியா, கொனேரியா போன்ற தொற்றுநோய்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பால்வினை தொற்றுநோய்களில் மிகவும் ஆபத்தான நோயான எய்ட்ஸ் (HIV) ஒருவரின் உயிரையும் எடுக்க வல்லது. இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பால்வினை தொற்றுநோய் பொதுவானது என்றாலும், இந்த தொற்று ஏற்பட்ட பலர் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுகின்றனர். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் ஆபத்து உள்ளது என ஜாய் சாட்டர்ஜி எச்சரிக்கிறார். இதுபோன்ற நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஆணுறை உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், ஆணுறை பயன்படுத்துவதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, பெரும்பாலானோர் தவிர்ப்பதாக கூறும் ஜாய் சாட்டர்ஜி, இது ஒரு முட்டாள் தனம் எனவும் சாடியுள்ளார். உடலுறுவில் ஈடுபடும் இருவருக்கும் இந்த முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஒருவருக்கு இருந்தாலும், கவனக்குறைவால் மற்றவரும் பாதிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார் என சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

ஏன் ஆணுறை அவசியம்?

செக்ஸின்போது நீங்கள் ஆணுறை பயன்படுத்தினால் பால்வினை தொற்றுநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். கரு உருவாதலை தடுக்கலாம். லூபிரிக்கண்ட் ஆணுறைகளை பயன்படுத்தலாம். இந்த ஆணுறைகளை பயன்படுத்தும்போது எந்தவித பக்கவிளைவகளும் ஏற்படுவதில்லை. மிகவும் அரிதாக ரப்பர் வகை ஆணுறைகளை பயன்படுத்தும்போது எரிச்சல், வலி, அலர்ஜி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆணுறையில் இருக்கும் சில Lube, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.

latex வகை ஆணுறைகளை பயன்படுத்துவது உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால், பிராண்டு ஆணுறைகள் அல்லது பிளாஸ்டிக் ஆணுறைகளை தேர்தெடுத்துக்கொள்ளலாம். பிளாஸ்டிக்கில் உருவாக்கப்படும் polyurethane, polyisoprene போன்ற ஆணுறைகள் latex இல்லாமல் உருவாக்கப்படுகின்றன. தரமான ஆணுறைகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் non-latex ஆணுறைகள் கிடைக்கின்றன. தரமற்ற ஆணுறைகள் உபயோகிக்கும்போது பால்வினை நோய்களில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் இல்லை.

தொற்றுநோயில் இருந்து தப்பிக்க:

1. பால்வினை தொற்றுநோய் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை சந்தித்து முறையான ஆலோனை பெறும் வரை செக்ஸில் ஈடுபடவேண்டாம்
2. மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் சிகிச்சையை தொடருங்கள்
3. செக்ஸில் ஈடுபடும் முன் பார்ட்னருக்கு பால்வினை சார்ந்த நோய் இருக்கிறதா? என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
4. எப்போது உடலுறவில் ஈடுபட்டாலும், ஆணுறை பயன்படுத்துங்கள்
5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்
6. பால்வினை சார்ந்து உங்கள் பார்ட்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

பாலியல் கல்வி குறித்து பேசிய ஜாய் சாட்டர்ஜி, பள்ளிக்கல்வியிலேயே பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கூறினார். பாதுகாப்பான உடலுறவு, பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளும்போது, இதுபோன்ற பால்வினை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. வீட்டில் இருக்கும் பெற்றோரும், குழந்தைகளிடம் செக்ஸ் குறித்த உரையாடலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
Published by:Tamilmalar Natarajan
First published: