காதலர் தின வாரம் ஏற்கனவே தொடங்கி ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. உதாரணத்திற்கு அன்பு வெளிப்பாடு நாள், வாக்குறுதி நாள், சாக்கலேட் டே என பல தினங்கள் கொண்டாடப்பட்டுள்ளன. அந்த வகையில் காதலர் தின வாரத்தின் 6ஆம் நாளில் ஹக் தினம் கொண்டாடப்படுகிறது.
ஹக் தினத்தின் முக்கியத்துவம்
பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஹக் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களை அரவணைத்து பாசமழை பொழிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஹக் என்பது மௌனமாக மேற்கொள்ளப்படும் மாபெரும் தகவல் தொடர்பு என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.
சுருக்கமாக சொன்னால், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கை குலுக்கிக் கொள்வதைப் போல, அன்பின் வெளிப்பாடாக இதயங்கள் இரண்டும் ஒன்று சேருவதுதான் அரவணைப்பின் அடையாளம் ஆகும். இன்னொருவர் மீது நீங்கள் எந்த அளவுக்கு எல்லை இல்லாத அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லாத போது, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவதுதான் ஹக் ஆகும்.
நொடிப்பொழுது துரிதமாக மேற்கொள்ளப்படும் ஹக் என்பது, நாம் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நம் பார்ட்னருக்கு உணர வைப்பதாக அமையும்.
ஹக் தின வரலாறு
ஒவ்வொரு ஆண்டும் ஹக் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இது மிகச் சரியாக எப்போது தொடங்கியது என்பது இதுநாள் வரையில் தெரியாத தகவலாக உள்ளது. அதே சமயம், காதலர் தினம் குறித்த வரலாற்றை பேசும்போது, பல கதைகள் உலா வருகின்றனர்.
புனிதர் வேலன்டைன் என்பவரை கொண்டாடும் விதமாகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மூன்றாம் நூற்றாண்டில். ரோம் நகர மன்னரால் தூக்கிலிடப்பட்ட வேலைன்டைன் என்று பெயர் கொண்ட இரண்டு அல்லது மூன்று நபர்களை நினைவுகூர்ந்து இந்த தினம் அனுசரிக்கப்படுவதாகக் கூறுவோரும் உண்டு.
அதாவது, ரோம் நகர போர் படையில் பணியாற்றிய எந்தவொரு வீரரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கட்டளையை வேலன்டைன் என்ற பெயர் கொண்ட ஒருவர் மீறியதாகக் கூறி தண்டிக்கப்பட்டாராம். அதேபோல, வேலன்டைன் என்ற பெயர் கொண்ட மற்றொரு பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த பார்வையாளருக்கு காதல் கடிதம் எழுதியதால் தண்டிக்கப்பட்டாராம். இதில் எந்தக் கதையும் உண்மையென நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இன்றைய நாள் வரை நாம் வேலன்டைன் டே கொண்டாடி வருகிறோம்.
ஹக் தினத்தை எப்படி கொண்டாடுவது
ஹக் என்பது காதலர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற வேண்டிய நிகழ்வு அல்ல. ஹக் என்பது அன்பின் வெளிப்பாடு. அன்றைய தினம், உங்களுக்கு மிக பிடித்தமான எந்தவொரு உறவையும் நீங்கள் ஆரத் தழுவலாம். உதாரணத்திற்கு நண்பர்கள், அண்ணன், தம்பிகள், சகோதரிகள் என யாரை வேண்டுமானாலும் நீங்கள் பாசத்தோடு அரவணைக்கலாம்.
Also Read : Promise Day 2023 : காதலியிடம் இந்த வாக்குறுதிகளை சொல்லி நம்பிக்கையை உண்டாக்குங்கள்..!
குறிப்பாக, ஒருபக்க ஹக் என்பது இருவர் இடையிலான பலமான பந்தத்தை எடுத்துக் கூறுவதாக அமையும். அதே சமயம், காதலன் அல்லது காதலியை அரவணைக்கும்போது, அவர்களுக்கு உங்கள் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக இடுப்பை அணைத்து ஆரத் தழுவலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hug Day, Valentine's day, Valentine's Week