Home /News /lifestyle /

Valentine day 2022 : காதலர் தினத்தில் கொண்டாட்டம் மட்டும் போதாது... இவற்றையும் செய்ய வேண்டும் – நிபுணர்கள் டிப்ஸ்

Valentine day 2022 : காதலர் தினத்தில் கொண்டாட்டம் மட்டும் போதாது... இவற்றையும் செய்ய வேண்டும் – நிபுணர்கள் டிப்ஸ்

உறவுமுறை டிப்ஸ்

உறவுமுறை டிப்ஸ்

காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து வைத்திருந்தாலும், உறவு உயிரோட்டமாக உயிரோட்டமாக இருப்பதற்கு ‘ரொமான்ஸ்’ அவசியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
காதலர் தினக் கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கி விட்டது. திங்களன்று ரோஸ் டே துவங்கி முதல் காதலர் தினத்தை விரும்பியபடி எல்லாம் கொண்டாடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதைக் கடந்து உறவு பிரியாமல் இருக்க பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். Couple Goals என்று சொல்லப்படும் ‘காதலர்கள் / தம்பதிகள்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உதாரணமாக, ஜோடிகளாக இருக்க என்னவெல்லாம் தேவை?

காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து வைத்திருந்தாலும், உறவு உயிரோட்டமாக உயிரோட்டமாக இருப்பதற்கு ‘ரொமான்ஸ்’ அவசியம். ஆனால், அதைத் தவிர்த்து வேறு சில விஷயங்களும் உறவுகளுக்குள் தேவை. அதைப்பற்றிய நிபுணர்களின் ஆலோசனை இங்கே

இன்று உறவுகளில் ஜோடிகள் இரண்டு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்!

தன்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தன்னுடைய பார்ட்னர் அதாவது காதலன் அல்லது காதலி நிறைவேற்ற வேண்டும் மற்றும் தன்னுடைய இடத்தில் இருந்து தான் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். எனவே, ஜோடிகள் செய்யும் மிகப்பெரிய தவறாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உறவை வளர்க்க, பிணைப்பு அதிகரிக்க மற்றும் பிரிவு ஏற்படாமல் நீண்ட காலம் தொடர என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

எது கிடைத்தாலும் அதற்கு பதிலாக நீங்களும் கொடுக்க வேண்டும். காதல் என்பது கொடுக்கல் வாங்கல் வணிகம் இல்லையென்றாலும், ஒரு தரப்பில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படும் முயற்சி போதாது. எனவே தம்பதிகளைப் பொருத்தவரை, இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல. இருவருமே சரிசமமாக முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.



எவ்வளவு பேச முடியுமோ, உரையாட முடியுமோ, தெளிவாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். அதாவது உங்கள் பார்ட்னர் உங்களுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை செய்தால் அதை வெளிப்படையாக உடனடியாக கூறுவது நல்லது. அதை நீங்கள் தாமதப்படுத்தினாலோ அல்லது அவ்வளவு முக்கியமில்லை என்று விட்டு விட்டால் ஏதோ ஒரு புள்ளியில் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும். மனதுக்குள் வைத்திருப்பதை விட வெளிப்படையாக பேசி அதற்கு தீர்வு காணுவது உறவை பலப்படுத்தும்.

புரிதலை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காதலன் அல்லது காதலி உங்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை கூறும் பொழுது அவற்றை பற்றி முன்முடிவுகள் எடுக்காமல் அவர்களுடைய பார்வையிலிருந்து கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் இல்லாத தம்பதிகள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

Happy Valentine’s Week 2022 : காதலர்களே... காதலர் தின வாரத்தை கொண்டாட இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள் பார்ட்னர் உங்களுக்காக செய்யும் சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள். எவ்வளவு சின்ன விஷயத்தை உங்களுக்காக செய்தாலும் அது உங்கள் மீது இருக்கும் அக்கறை, உங்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பதன் வெளிப்பாடுதான். உதாரணமாக, சோர்வாக இருக்கும் போது ஒரு கப் காஃபி கொண்டு வந்து கொடுத்தாலும் நீங்கள் பாராட்டலாம். உறவுகள் அழகாக மாற, நல்ல பிணைப்பு ஏற்பட சின்ன சின்ன விஷயங்கள் தான் காரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.



காதலிக்கத் தொடங்கிய போது அல்லது காதலை ப்ரப்போஸ் செய்வதற்கு, ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் பலவற்றை செய்து எப்படியாவது காதலன் / காதலியின் மனதை வெல்ல வேண்டும் என்ற பேரார்வம் இருக்கும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, தானாகவே இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து விடுகின்றனர். இதனாலேயே ஆண் அல்லது பெண் இருவருக்குமே, உறவில் தனக்கு முக்கியத்துவம் இல்லையோ என்ற எண்ணம் தோன்றும். ரொமான்டிக் டேட்டிங், ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவது, சிறிய பரிசுகளை வழங்குவது என்று உறவை பலப்படுத்தா வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love Tips, Valentine day, Valentine Week

அடுத்த செய்தி