வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள ஜோடிகள் தங்களுக்குள் அன்பை பொழிய மற்றும் காதலை பெற மற்றும் காதலை வெளிப்படுத்த தங்களை தயார்படுத்தி கொண்டு வருகிறார்கள்.
காதலர் தினத்தையொட்டி காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் ரோஸ் டே-வுடன் துவக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காதலர் வாரத்தின் இரண்டாவது நாளான பிப்ரவரி 8 ப்ரப்போஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது. அன்பு நிறைந்த காதல் வாரத்தின் இரண்டாம் நாள் காதல் துணையை தேடுபவர்களால் மட்டுமல்ல, ஏற்கனவே உறுதியான உறவில் இருக்கும் தம்பதிகளாலும், மிகுந்த உற்சாகத்துடனும் காதலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்துடனும் கொண்டாடப்படுகிறது.
எனவே இந்த நாளில், மக்கள் தங்கள் இதயங்களை திறந்து தங்கள் காதல் உணர்வுகளை அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் விரும்பும் நபரிடம் உங்களது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தால் இந்த நாள் உங்களுக்கானது!
Propose Day-வின் முக்கியத்துவம்:
முன்னரே பார்த்தபடி காதலர் வாரம் பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ரோஜாக்களை வழங்கி அவர்கள் தங்கள் மனதில் இருப்பதை தெரியப்படுத்துகிறார்கள். இதை தொடர்ந்தே ஒவ்வொரு பிப்ரவரி 8 அன்றும் Propose Day கொண்டாடப்படுகிறது.
ப்ரப்போஸ் டே என்பது காதல் உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு மற்றும் காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நாள். தங்கள் பார்ட்னர்களிடம் அல்லது தான் விரும்புபவரிடம் ப்ரப்போஸ் செய்வதன் மூலம் ஒருவர் தனது காதலை அதிகாரப்பூர்வமாக்க அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாள் பல உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது மற்றும் இரு நபர்களுக்கு இடையே உள்ள அர்ப்பணிப்பு மற்றும் அன்பின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாகவும் இருக்கிறது.
இந்த நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை :
- உங்கள் பார்ட்னரின் கைகளை அழகுபடுத்தும் மோதிரம் இல்லாமல் ப்ரப்போஸ் செய்ய வேண்டாம்
- நீங்கள் ப்ரப்போஸ் செய்ய போகும் திட்டத்தை யாருடனும் ஷேர் செய்து கொள்ளாதீர்கள். ரகசியமாக வைத்திருங்கள்.
- ப்ரப்போஸ் செய்யும் விஷயத்தில் வேறு யாரையும் பார்த்து காப்பி அடிக்காதீர்கள், சுயமாக உங்களுக்கு தோன்றும் வகையில் ப்ரப்போஸ் செய்யுங்கள்
- உங்கள் ப்ரப்போஸலை பர்சனலைஸ் செய்ய நினைவில் கொள்ளுங்கள்
- நீங்கள் காதலை வெளிப்படுத்த ஆசைப்படுவோரிடம் ப்ரப்போஸ் செய்யும் போது முழங்காலை தரையில் வைத்து மண்டி போட்டு காதலை வெளிப்படுத்துங்கள்
- உங்கள் காதலை பார்ட்னரிடம் வெளிப்படுத்த ஏற்ற இடத்தை தேர்வு செய்யுங்கள்
- உங்கள் உரையாடலில் இருந்து, அவரது கனவுகளில் ஒன்று தான் அந்த ப்ரப்போஸ் என்பதை சிந்தித்து உறுதிப்படுத்துங்கள்
ஏன் கொண்டாடப்படுகிறது?
காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் ப்ரப்போஸ் டே தம்பதிகள் தங்கள் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்த, ஒருவருக்கொருவர் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த தவிர புதிதாக காதலை ஒருவரிடம் வெளிப்படுத்த கொண்டாடப்படுகிறது. ஒரு ஜோடி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் வாக்குறுதி மற்றும் அர்ப்பணிப்பை பிரதிநிதித்துவப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உங்கள் பார்ட்னரிடம் உங்களுக்கு அவர் மீது எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை நிரூபிக்க ப்ரப்போஸ் டே முக்கியமானது.
Also Read : Valentine Week List 2023 - Rose Day | நீங்கள் இந்த நிறத்தில் ரோஸ் கொடுத்தாலே மனதில் இருப்பதை சொல்லிடலாம்..!
துணையின் மீது அன்பை பொழிய, உறவை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதையும், ரிலேஷன்ஷிப்பிற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே தங்கள் பார்ட்னருக்கு ப்ரப்போஸ் செய்தவர்கள் அல்லது திருமணமானவர்கள் தங்கள் பார்ட்னரிடம் அவர்களுக்கான உங்கள் அர்ப்பணிப்பு இன்றும் சிறப்பானக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த அற்புதமான நாள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love proposal, Relationship Tips, Valentine Week, Valentine's day