முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ப்ரபோஸ் டே அன்று காதலரை கவர வேண்டுமா? இதை படியுங்கள்!

ப்ரபோஸ் டே அன்று காதலரை கவர வேண்டுமா? இதை படியுங்கள்!

Proposal day 2023

Proposal day 2023

நீங்கள் தெரிவிக்கும் வார்த்தையிலேயே அவர்களுக்கு உங்கள் மீதுள்ள காதல் பல மடங்கு அதிகரிக்கும். அப்படிப்பட்ட சில ப்ரபோஸ் வாழ்த்துக்களை பார்ப்போம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலர் தினம் நெருங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்!. காதலர் தினம் வருவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விதமாக காதலர்கள் கொண்டாடுவார்கள். பலரும் மனதிற்கு பிடித்தவர்களுக்காக இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பது, பரிசுகள் வாங்குவது, வாழ்த்து அட்டைகள் கொடுப்பது என பல்வேறு விதமான மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் ஈடுபட விரும்புவார்கள்.

உங்கள் அன்பிற்குரியவரிடம் நீங்கள் காதல் வயப்பட்டு இருப்பதை தெரிவிக்க இது மிகவும் சரியான ஒரு சமயம் ஆகும். சாதாரண நாட்களில் தெரிவிப்பதை விட இந்த காதலர் தின வாரத்தில் அதுவும் முக்கியமாக ப்ரபோஸ் டே அன்று உங்கள் காதலரிடம் ப்ரபோஸ் செய்வதற்கு மிகவும் சரியான நாளாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் ரோஸ் டே, ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே, கிஸ் டே என்ற வரிசையில் காதலர் தினத்தை விமரிசையாக கொண்டாட காதலர்கள் தயாராகி வருகின்றனர்.

பிப்ரவரி 8ஆம் தேதி ப்ரபோஸ் செய்யும் தினமாக காதலர்கள் அனைத்தும் உலகம் முழுவதும் இந்த ப்ரபோஸ் டேவை கொண்டாட உள்ளனர். பலர் ஜோடியாக டின்னருக்கு செல்வது, அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது என ப்ரபோஸ் டேவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இதைத் தவிர்த்து உங்கள் மனதிற்கு பிடித்தவர் விரும்பும் விதமாக உங்கள் காதலை தெரிவித்து ப்ரபோஸ் செய்வது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் தெரிவிக்கும் வார்த்தையிலேயே அவர்களுக்கு உங்கள் மீதுள்ள காதல் பல மடங்கு அதிகரிக்கும். அப்படிப்பட்ட சில ப்ரபோஸ் வாழ்த்துக்களை பார்ப்போம்.

இன்றைய தினத்தில் என்னுடைய உணர்வுகளை உன்னிடம் வெளிப்படுத்தி, என்னுடைய வாழ்வின் அனைத்து நொடிகளையும் உன்னோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன். வாழ்க்கை முழுவதும் உன்னோடு சேர்ந்து வளரவே விரும்புகிறேன். என் இதயம் முழுவதிலும் உன்னை மட்டுமே காதலிக்கிறேன்! ஹாப்பி ப்ரொபோஸ் டே!

உன்னை பார்த்த நாள் முதலே என்னால் உன்னைப்பற்றி யோசிப்பதை நிறுத்த முடியவில்லை. உன்னை மிகவும் காதலிக்கிறேன். என் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் நீ என்னுடன் இருப்பாயா. ஹேப்பி ப்ரபோஸ் டே என் அன்பே!

Also Read : காதலர் தினம்: பிப்ரவரி 8ல் கொண்டாடப்படும் Propose Day.. இப்படியெல்லாம் ட்ரை பண்ணுங்க!

உலகம் முழுவதும் பல்வேறு காதல் கதைகள் பிறந்திருக்கலாம். ஆனால் நம்முடைய காதல் கதை தான் எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த. ஒன்று. என்னுடைய வாழ்க்கை துணையாக இருப்பதற்கு மிகவும் நன்றி. ஹேப்பி ப்ரபோஸ் டே

First published:

Tags: Love proposal, Valentine Gifts, Valentine Week, Valentine's day