மனதுக்கு பிடித்தவருக்கு பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கு சிறப்பான தினங்கள் தேவையில்லை. இருப்பினும் காதலர் தினம் என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். காதலன் மற்றும் காதலிக்கு பிடித்த பரிசை வாங்கிக் கொடுப்பது என்பது காதலை அன்பை வெளிப்படுத்துவதன் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. காலம் மாற மாற, காதலர் தின கொண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அதற்கேற்றார் போல காதலர் தினத்தன்று பூக்கள் முதல் பலவிதமான பரிசுகள் வரை விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. காதலர் தினம் சார்ந்த வணிகமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆண்களா பெண்களா யார் அதிகம் பரிசளிக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு இந்தியாவில் இயங்கி விரும் IGP என்ற முன்னணி கிஃப்ட் தளம் ஒன்று சர்வே மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் காதலர் தினத்தன்று ஆண்கள் தான் அதிகமாக பரிசளிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
காதலர் தின பரிசு என்பது ஆண்கள் மட்டும் கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பெண்களும் தங்களுடைய காதலனுக்கு, வாழ்க்கை துணைக்கு பரிசுகளை கொடுப்பார்கள். ஆனால், காதலர் தினம் அன்று அதிகமாக பரிசு வாங்குவது ஆண்கள்தான் என்ற ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சராசரியாக பரிசின் மதிப்பு 1000 ரூபாயாக இருக்கிறது என்பதும் சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் வேலண்டைன் வாரம் முழுவதுமாகவே கிட்டத்தட்ட 5,00,000 பூக்கள் குறிப்பாக ரோஜாக்கள் விற்பனையானது. ரோஜாக்களுக்கு அடுத்ததாக சாக்லேட் மற்றும் டெடி பேர் அதிக அளவில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கிஃப்ட் ஹேம்பர்கள்-ஆக வழங்கப்படும் பரிசுகளையும் பலரும் தேர்வு செய்தனர். கிஃப்ட் ஹேம்பர்கள் என்று வரும் பொழுது அதில் சாக்லேட் மற்றும் பூக்கள் ஆகிய இரண்டின் கலவையுமே இருந்தது.
காதலர் தினத்துக்காக விற்பனையாக ஒட்டுமொத்த ஆர்டர்களில் 40% சாக்லேட் மற்றும் பூக்கள் கொண்ட கிஃப்ட் ஆகவும், டெட்டி பேர் கொண்ட ஹேம்பர்கள் 30 சதவீதமாகவும், இதர பரிசுப் பொருட்கள் கொண்டு 50% ஆகவும் விற்பனை ஆகின.
இந்தியாவை பொறுத்தவரை வேலன்டைண்ஸ் டே சமீபத்தில்தான் அதிகமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடுவதற்கு ஏகப்பட்ட பண்டிகைகள் ஆண்டு முழுவதும் இருக்கின்றன. இருப்பினும், காதலர் தினத்தை பரவலாக கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். தங்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகின்றனர் என்பதை நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மெட்ரோ நகரங்களாக டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் காதலர் தின பரிசு விற்பனை 200% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் டெல்லியில்தான் அதிக எண்ணிக்கையிலான வேலண்டைன் பரிசுகள் விற்பனையாகி இருக்கின்றன.
இதற்கு அடுத்ததாக வேலண்டைன் தினத்திற்கு முதல் நாள் அல்லது வேலண்டைன் தினத்தன்று தன்னுடைய காதலன் அல்லது காதலிக்கு பரிசு கிடைக்கும் படி 80 சதவிகித்தினர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். அதாவது சேம் டே டெலிவரியை வேலண்டைன்ஸ் டேவிற்கு பலரும் விரும்பித் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : Kiss Day 2023 | காதலர் தினம்.. லிப்லாக் முத்தத்தில் இவ்வளவு நன்மைகளா..?
இன்றைய இளம் தலைமுறையினரிடத்தில் வேலண்ட்டைன் டே கொண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் நடவடிக்கைகளும் மாறி வருகிறது. அதாவது, காதலை கொண்டாடி வருகிறார்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் அதிகமாக இருந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் காதலைக் கொண்டாடுவது என்பது மிகச்சிறப்பான விஷயம். அது மட்டுமல்லாமல் காதலை வெளிப்படுத்துவது என்பது தம்பதிகளுக்குள் நெருக்கத்தையும், இணக்கத்தையும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Valentine's day, Valentine's Gifts