Teddy Bear Day 2022 : ஒவ்வொரு ஆண்டு பிறந்தவுடன் பிப்ரவரி மாதம் மீது இளசுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பி விடும். பிப்ரவரி 14ஆம் தேதியைக் கொண்டாட காதலர்கள் பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்வர். இந்த காதலர் தினத்தைக் கொண்டாடும் முன், ஒரு வாரத்தையே இளசுகள் கொண்டாடி மகிழ்வர். அந்தவகையில் இன்று பிப்ரவரி 10-ஆம் தேதி 'டெட்டி பியர்' தினமாக பலரும் கொண்டாடுகின்றனர்.
வெளிப்படையாகச் சொன்னால், டெட்டிஸ், கார்டுகள், சாக்லேட்டுகள், பூக்கள் போன்றவற்றை இந்த நாளில் உங்களின் பிரியமானவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். டெட்டிஸ் ஒருபோதும் அவுட் ஆப் ஃபேஷன் ஆகாது, எந்த காலத்திலும் ட்ரெண்டிங்கில் இருக்கும். வேலண்டைன்ஸ் வாரத்தின் முக்கியமான நாள் என்றால் அது "Teddy Day" தான்.
டெட்டி பியரைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை. ஆனால், ஏன் காதலர் தின வாரத்தில் இந்த டெட்டி டே என்னும் விஷயம் பற்றி உங்களுக்கு தெரியவேண்டாமா? முன்னாள் அமெரிக்க அதிபரான தியோடர் ரோஸ்வெல்ட்டின் (Theodore Roosevelt) நினைவாக ஒரு டெட்டி பியர் வடிவமைக்கப்பட்டது. ஒருமுறை அவருடைய வேட்டைப் பயணத்தின்போது விலங்குகளைக் கொல்வதில்லை என்று அவர் முடிவு செய்ததன் காரணமாகவே இந்த மரியாதை அவருக்கு செய்யப்பட்டது.
வேடிக்கையான உண்மை : நியூயார்க்கைச் சேர்ந்த மிட்டாய் கடை உரிமையாளர் மோரிஸ் மிச்சோம் என்பவர் தான் முதலில் டெட்டி பியரை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினார் என கூறப்படுகிறது.
இந்த நாளில் டெட்டியை பரிசாக ஏன் தரவேண்டும்?
டெட்டிகள் ஒரு உள்ளார்ந்த அழகைக் கொண்டிருக்கிறது, விவரிக்க முடியாத அப்பாவித்தனம் அவற்றில் பொதிந்துள்ளது. இந்த டெட்டி பியர்கள் கள்ளம்கபடமற்றது மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக இதை பிறருக்கு நீங்கள் வழங்கலாம். இந்த டெட்டி பியர்கள் ஒருபோதும் பூக்களைப் போல காய்ந்துவிடாது. உங்கள் காதலை எப்போதும் நினைவூட்டுவதால், பல ஆண்டுகளுக்கு இதை நீங்கள் உங்களுடனே வைத்திருக்க முடியும்.
கலர்களின் முக்கியத்துவம்:
சிவப்பு டெட்டி என்பது, நீங்கள் தெரிவிக்க விரும்பும் அன்பைக் குறிக்கிறது. இது ஒரு உறவில் அன்பின் தீவிரத்தை வலுப்படுத்துவதாகும்.
உங்கள் ப்ரோபோசலை நீங்கள் விரும்பும் நபர் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு ஒரு பிங்க் கலர் டெட்டி பரிசாக கிடைக்கும். அல்லது நீங்கள் விரும்பும் பெண் இந்த பிங்க் கலர் டெட்டியை ஏற்றுக்கொண்டால் உங்கள் ப்ரோபோசல் ஓகே என்று அர்த்தம்.
Valentine Week 2022 : இன்று டெட்டி தினம்... காதலர் தினத்தில் காதலிக்கு டெட்டி பரிசளிக்க என்ன காரணம் தெரியுமா..?
ஒரு ப்ரோபோசலுக்கான வாய்ப்பைக் குறிக்க ஆரஞ்சு டெட்டி பரிசாக வழங்கப்படுகிறது. ஆரஞ்சு என்பது மகிழ்ச்சி, நேர்மறை, நல்ல வைப்ரேஷன் ஆகியவற்றின் நிறமாகும். உங்களுக்கு ஒரு ஆரஞ்சு டெட்டி பரிசாக கிடைத்தால், நீங்கள் சீக்கிரம் காதலுக்குள் விழ போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீல நிற டெட்டியை உங்கள் பார்ட்னர் உங்களுக்கு அளித்தால் அவர் உங்களை பைத்தியமாக காதலிக்கிறார் என்றும் எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இந்த கலர் டெட்டியை பெறுபவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான்.
ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த கிரீன் கலர் டெட்டி பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த 'டெட்டி பியர்' தினத்தில் பலருக்கும் தன் காதலனிடம் இருந்து அல்லது அன்பானவர்களிடமிருந்து டெட்டி கிடைத்திருக்கும் உங்களுக்கு அதுபோல் யாரும் கொடுக்கவில்லை என்றால் கவலையை விடுங்கள் உங்களை நீங்களே நேசிக்க இந்த நாளை தேர்ந்தெடுங்கள். ஒரு டெட்டியை வாங்கி நீங்களே அதை கட்டியணைத்து தூங்குங்கள். இரவு நேரங்களில் தூக்கம் இல்லாத போது டெட்டி தான் நமக்கு உற்ற துணை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.