முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ’அவசர கலாச்சாரம்’.. சமாளிக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..!

உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ’அவசர கலாச்சாரம்’.. சமாளிக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..!

அவசர கலாச்சாரம்

அவசர கலாச்சாரம்

உங்களிடம் கேள்வி கேட்கும் யாருக்கும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே நிதானமுடன் இருக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உறவுகள் என்பது நமக்குக் கிடைத்த வரம். அதை சிதைந்து விடாமல் பாதுகாத்துக்கொள்வது என்பது அனைவரின் தலையாய கடமை. இன்றைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்களால் நம்முடைய பழக்க வழக்கங்களை முற்றிலும் மாறிவிட்டது. இதோடு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் நம்மை பல மாற்றங்களுக்கு உள்ளாக்குவதோடு பல பிரச்சனைகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

இன்றைக்கு இவற்றில் ஒன்றான மற்றும் தற்போது மக்களிடம் பல பிரச்சனைகளுக்காகக் காரணமாக Urgency culture எனப்படும் அவசர கலாச்சாரம் எப்படி இருக்கும்? இதை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்..

உறவுகளில் அவசர கலாச்சாரம் எப்படி இருக்கும்..?

எந்தவொரு உறவையும் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நிதானம் என்பது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எதையும் அவசரமாக செய்ய வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். குறிப்பாக இந்த மனநிலையில் இருக்கும் நபர்கள், மற்றவர்களிடம் உடனடியாக பதில்கள் வர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள்.

மேலும் அவர்களுக்கு மற்றவர்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்பதோடு பதிலளிக்காத போது குற்ற உணர்வு அல்லது பதட்டமான சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் வாழ்க்கையில் சில நேரங்களில் ஆவேசமான முடிவுகளை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்வதால் பல பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது.

உறவுகளில் அவசர கலாச்சாரத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் யாராவது பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலை மற்றும் தொடர்பு பாணி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கின்றனர் மனநல சிகிச்சையாளர்கள். மேலும் நம்மிடம் புதிய தகவல் தொடர்பு முறைகள் பல இருந்தாலும் நாம் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்களிடம் எப்போதும் தெளிவான எல்லைகள் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவசர கலாச்சாரத்தை சமாளிக்க உதவும் நினைவூட்டல்கள்:

உங்கள் நரம்பு மண்டலத்திற்கு தகவல் தொடர்பிலிருந்து இடைவெளி தேவைப்படும்போது விழிப்புடன் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் உங்களிடம் கேள்வி கேட்கும் யாருக்கும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே நிதானமுடன் இருக்கலாம். ஒருவேளை என்ன பதிலாக இருக்கும்? எப்படி தெரிவிக்க வேண்டும்? என்பது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் நீங்கள் எப்படி சுய- ஆற்றுப்படுத்தலாம் என்பதைக் கண்டறியவும். குறிப்பாக உங்கள் மொபைலைப் பயன்படுத்தாமல் இருப்பது,வாக்கிங் செல்வது, நண்பர்களுடன் உங்களது மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்துதல் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

மேலும் எவ்வளவு தொடர்பில் இருக்க வேண்டும் என்பது பற்றிய உங்கள் சொந்த நம்பிக்கைகளை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதோடு எதிர்முனையில் உள்ளவர்களுக்கு பேச நேரம் இல்லை என்று சொன்னால் கோபமடையாமல், சரி ஏதோ வேலை உள்ளது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Also Read : உங்கள் வாழ்க்கையை ரிலாக்ஸ் ஆக்கும் 5 டிப்ஸ்..! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலே வாழ்க்கையில் எந்த உறவுகளிலும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை..

First published:

Tags: Relationship, Relationship Tips