ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மனதளவில் உறுதியற்ற நபருடன் வாழ்வதை விட பிரிவதே நல்லதா..? உளவியல் ஆலோசனை..!

மனதளவில் உறுதியற்ற நபருடன் வாழ்வதை விட பிரிவதே நல்லதா..? உளவியல் ஆலோசனை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசையாசையாக காதலித்து, அழகாக வாழ்ந்து வந்த வாழ்க்கையில், காதலியை வெட்டிக் கூறும் போடும் அளவுக்கு மனநிலை எப்படி ஏற்பட்டது என்பதற்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை! அந்த நபரின் செயல் உலகை கொஞ்சம் திடுக்கிட செய்திருக்கின்றது!

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் மிகவும் அழகான விஷயங்களில் காதலும் ஒன்று. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் எது என்று பலரிடம் கேட்கும் பொழுது தங்கள் காதலைப் பற்றி நிச்சயமாகக் கூறுவார்கள். காதல் எந்த அளவுக்கு அழகானதோ அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் மாறி இருக்கிறது! காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீச்சு, காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கொலை முயற்சி, பிளாக்மெயில் செய்தல் என்று பல செய்திகள் அவ்வபோது பரபரப்பாக பேசப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஸ்திரமான மனநிலை இல்லாத நபருடன் வாழ முடியுமா?

சமீபத்தில் தன்னுடைய காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பல நாட்கள் அதை மறைத்த நபர் பற்றிய செய்தி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆசையாசையாக காதலித்து, அழகாக வாழ்ந்து வந்த வாழ்க்கையில், காதலியை வெட்டிக் கூறும் போடும் அளவுக்கு மனநிலை எப்படி ஏற்பட்டது என்பதற்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை! அந்த நபரின் செயல் உலகை கொஞ்சம் திடுக்கிட செய்திருக்கின்றது! எல்லோருடைய காதலுமே இப்படி இருப்பதில்லை.

அதாவது காதலிக்கும் அனைவருமே கருத்து வேறுபாடு, முரண்பாடு, வாக்குவாதங்கள் என்றால் உடனடியாக இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார்கள். மன உறுதியற்ற, அவ்வப்போது மனநிலையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்படும் நபரை காதலிக்கிறார்கள் அல்லது அவர்களுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்! இப்படிப்பட்ட நபருடன் வாழ முடியுமா?

சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கப்படும்

எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாத ஒரு நபருடன் வாழ்வது, தீவிரமான மனநிலை மாற்றங்கள் இருவரையுமே பாதிக்கும். இருவருக்கு இடையில் ஒரு சின்ன விஷயம் பிடிக்கவில்லை என்றால் கூட பயங்கரமாக கத்தி கலாட்டா செய்வது, கையில் அருகில் இருக்கும் பொருட்களை எடுத்து தூக்கி போட்டு உடைப்பது ஆகியவை காணப்படும். சின்ன விவாதங்கள், கருத்து வேறுபாடு இருந்தால் கூட அது பெரிய போராக மாறும் உறவுகள் கூட இருக்கின்றன. இது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி இப்படி ஒரு நபருடன் வாழ வேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கிறது! சரி இந்த நபருடன் வாழ்க்கை நடத்த முடியாது, ஆனால் விலகலாம் என்றாலும் முடியாது என்று பல பெண்களும் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையை எதிர்கொண்ட ஒரு பெண்ணின் அனுபவம்

கொஞ்சம் கூட மன முதிர்ச்சி இல்லாத ஒரு நபருடன் வாழ்வது என்பது கொஞ்சம் கடினமானதுதான்! எப்போது பார்த்தாலும் கத்திக்கொண்டே இருப்பது, சண்டை போட்டுக் கொண்டே இருப்பது என்பது என்னை தீவிரமாக பாதித்தது. ஆனால், அதற்கு முன்பு நாங்கள் madly in love லவ் என்று சொல்லும் அளவுக்கு, சுற்றி என்ன நடக்கின்றது என்று கூட தெரியாத அளவுக்கு, தீவிரமான காதலில் இருந்தோம்! அவரைப் பற்றி எனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு நபர் என்பது எனக்கு தெரியவே தெரியாது. அது என்னையே பாதிக்கும் என்பதை நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

எங்கள் காதலுக்கு, எங்கள் பெற்றோர்கள் சம்மதம் கொடுத்து விட்டார்கள். அதேபோல, எங்கள் காதல் ரொம்ப ஸ்பெஷல், எதுவும் எங்களை பிடிக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே உடனடியாக நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திரைப்படங்களில் வருவது போல, எங்களுடைய வாழ்க்கை மிக அழகாக தான் தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மாறிவிட்டது. 99% ஒரே ஒரு குறையை கூட என் காதல் கணவரிடம் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மீதம் இருக்கும் அந்த ஒரு சதவிகிதத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! அவ்வளவு மோசமான நபராக ராட்சசனாக இருந்திருக்கிறார்.

அந்த 1% மோசமாக நடந்து கொள்ளும் போது, அவர் யார் என்பதையே என்னால் கண்டறிய முடியாத அளவுக்கு தீவிரமானதாக இருந்துள்ளது. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி என்மேல் எறிவது, தகாத வார்த்தைகளால் அசிங்கமாக திட்டுவது, கீழே தள்ளி விடுவது என்று பல இன்னல்களை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் சில நிமிடங்களிலேயே, அமைதியான பிறகு என்னிடம் வந்து கெஞ்சி, என் காலில் விழுந்து தான் செய்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். கண்ணீர் கெஞ்சும் பொழுது நானும் மன்னித்து இருக்கிறேன்.

இவ்வாறு மாறி மாறி நடந்து கொள்வது எனக்கு பழக்கமாகி விட்டது. ஒருமுறை, மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம் என்று கூறியதற்கும் சரி என்று சொன்னார். எனவே, ஒரே ஒரு பிரச்சனை, அதற்கு ஏன் பிரிந்து செல்ல வேண்டும் என்ற யோசனை நியாயமாக இருந்தது. அவருக்கு மன நல பிரச்சனைகள் இருந்தாலும், அது எனக்கு ஆபத்தாக இருந்தாலும் நான் பிரிந்து செல்ல விரும்பவில்லை.

Also Read : விருப்பமில்லாத போது டேட்டிங்கை நாசுக்காக நிராகரிப்பதற்கான 4 வழிகள்.!

பிரிவு என்ற முடிவை எடுக்க முடியவில்லை

இதற்கு முக்கியமான காரணம், நீங்கள் நேசித்தவரை உங்களால் விலகிச் செல்லவே முடியாது. அவரால் உங்களுக்கு ஆபத்து நேர்ந்தாலும், அவருடைய செயல்கள் உங்களுக்கு பிரச்சனையாக மாறினாலும், பிரிவு என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க மாட்டீர்கள்! இந்தப் பெண் ஒரு மோசமான நிலையிலும் தன்னுடைய கணவருக்கு தன்னுடைய உதவி தேவை என்பதை உணர்ந்துள்ளார். திருமணம் என்பது நல்லவை கெட்டவை என்று இரண்டும் சேர்ந்ததுதான். எனவே அவரின் குறைகளை ஏற்றுக் கொண்டு, விவாகரத்து, பிரிவு என்ற முடிவை இவர் எடுக்கவில்லை. எவ்வளவு தான் சமாதானங்கள் கூறிக்கொண்டு இருந்தாலும் மனநல பிரச்சனைகள் இருக்கும் ஒரு நபருடன் வாழ்வது என்பது மிக மிகக் கடினமானது! இவை எல்லாமே, அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்ற ஒரு விஷயத்தில் அடங்கி விடுகிறது

Published by:Josephine Aarthy
First published:

Tags: Relationship Tips, Toxic Relationship