ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் பார்ட்னர் மரியாதை குறைவாக நடத்துவதாக உணர்கிறீர்களா..? நீங்கள் செய்ய வேண்டியவை..!

உங்கள் பார்ட்னர் மரியாதை குறைவாக நடத்துவதாக உணர்கிறீர்களா..? நீங்கள் செய்ய வேண்டியவை..!

உறவுமுறை

உறவுமுறை

உங்கள் துணையின் மீது உங்களுக்குள்ள மதிப்பு குறைந்தாலோ அல்லது உங்கள் மீது அவருக்குள்ள மதிப்பு குறைந்தாலோ கண்டிப்பாக அந்த வாழ்க்கை இனிமையாக இருக்காது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையே பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அவை எல்லாவற்றையும் சரியான புரிதல் மூலம் கடந்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை இருவரும் வாழ முடியும். ஆனால் சில பிரச்சனைகளுக்கு தீர்வே இல்லை அவன் என்ன முயற்சி செய்தாலும் சரி செய்ய முடியாதவையாகவே இருக்கும். அதில் முக்கியமான ஒன்று பரஸ்பரம் ஏற்படும் மரியாதை குறைவு. உங்கள் துணையின் மீது உங்களுக்குள்ள மதிப்பு குறைந்தாலோ அல்லது உங்கள் மீது அவருக்குள்ள மதிப்பு குறைந்தாலோ கண்டிப்பாக அந்த வாழ்க்கை இனிமையாக இருக்காது.

அது மட்டுமல்லாமல் பல திட்டுகளையும், சண்டை சச்சரவுகளையும் உண்டாக்கி திருமண வாழ்க்கையே ஒரு கெட்ட கனவாக மாற்றி விடும் அபாயம் உள்ளது. எனவே உங்கள் துணை உங்களை மரியாதை குறைவாக நடத்துவதாக நீங்கள் உணர்ந்தால் அதை எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம்.

தெளிவான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள் :

காதல் வாழ்க்கையோ அல்லது திருமண வாழ்க்கையோ மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் இருவரும் தங்களது எல்லை என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும். எவ்வளவு நெருக்கமாக கணவன் மனைவியாகவே இருந்தாலும் அவர்களுக்குள்ளும் சில எல்லைகள் இடைவெளிகள் தேவை. இருவரில் எவரேனும் அந்த எல்லை கோட்டை தாண்டும் போது உடனடியாக சுட்டிக்காட்டுங்கள்.

கவுன்சிலிங் செல்லலாம்:

சில சமயங்களில் இது போன்ற மரியாதை குறைவோ அல்லது வேறு ஏதேனும் தீர்க்க முடியாத மனக்கசப்பு ஏற்படுகின்ற வேளையில் வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில் கவுன்சிலிங் செல்லலாம். இதற்கு முதலில் இருவரும் தங்களது குறைகளை ஏற்றுக்கொண்டு அதை சரி செய்து வாழ்வதற்கு ஏற்ற மனநிலையில் இருக்க வேண்டும். விவாகரத்து பெற நினைக்கும் தம்பதிகள் கூட கடைசி முயற்சியாக இந்த கவுன்சிலிங்கை முயற்சியை செய்து பார்க்கலாம்.

Also Read : அச்சோ மிஸ் பண்ணிட்டேனே என உங்க ‘ex’ வருத்தப்படணுமா..? இதோ உங்களுக்கான சைக்கலாஜிகல் டிப்ஸ்..!

அவர்களது நடத்தை உங்களை எப்படி பாதித்தது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்:

உங்கள் துணையின் வார்த்தைகளோ அல்லது நடத்தையோ உங்களை சொல்ல முடியாத அளவிற்கு பாதித்தால் அதனை வெளிப்படையாகவும், தெளிவாகவும் அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அவர்களது வார்த்தையை அல்லது நடத்தை உங்களை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை புரியும்படி எடுத்து கூறுங்கள். இது போன்ற ஒரு தெளிவான உரையாடலுக்கு பின் உங்கள் துணையிடம் பெரும்பாலும் நீங்கள் சில நல்ல மாற்றங்களை காண முடியும். அவ்வாறு மாற்றங்கள் தெரிந்தால் அது நல்ல அறிகுறியாகவே இருக்கும். மேலும் நீங்களும் அவர்கள் செய்த குற்றத்தை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் துணையினை உற்சாகப்படுத்துங்கள்:

உங்கள் பார்ட்னர் செய்யும் சிறிய சிறிய செயல்களையும் பாராட்ட தவறாதீர்கள். இது அவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற ஒரு நிம்மதியான உணர்வை கொடுக்கும். மேலும் இப்படி செய்யும்போது இருவருக்கும் இடையில் மரியாதை குறைவு ஏற்படுவது என்பது முற்றிலும் இல்லாமல் போய்விடும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship Tips