Home /News /lifestyle /

பெருந்தொற்று காலத்தில் தம்பதிகள் இடையே ஏற்படும் உறவு சிக்கல்கள்… எதிர்கொள்வது எப்படி?

பெருந்தொற்று காலத்தில் தம்பதிகள் இடையே ஏற்படும் உறவு சிக்கல்கள்… எதிர்கொள்வது எப்படி?

பெருந்தொற்று காலத்தில் நிகழ்காலத்தை கடந்து செல்வது பற்றி மட்டுமே பல குடும்பங்கள் யோசித்து செயல்பட்டு வருகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் நிகழ்காலத்தை கடந்து செல்வது பற்றி மட்டுமே பல குடும்பங்கள் யோசித்து செயல்பட்டு வருகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் நிகழ்காலத்தை கடந்து செல்வது பற்றி மட்டுமே பல குடும்பங்கள் யோசித்து செயல்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நம்மை முடக்கி வரும் கொரோனா தொற்று காரணமாக அவ்வப்போது நமது வாழ்க்கை 4 சுவர்களுக்குளேயே முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது. தொற்று பரவலை குறைப்பதற்காக போடப்படும் ஊரடங்குகள் சமயத்தில் தம்பதியரிடையே அன்பையும் சேர்த்து குறைத்து விடுகிறது. பல ஆண்டுகளாக மழலை செல்வம் இல்லாமல் ஏங்கிய பலருக்கு அந்த பரிசை கொடுத்த அதே நேரத்தில், உலகம் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரிக்கவும் இந்த ஊரடங்கு காரணமாக அமைந்தது.

வெளியே செல்ல முடியாத காரணத்தால் 24 மணிநேரமும் வீட்டிலேயே இருப்பதன் விளைவாக ஏராளமான தம்பதிகளிடையே பிரச்சனைகள் வெடித்தது. இதன் காரணமாகவே ஊரடங்கில் குடும்ப வன்முறை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. தொற்று நோய் காலத்தில் வீட்டிலேயே இருக்க நேரிடுவதால் தம்பதிகள் சந்திக்கும் முக்கிய உறவு சிக்கல்கள் குறித்து பார்க்கலாம்.

வழக்கத்திற்கு மாறான சண்டைகள்:

இதற்கு முன் எப்போதாவது சண்டையிட்டு கொண்ட ஏராளமான தம்பதிகள் எதிர்பாராத விதமாக, ஊரடங்கு நேரத்தில் முன்பை விட அதிகமாக சண்டையிட்டு கொள்கின்றனர். தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஏதாவது பெரிய முடிவுகளை எடுப்பது குறிப்பாக இது முதல் தடவையாக இருக்கும் போது தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சண்டையில் போய் முடிகிறது. இது நல்லதல்ல.தனிமை:

தம்பதியர் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசித்தாலும், துணையுடன் நேரத்தை செலவிட்டாலும் கூட அவர்களுக்கென்று தனிமையான சில மணிநேரங்கள் அல்லது சில நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதிலும் ஊரடங்கு நேரத்தில் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் கொஞ்ச நேரமாவது தனிமை தேவைப்படுவது இயல்பான ஒன்று. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொள்ள தனிமை கிடைக்காவிட்டால் அது ஒருவருக்கு எரிச்சலையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும்.

பிறரின் அனுமானங்களால் ஏற்படும் கோபம்:

துணையுடன் இருக்கும் ஒருவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை மக்கள் அனுமானம் செய்யும் போது அவருக்கு கோபம் ஏற்படுகிறது. ஒரு ஆணோ, பெண்ணோ உறவு சிக்கலில் இருக்கும் நேரத்தில் நல்ல கம்பெனி கொடுக்க சிறந்த பார்ட்னர் கிடைத்திருப்பதால் தனிமையை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அவரை பற்றி பிறர் அனுமானித்து அதை அவரிடமே வெளிப்படுத்தும் போது வெறுப்பை ஏற்படுத்தி தம்பதியரிடையே சண்டை மேலும் பெரிதாகும் நிலை ஏற்படும்.

பிரிவு கட்டாயம் :

தொற்று நோய்க்கு முன் தம்பதியரிடையே கருத்தொற்றுமை இல்லாதிருந்திருந்தால் ஊரடங்கு காரணமாக அவர்களிடையேயான உறவு சிக்கல் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஒருவேளை ஊரடங்கு காரணமாக தம்பதியரிடையே இதுவரை இல்லாத அளவு சண்டை அதிகரித்திருந்தால் அது பிரேக்அப்பிற்கு வழிவகுத்து விடும். தொற்று நேரத்தில் பிரேக்அப் செய்யாமல் பொறுமை காத்து நிலைமை சீரானவுடன் பிரியும் முடிவெடுக்க சிலர் தயங்கமாட்டார்கள்.

எதிர்கால திட்டம் :

கொடூர தொற்று வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள நிலையில், நிச்சயமற்ற நிலை காரணமாக பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. நிகழ்காலத்தை கடந்து செல்வது பற்றி மட்டுமே யோசித்து செயல்பட்டு வருகின்றனர். நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட பல குடும்ப சுபநிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், சுபநிகழ்வுகளை எப்போது திட்டமிட முடியும் என்று பலருக்கு தெரியாது.

பாராட்டுவது அவசியம் :

இந்த ஊரடங்கு காரணமாக பலர் வீடு, குடும்பம், உறவு அல்லது தொழில் ஆகியவற்றில் இதுவரை வகித்து வந்த பங்கின் சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக பெண்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளையும் செய்து கொண்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு 3 வேளையும் தவறாமல் சமைத்து தருவது. இப்படி பார்ட்னர் பன்மடங்கு உழைப்பை வெளிக்காட்டும் போது அவரை உற்சாகப்படுத்துவது அவசியம். இல்லையென்றால் மாடாய் உழைத்தும் பலனில்லை என்ற வெறுப்பில் தம்பதியரிடையே சண்டை மூளும். எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ள வேண்டும்.
Published by:Archana R
First published:

Tags: Clashes, Couples, Covid-19, Relationship

அடுத்த செய்தி