Home /News /lifestyle /

நீங்கள் காதலித்த ஒருவரை மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்!

நீங்கள் காதலித்த ஒருவரை மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்!

காதல்

காதல்

உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டால் உடனே உடைந்து விடாதீர்கள். மனித உணர்களில் ஏமாற்றமும் ஒன்று தான் என்று அதை கடக்க முயற்சியுங்கள்.

மனித உறவுகளில் மிக சிக்கலான உறவு என்றால் ஆணும் பெண்ணும் காதலில் இருப்பது தான். ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டுமென்றால் முதலில் இருவரும் நன்றாக பழக வேண்டும். அப்போது தான் இருவரை பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இப்படி எந்தவொரு முயற்சியும் இல்லாமல் காதல் உறவு நீண்ட நாளுக்கு நீடிக்காது. அதுவும் காதலில் உள்ள இருவருக்குள்ளும் விரக்தி ஏற்பட்டு பிரிந்து விட்டால் இன்னும் கஷ்ட்டமாகி விடும்.

அந்த வகையில், தான் காதலித்த நபரை மறப்பது மிக கடினமான ஒன்றாகும். எதை செய்தாலும் அந்த ஒருவரின் நினைவுகள் மட்டுமே உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட மனநிலையில் இருந்து உங்களை மீட்க இந்த 7 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

நேரம் கொடுங்கள் :

உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டால் உடனே உடைந்து விடாதீர்கள். மனித உணர்களில் ஏமாற்றமும் ஒன்று தான் என்று அதை கடக்க முயற்சியுங்கள். பல நாட்கள் நெருக்கமாக பழகிய ஒருவரை உடனே மறக்க முடியாது தான். எனவே உங்களின் மன அழுத்தத்தை கண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு வடிவிலோ வெளிப்படுத்தி விடுங்கள். காதல் முறிவை கடக்க சற்று காலம் எடுத்து கொள்வது நல்லது.

ஏற்று கொள்ளுதல் :

இவ்வளவு நாளாக அதிகம் நேசித்த நபர் தற்போது தன்னுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துவதை விடவும், அவர் தன்னை விட்டு சென்று விட்டார் என்கிற உண்மையை ஏற்று கொள்ளுங்கள். அந்த நபரை மறக்க வேண்டுமென்றால் இந்த உண்மையை முதலில் நீங்கள் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்.



சமூக வலைதளங்கள் :

காதல் முறிவு ஏற்பட்டவுடன் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுவதை தவிர்த்து விடுங்கள். இது உங்களை மேலும் காயப்படுத்தும் வகையிலும், அதிக மன குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே இவற்றை தவிர்த்து, உங்கள் அருகில் உள்ளவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள்.

உடமைகள் :

ஒருவரை மறக்க வேண்டுமென்றால் முதலில் அவரை நினைவுபடுத்தும் பொருட்கள் உங்கள் அருகில் இருக்க கூடாது. எனவே நீங்கள் மறக்க வேண்டுமென்று நினைக்கும் நபரின் பொருட்கள் அல்லது நினைவுகள் தரும் உடைமைகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அவற்றை தூக்கி போட்டு விடுங்கள். இல்லையென்றால் இதனால் கசப்பான நினைவுகள் மட்டுமே உங்களுக்கு இருக்கும்.

திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா..? நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

மகிழ்ச்சியான நேரம் :

இதுபோன்ற கஷ்ட்டமான காலங்களை கடக்க உங்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழியுங்கள். மேலும் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து பழங்குங்கள். இப்படி செய்வதால் நீங்கள் இழந்த மகிழ்ச்சியை திரும்ப பெற முடியும்.



மன்னிப்பு :

உங்களை விட்டு பிரிந்தவர் மீதுள்ள கோபத்தை நீக்கி அவரை மன்னித்து விடுங்கள். ஆனால் அவரை மீண்டும் நம்ப வேண்டாம். மேலும் அந்த நபர் உங்களை விட்டு சென்றதை பாசிட்டிவாக எடுத்து கொண்டு உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லி கொள்ளுங்கள்.

புது உறவு :

ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும் என்கிற தவறான கருத்தை விட்டுவிட்டு உங்களுக்கான புது துணையை தேர்ந்தெடுங்கள். மேலும் இந்த புது உறவை தொடங்க எந்த விதத்திலும் தயக்கம் காட்டாதீர்கள். இப்படி செய்வதால் இழந்த நபரின் நினைவுகளை மறைந்து விட்டு, உங்களுக்கான புது வாழ்க்கையை தொடங்க முடியும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakup, Love breakup, Relationship Tips

அடுத்த செய்தி