• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கள்ள உறவு மனைவிக்கு தெரிந்துவிட்டதா? சமாதனப்படுத்துவது எப்படி?

கள்ள உறவு மனைவிக்கு தெரிந்துவிட்டதா? சமாதனப்படுத்துவது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

நீங்கள் ஒருவேளை தவறு செய்துவிட்டால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக கூறிவிடுவது மட்டுமே நல்லது.

  • Share this:
உங்களை ஆழமாக நேசிக்கும் ஒருவருக்கு துரோகம் அல்லது ஏமாற்றத்தை கொடுப்பது என்பது உணர்ச்சிகளின் மீது நடத்தும் படுகொலையாகும். நீங்களே உலகம், நம்பிக்கை என நினைத்து வாழும் சுத்தமான மனதுக்குள் சொருகப்படும் ஈட்டி. அப்படியான ஒரு செயலை செய்தபிறகு உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை முன்பே உணர்ந்துகொள்வது சாலச் சிறந்தது என்றாலும் பலருக்கும் தவறுக்கு பிறகே ஞானக் கண் திறக்கிறது.

நீங்கள் ஒருவேளை தவறு செய்துவிட்டால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக கூறிவிடுவது மட்டுமே நல்லது. அவர்களாக தெரிந்து கொண்டால் பல சிக்கல்களுக்கும், அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்ச்சிகளின் வலையில் சிக்கிக்கொள்ளவும் வழிவகுத்துவிடும். அதனால், நீங்கள் தவறு செய்த தவறை மனைவியிடம் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்த இங்கே இருக்கும் டிப்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள்.

நேரம் மற்றும் இடம்

நீங்கள் இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடுவதற்கான சரியான ஒரு இடத்தையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கலந்துரையாடலுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதால், வீட்டைக் காட்டிலும் பொதுவான இடமாக இருப்பது நல்லது. ஏற்கனவே உங்கள் மனைவி கோபமாக அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், அந்த நேரத்தில் வெளியில் செல்லும் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம். அவர்களின் மனநிலை அறிந்து வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.

வார்த்தைகளில் நேர்மை

உங்கள் மனைவியிடம் கேட்கப்போகும் மன்னிப்புக்கான எதிர்வினை, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. உங்கள் முயற்சிக்கு பலன் கிடைப்பதும், தோல்வி அடைவதும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. பொருத்தமில்லாத வார்த்தைகள், உணர்ச்சியை கெடுக்கும் அல்லது கோபத்தை தூண்டும் வரிகளை பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் மீது மேலும் கோபத்தையும், இருவருக்கும் இடையிலான மனக்கசப்பையும் அதிகப்படுத்தும். முன்கூட்டியே தயாராகிக்கொள்ளுங்கள்.

தற்காத்தல் கூடாது

உங்கள் தவறுகளை நியாயப்படுத்தி, அதற்கு ஒரு புதிய கோணத்தில் கதை சொல்ல வேண்டாம். நீங்கள் தவறு செய்ததை நேர்மையாக ஒத்துக்கொள்ளுங்கள். அதனைவிடுத்து, மனைவி என்ன செய்திருந்தால்? உங்களை தவறில் காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலையில் பேச்சு இருக்கக்கூடாது. தவறு செய்ததற்கான காரணத்தை மட்டும் கூறிவிடுங்கள். அவரால் நீங்கள் தவறு செய்தது போன்றதொரு பார்வையை முன்வைத்தால், இருவருக்கும் இடையில் மேலும் சண்டை பெரிதாகும். ஒருபோதும் அவர்களை குற்றம் சொல்ல வேண்டாம். தடிமனான குரலில் உரத்து பேசாமல், உங்கள் உடல் மொழி அனைத்தும் தவறுகளை ஒப்புக்கொள்ளும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும்.

உண்மையை பேசுதல்

தவறை உணர்ந்து நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்பும் நீங்கள், உண்மையை மட்டும் பேச வேண்டும். உங்களால், மனைவிக்கு ஏற்பட்ட மனக்கசப்புக்கு மிகவும் கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கேள்விகள் உங்களின் சுயமரியாதையை தாக்கும் வகையில் கூட இருக்கும். ஆனால், நீங்கள் கொடுக்கும் உண்மையான பதில்கள் ஒவ்வொன்றும் அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும். இனி தவறு நடக்காது என்பதற்கான உங்களுடைய ஆழமான வார்த்தைகள், மனைவியை யோசிக்க வைக்க வேண்டும். சிறிய தகவல்களைகூட மறைக்காமல் மனைவியிடம் கூறிவிட வேண்டும்.

கள்ள உறவு சீக்ரெட்ஸ்

மனைவியிடம் திருந்தி வாழ்வதற்காக செல்லும்போது ஏற்படும் பிரச்சனையில், உங்களின் கள்ள உறவைப் பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அதாவது உடலுறவு உள்ளிட்ட விஷயங்களை கேட்பார்கள். கள்ள உறவு தொடங்கியது முதல் தற்போது வரை நிகழ்ந்த தவறுகளை வெளிப்படையாக கூறும் உங்களால், சீக்ரெட்ஸ்களை சொல்ல முடியாது. ஒருவேளை அதனை உங்கள் மனைவி தெரிந்து கொள்ள விரும்பினால், சொல்வதற்கு வெட்கமாகவோ, அவமானமாகவோ உங்களுக்கு இருக்கக்கூடும். அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

மனைவியை வார்த்தைகளை கவனித்தல்

நீங்கள் செய்திருக்கும் இந்த துரோகத்தால் உங்கள் மனைவி மிகவும் காயம்பட்டிருப்பார். கோபத்தில் வார்த்தைகளை அம்புகளாக தொடுக்கும் அவருக்கும் ஏதாவதொரு இடத்தில் உங்கள் மீதான அன்பு தொடுத்துக்கொண்டு இருக்கும். கோபத்தின் உக்கிரம் இருக்கும்போது அவை வெளிப்படாது. அந்த நேரத்தில் அவர்கள் பேசுவதற்கு பதில் பேசாமல், நிதானமான கவனித்துகொண்டே இருங்கள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவார்கள். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

இணைந்து வாழ்வதற்கான வழி

இணைந்து வாழ்வதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்தாலும், காயம்பட்ட உறவு உடனடியாக சரியாக வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு நாளும் உங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பழைய உறவை மீட்டுடெடுக்கும் வகையில் இருக்க வேண்டும். உண்மையாக நீங்கள் செய்யும் சில செயல்கள் மனைவியின் ஆழ்மனதை திறக்கும். இனிமையான வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதற்கு கஷ்டப்படுவதில் தப்பில்லை. அதில் ஆனந்தம் நிறைந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: