• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அம்மா பையனாக இருக்கும் கணவரை எப்படி கையாளுவது..? மனைவிகளுக்கான மந்திரம் இதோ...!

அம்மா பையனாக இருக்கும் கணவரை எப்படி கையாளுவது..? மனைவிகளுக்கான மந்திரம் இதோ...!

சில பெண்கள், அம்மாவின் பையனாக இருப்பவரை திருமணம் செய்து கொள்வதை விரும்புவதில்லை. காரணம், எதிர்கால வாழ்க்கையில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் அல்லது தாயின் சொல்படி நடப்பார் என அஞ்சுகின்றனர். உண்மையில், பெண்கள் அப்படி அச்சம் கொள்ளத்தேவையில்லை. அம்மாவின் பையனாக இருப்பவர்கள் உங்கள் மீதும் அதிக அன்பும், பாசமும் கொண்டிருப்பார்கள். அதேசமயம், முடிவெடுப்பது, உங்களின் தேவைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உங்கள் இருவருக்குள் பிரச்சனைகளும் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்தநேரத்தில் நீங்கள் ஒருசில டிப்ஸ்களை கடைபிடித்தால் அம்மாவின் பையனாக இருந்தாலும், உங்களுக்குரிய முக்கியத்துவத்தை கண்டிபாக கொடுப்பார்.

முடிவெடுப்பது, உங்களின் தேவைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உங்கள் இருவருக்குள் பிரச்சனைகளும் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

  • Share this:
சில பெண்கள், அம்மாவின் பையனாக இருப்பவரை திருமணம் செய்து கொள்வதை விரும்புவதில்லை. காரணம், எதிர்கால வாழ்க்கையில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் அல்லது தாயின் சொல்படி நடப்பார் என அஞ்சுகின்றனர். உண்மையில், பெண்கள் அப்படி அச்சம் கொள்ளத்தேவையில்லை. அம்மாவின் பையனாக இருப்பவர்கள் உங்கள் மீதும் அதிக அன்பும், பாசமும் கொண்டிருப்பார்கள். அதேசமயம், முடிவெடுப்பது, உங்களின் தேவைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உங்கள் இருவருக்குள் பிரச்சனைகளும் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்தநேரத்தில் நீங்கள் ஒருசில டிப்ஸ்களை கடைபிடித்தால் அம்மாவின் பையனாக இருந்தாலும், உங்களுக்குரிய முக்கியத்துவத்தை கண்டிபாக கொடுப்பார்.

எல்லையை தீர்மானித்தல் : உங்கள் கணவர் அம்மா பிள்ளையாக இருந்தாலும், உங்கள் இருவருக்கும் இடையிலான உறவில் முடிவெடுக்கும்போது, அவரே முடிவெடுக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறிவிடுங்கள். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாடேன் என்பதை உங்களின் கணவருக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும். அதீத அன்பால் உங்களை அவர் சமாளிக்க முயற்சி செய்வார். ஆனால், அதனை அனுமதிக்காதீர்கள். நமக்கான முடிவை நீங்கள் மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர, மற்றவர்களை முடிவு எடுக்க அனுமதிக்கக்கூடாது என்பதை கண்டிப்புடன் கூறிவிடுங்கள்.

வசிப்பிடத்தை மாற்றுதல் : உங்கள் கணவர் தாயின் செல்லப்பிள்ளையாக இருக்கும்போது, நீங்கள் தாயுடன் வசிப்பது சிறந்த தேர்வாக இருக்காது. அவர்களுடைய அன்பும், பாசமும் உங்களுக்கு பளுவாக அமையும். ஒருவேளை நீங்கள் இருவரும் சண்டையிட்டுக்கொள்ளும்பட்சத்தில், கணவரின் தாய் உங்களுடன் இருந்தால், உங்களை விட தாயின் முடிவுகளுக்கும், வார்த்தைகளுக்கு மட்டுமே அவர் கட்டுப்படுவார். அது உங்கள் இருவருக்குமான திருமண வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்காது என்பதால், தனியாக சென்று வசிப்பது நல்லது.

மாமியாருடன் மோதலை தவிர்க்கவும் : உங்கள் மாமியாருடன் மோதல் போக்கை கடைபிடிக்காதீர்கள். உங்களுக்கான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், அதனை உங்கள் கணவரிடம் விவாதித்துக்கொளுங்கள். நீண்ட வாக்குவாதங்களை முடிந்தளவுக்கு தவிர்த்துவிடுங்கள். சூழல் சரியாக இருக்கும்போது உங்களுக்கான விருப்பங்களை கணவரிடம் தெரிவித்து பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தனியாக வசிக்கும்போது, வாரத்தில் ஒருதடைவையாவது மாமியார் வீட்டிற்கு சென்று அவரை கவனித்து வாருங்கள். அப்போது, இருவருக்கும் இடையிலான உறவு வலுப்படும்.

விருப்பங்களை தேர்வு செய்தல் : உங்கள் கணவருக்கான முடிவுகளை திருமணம் வரை அவரின் தாய் எடுத்திருக்கக் கூடும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சி உங்கள் கணவருக்கு இருக்கிறது என்பதை புரியவையுங்கள். ஏற்கனவே கூறியதுபோல், உங்களுக்கான முடிவுகளை நீங்கள் இருவர் மட்டுமே விவாதித்து எடுக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை இருவருக்கும் இடையில் சண்டை வந்தால், அவரின் தாய் குறித்து ஒரு வார்த்தை கூட பேசிவிடாதீர்கள். அவ்வாறு பேசினீர்கள் என்றால், உங்களின் திருமண வாழ்க்கை அஸ்தமனத்திற்கு கூட செல்ல வாய்ப்புகள் உண்டு. உங்கள் இருவரைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.

விலகலை கடைபிடிக்க வேண்டாம் : உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எவ்வளவு தொலைவில் வசித்தாலும் கணவரின் வாழ்க்கையில் அவரின் தாய் எப்போதும் முக்கியமான இடத்தில் இருந்து கொண்டே தான் இருப்பார். அதனை நீங்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அதனால், முடிந்தளவுக்கு மாமியாருடன் நல்ல உறவை தொடக்கத்தில் இருந்தே ஏற்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. அவ்வப்போது, இருவரும் வெளியில் சென்று மதியம் அல்லது இரவு உணவுகளை ஒன்றாக அருந்துங்கள். அது, இருவருகும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: