அலுவலகத்தில் கவனச் சிதறல்களால் வேலையில் தடங்கல் ஏற்படுகிறதா...? அதற்குக் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்...!

கவனச்சிதறலுக்கு சுற்றுச்சூழலோ, சமூக வலைதளங்களோ, செல்ஃபோன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளோ காரணம் இல்லை.

news18
Updated: June 28, 2019, 5:11 PM IST
அலுவலகத்தில் கவனச் சிதறல்களால் வேலையில் தடங்கல் ஏற்படுகிறதா...? அதற்குக் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்...!
ஆபீஸ்
news18
Updated: June 28, 2019, 5:11 PM IST
நீங்கள் பணியிடத்தில் வேலைகளுக்கு நடுவே கவனச் சிதறல்களா பணிகளை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் அவஸ்தைப் படுகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த பிரச்னை உங்களுக்கு மட்டுமல்ல. பலருக்கும் இருப்பதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

கவனச் சிதறல் என்றால் உடனே செல்ஃபோன் அல்லது சமூக வலைதளங்களைக் குறைக் கூறுவோம். ஆனால், இந்த ஆய்வில் அவை நம்மை கவனச் சிதறலுக்கு உட்படுத்துவதில்லை என்பது அம்பலமாகிறது.

ஆம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நம்முடைய மனம்தான் உண்மையான எதிரி என்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலோ, தொழில்நுட்பக் கருவிகளோ காரணம் இல்லை.
அதாவது அந்த ஆய்வில் இயற்கையிலேயே, நம்முடைய மனமானது கவனச் சிதறல்களை விரும்பும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

2,250 இளைஞர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர். அதில் அவர்கள் விழித்திருக்கும் 47 மணி நேரம் வரை மனது எதையாவது தேடி அலைந்து திரிகிறது என்றுக் கூறியுள்ளனர். அதேபோல் மனிதன் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நினைக்கிறார்கள் எனில் அதில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதில்லை. அதைத் தவிர்த்து அதற்கு கொஞ்சமும் பொருந்தாத மற்ற விஷயத்தில் கவனத்தை செலுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அது அவர்களுக்கே தெரியாமல் நிகழ்கிறது. இதை ஒருபோதும் அவர்கள் உணர்வதும் கிடையாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Loading...இதற்கு நம்முடைய உணர்வுகளோ அல்லது நாம் செய்யும் வேலைகளோ பொறுப்பாக முடியாது. குறிப்பாக மகிழ்ச்சியாக இல்லாத சமயத்தில்தான் கூடுதலாக கவனச் சிதறல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதற்கு சிறந்த வழி உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான். அதற்கு நீங்கள் உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்கத் துவங்குங்கள். உங்கள் நோக்கத்தை ஒரு காகிதத்தில் எழுதி வைத்து அதை கண்முன்னே வையுங்கள். அதை பார்க்கும்போதெல்லாம் கவனம் ஒருநிலைப்படும். குறைந்தது 15 நிமிடங்கள் ஒரு விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும் என குறிக்கோளோடு மனதை பழக்கப்படுத்துங்கள்.

இவ்வாறு செய்தால்தான் மனது உங்கள் சொல் பேச்சை கேட்கும். இல்லையெனில் மனம் போன போக்கில்தான் கால்களும் போகும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...