உங்கள் சக ஊழியர்களிடம் நீங்கள் ஒரு போதும் செய்யக்கூடாத விஷயங்கள்..!

அலுவலகம்

நேர்மறை விஷயங்கள் இருந்தாலும் கூட அலுவலக நட்பை முறையாக பராமரிக்காவிட்டால் பல எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

  • Share this:
பள்ளி பருவம், கல்லூரி பருவம் என நம் வாழ்வில் அந்தந்த பருவங்களை மகிழ்ச்சியாக கடக்க காரணமாக இருப்பது நண்பர்கள் தான். ஒரு சிலர் எவ்வளவு வயதானாலும் பள்ளிப்பருவ நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், அதே போல ஒரு சிலர் கல்லூரி நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க வேலை பார்க்கும் நேரங்களில், பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நிச்சயமாக நட்பாக, இணக்கமாக இருப்பது மிகவும் அவசியம். அலுவலகம் வேலை செய்யும் பெரும்பாலான மக்களுக்கு இரண்டாவது வீடு போன்றது.

சக ஊழியர்களுடன் நீங்கள் நட்பாக பழகுவது ஒரு அழகான விஷயம். இது உங்களது பணியிட உற்பத்தி திறனை அதிகரிக்க செய்கிறது. பணிகளில் மேலும் சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது. தவிர உங்கள் அலுவலக வேலை நாட்களின் எண்ணிக்கையை பராமரிக்கிறது. ஏனென்றால் எப்பேர்ப்பட்ட நெருக்கடியான, துன்பமான காலங்களிலும் நண்பர்கள் துணை இருந்தால் அதை எளிதாக சமாளிக்கலாம். அந்த வகையில் நெருக்கடியான நேரங்களில் கூட அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்காமல் செல்ல சக ஊழியர்களுடனான நட்பு உதவும்.

நேர்மறை விஷயங்கள் இருந்தாலும் கூட அலுவலக நட்பை முறையாக பராமரிக்காவிட்டால் பல எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் சகஊழியர்களுடன் நட்பு பாராட்டும் போது நீங்கள் மிகவும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டாம் வீடு போல நீங்கள் அலுவலகத்தை நினைத்தாலும் பேசும் வார்த்தைகளிலும், நடந்து கொள்ளும் முறையிலும், செய்யும் செயல்களிலும் எப்போதும் ஒரு கவனம் மற்றும் நிதானம் வேண்டும். இல்லயென்றால் உங்கள் வேலைக்கே அது ஆபத்தாக முடியலாம். நீங்கள் உங்கள் சகஊழியரிடம் அதிக உரிமை எடுத்து கொண்டு பழகுவது, பர்சனல் விஷயங்களை பற்றி பகிர்வது உள்ளிட்டவற்றை செய்வது உங்களை சில நேரங்களில் சங்கடத்தில் ஆழ்த்தி விடும். உங்கள் சகஊழியரிடம் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.கடன் வாங்க வேண்டாம்:

பொதுவாகவே கடன் வாங்குவது நல்ல செயல் இல்லை என்றாலும் கடன் இல்லாமல் யாராலும் குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க இயலாது என்பது தான் யதார்த்த நிலையாக உள்ளது. அதிலும் உங்களுடன் வேலைபார்க்கும் சக ஊழியரிடம் பணம் கடன் வாங்குவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒரு பழக்கம். சக ஊழியரிடம் ஒன்று அல்லது இரண்டு முறை பணம் கேட்பது சரி. ஆனால் மதிய உணவு உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களுக்காக கூட அடிக்கடி கடன் வாங்குவது கூடாது.

வதந்திகள் வேண்டாம்..

நீங்கள் அலுவலகத்தில் யாருடன் பழகினாலும் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் தொடர்பான உரையாடலை ஒருபோதும் மேற்கொள்ள வேண்டாம். குறிப்பாக பேசும் போது அந்த இடத்தில இளத ஊழியர் ஒருவர் பற்றிய வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம்.

பாராட்டுவதை தவிர்க்கவும்..

உங்களுடன் வேலை பார்க்கும் ஒரு சக ஊழியர் உங்களுக்கு ஒரு நல்ல நண்பராக இல்லாவிட்டால் அவர்களை பாராட்டுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.நிறுவனம் பற்றிய புகார்கள்..

உங்கள் நிறுவனம் அல்லது மேற்பார்வையாளர் எரிச்சலூட்டும் செயலை மேற்கொள்ளும் நேரத்தில், உங்கள் எண்ணங்களை மற்ற அலுவலக நண்பர்களுடன் விவாதிப்பது நீங்கள் செய்யக்கூடிய மோசமான காரியங்களில் ஒன்றாகும். என்றால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் பேசிய விஷயம் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றால் உங்கள் வேலைக்கு அது ஆபத்தாக முடியும்.

அதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வார்த்தைகளை அளந்து பேசவும்..

வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவது ஒரு கலை. சக ஊழியர்களிடம் பேசும் போது அவர்களின் மனது புண்படாதவாறான விஷயங்களை பேசுவதும், கேள்வியாக கேட்பத்தும் ஆரோக்கியமான நட்பிற்கு வழிவகுக்கும்.

உங்கள் உடல்நிலை..

உங்களது உடலில் என்ன கோளாறுகள் உள்ளது, என்ன பிரச்சனைகளை நீங்கள் தற்போது எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்தெல்லாம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. உடல் பலவீனத்தை நீங்கள் வெளிக்காட்டி கொள்ளும்போது, சக ஊழியர்களுக்கு நீங்கள் பலவீனமானவர்கள் என்பதை நீங்களே வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள் என்ற எண்ணம் ஏற்படும்.தற்பெருமை காட்ட வேண்டாம்..

நீங்கள் அனுபவிக்கும் ஆடம்பரமான விஷயங்களை பற்றி பெருமை பேசுவது உங்கள் சக ஊழியர்களிடையே பொறாமையை தூண்டும்

 
Published by:Sivaranjani E
First published: