திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையை பற்றி யாரும் உங்களுக்கு சொல்லாத விஷயங்கள்.. உஷாரா இருங்க..

பண கொடுத்தல் : மேட்ரிமோனியல் வரன் தேடும்போது இணயவழியில் பணம் கேட்கும் நபர்கள் உங்களை அணுகினால், அதனை உடனடியாக தவிர்த்து விட வேண்டும். வரன் தேடுபவர்களுக்கு தேவையற்ற ஆசைகளைக் காட்டி இதுபோன்ற இணையக் கொள்ளையில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களின் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றிய ஒரு சரியான புரிதலை யாரும் நமக்கு சொல்லி இருக்க மாட்டார்கள்

  • Share this:
'திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்', 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்பது போன்ற ஏக வசனங்களை நாம் நம் சுற்றத்தார் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றிய ஒரு சரியான புரிதலை யாரும் நமக்கு சொல்லி இருக்க மாட்டார்கள். திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் தான்.

இருந்தாலும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றி நாம் சிந்தித்து அதற்கேற்றவாறு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். எந்த ஒரு செயலுக்கும் நாம் தயாராகாதபோது அதில் சிக்கல்களும் பல சோதனைகளும் ஏற்படும். அதுவே நீங்கள் பிளான் செய்தால் சிக்கலின்றி வாழ்க்கையை சுமுகமாக நடத்த முடியும். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

திருமண வாழ்வு எப்போதும் கனவு மயமாகவும் திரில்லிங் ஆகவும் இருக்க வேண்டியதில்லை:

திருமணமான தம்பதிகள் பலரும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று கனவு காண்பார்கள். ஆனால் வாழ்நாள் முழுவதும் அதுவே நடக்கும் என்று சொல்லமுடியாது. சுற்றியிருக்கும் சூழலும் குடும்ப நிலையும் அவர்களை துன்பத்திற்கு உள்ளாக்கும். ஆகவே எப்போதும் சந்தோஷத்தை மட்டும் எதிர்பார்க்காதீர்கள் திருமணத்திற்கு பின்பு ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது முக்கியம் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு பின்பு அன்பும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்ற ஒரு நிலை ஏற்படும். அதை முன்னரே தெரிந்து மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

Marriage

பணத்தை வைத்து சண்டை:

பணம் வாழ்வில் எப்போதும் தேவையான ஒன்று. 'பணம் பத்தும் செய்யும்', 'பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்று சொல்வதுண்டு. இது கணவன்-மனைவிக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு மனைவி வேலைக்கு சென்று வந்தால் மனைவியின் சம்பளம் முழுவதும் கணவரின் அக்கவுண்டிற்கு செல்ல வேண்டுமென்று கணவர் எதிர்பார்ப்பது தவறு. ஒவ்வொருவருக்கும் நிதி நிச்சயம் தேவை அந்த வகையில் உங்கள் மனைவியோ அல்லது கணவரின் சம்பளத்தை முழுமையாக கேட்காதீர்கள். அவர்களுக்கும் சில சொந்த சேவுகள் இருக்கலாம். மேலும் அதில் சேமிப்பு, செலவு போன்றவற்றை இருவரும் தீர்மானித்து வாழ்க்கையை பேலன்ஸ் செய்து நடத்துவதற்கான வழியை தேடுங்கள். பணம் பற்றி அதிக சண்டைகள் திருமணத்திற்கு பின்பு ஏற்படும் இதற்கு நீங்கள் உட்கார்ந்து பேசுவது தான் சரியான வழி.

உங்கள் திருமணத்திற்கான விருந்தினர் பட்டியலை தயார்செய்வது எப்படி? பிளானிங் டிப்ஸ் இதோ..

குழந்தைகள் முக்கியம் தான் அதற்காக குழந்தைகள் மட்டுமே முக்கியமல்ல:

திருமண பந்தத்தை மேலும் வலுவாக்குவது குழந்தைகள் தான். திருமணம் என்பது முதல்படி என்றால் குழந்தைகள் என்பது திருமணத்தின் இரண்டாம்படி. குழந்தைகள் பிறந்து அவர்களை வளர்த்து ஆளாக்கும் வரை பெற்றோர்களின் உதவி குழந்தைகளுக்கு தேவை. உங்கள் குழந்தைகள் சுயமாக முடிவு எடுக்கும் வரை நீங்கள் அவர்களுடன் இருப்பது நல்லது. அதற்கு பின்பு உங்கள் குழந்தையை விட உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்கு பின் உங்கள் துணையின் வாழ்க்கையை நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தான் கடக்க வேண்டும். எனவே எப்போது யாருக்கு முக்கியத்துவம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.வாழ்வில் நீங்களும் உங்கள் மனைவியும் தான் குழு உறுப்பினர்கள்:

எந்த ஒரு வேலையானாலும் அதற்கு குழு முக்கியம் குழுவுடன் திட்டமிடலும் முக்கியம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முக்கிய கோலை நோக்கி நகர்ந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் குழுவின் உறுப்பினராக நீங்களும் உங்கள் மனைவி மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் இருவரும்தான் வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்று தீர்மானித்து முடிவுகளை எடுக்க வேண்டும். தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி அன்றைய நாளில் என்னவெல்லாம் செய்தீர்கள் அல்லது ஏதேனும் சுப மற்றும் தூக்க நிகழ்வுகளுக்கு என்ன செய்யலாம் எப்படி செய்வது என்று உங்கள் துணையுடன் கலந்து விவாதித்து செயல்படுங்கள்.

திருமணம் 50/50 அல்ல:

திருமணமான தம்பதிகளை நாம் கவனித்தால் அவர்கள் அடிக்கடி ஒன்றை சொல்வதுண்டு. இன்று குழந்தையை நான் கவனித்துக் கொள்கிறேன் நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் அடுத்து செலவை நீ பார்த்துக் கொள். என்று இதுபோன்ற சொற்களை தம்பதிகள் கூற நாம் கேட்டிருப்போம். இது உண்மையில் தவறு. திருமண வாழ்க்கை என்பது உங்கள் இருவரின் நலனை பொறுத்ததுதான் இதில் பாதி, முக்கால் என்றெல்லாம் கிடையாது.

எந்த உறவிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. சிக்கலில்லாத உறவு உறவே இல்லை. அந்த வகையில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அந்தவகையில் மேற்சொன்ன குறிப்புகள் கல்யாணத்திற்கு பிறகு நிச்சயம் உங்களுக்கு உதவும்.

 
Published by:Sivaranjani E
First published: