ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செக்ஸ் வேண்டாம்... பெண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது இதைத்தான்.. பகிர்ந்துகொள்ளும் ஆண்கள்..!

செக்ஸ் வேண்டாம்... பெண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது இதைத்தான்.. பகிர்ந்துகொள்ளும் ஆண்கள்..!

கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பது

கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பது

எல்லா தம்பதிகளுக்கும் மிகப்பெரிய வாக்குவாதங்கள் சண்டைகள் என்று நடப்பது இயல்புதான். வாக்குவாதத்தில் ஈடுபட்டு யார் சரி யார் தவறு என்று தீவிரமான சண்டைகள் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாக்குவாதத்தை நீட்டிக்கக் கூடாது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலர்களாக இருந்தாலும் சரி, திருமணமான தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் ஒரு சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அது போல பெண்ணுக்கும் ஆணிடம் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆண் பெண் உறவு என்று வரும் பொழுது பாலியல் உறவு அதாவது செக்ஸ் மிகவும் முக்கியமானது. ஆனால் ஒரு உறவின் தொடக்கத்தில், 20 களில் அல்லது 30 தொடக்கத்தில் இருக்கும்போதுதான் பாலியல் உறவுக்கு அதிக முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல, ஆண்கள் பாலியல் விருப்பம் தவிர்த்த வேறு சில விஷயங்களை அதிகமாக பெண்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

பாராட்டி பேசுவது

என்ன செஞ்சாலும் என் பொண்டாட்டிக்கு பெரிசா தெரியாது என்று பல ஆண்கள் கூறுவார்கள். ஒரு ஆண் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், யாரிடம் இருந்து பாராட்டு கிடைத்தாலும் தனக்கு மனதுக்கு நெருக்கமானவர், விரும்பும் பெண், மனைவியிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுக்கு ஈடு இணையே இல்லை! குறிப்பாக எதிர் பாலினத்தவரிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு கொஞ்சம் ஸ்பெஷல் தான்! தன்னை பாராட்ட வேண்டும் என்று ஆண்கள் எப்போதுமே வெளிப்படையாக கூறுவதில்லை. ஆனால் அதனை பெரிதாக எதிர்பார்க்கிறார்கள்!

தோற்றம், அணியும் ஆடை, தேர்வுகள், பேச்சுத் திறன், பிரச்சனையை கையாளும் விதம், என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் வெளிப்படையாக பாராட்டுவது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும்.

மரியாதை கொடுப்பது

எந்த உறவாக இருந்தாலும் சரி, அந்த உறவுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்! காதலாக இருந்தாலும் சரி, கணவன் மனைவி உறவாக இருந்தாலும் சரி, பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் மீது அன்பு மட்டுமல்லாமல் மரியாதையும் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக பெண்கள் தன் கணவனை மரியாதையாக நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடத்தில் மரியாதை இல்லாமல் பேசுவது, நடப்பது நடத்துவது ஆகியவை ஆண்களை பெரிதாக பாதிக்கும். எனவே ஆண்கள் தான் நேசிக்கும் பெண் / மனைவியிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கிறார்கள்.

Also Read : கணவர் உங்களை சீட் பண்றாருனு நினைக்கிறீங்களா..? கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ...

 உதாசீனப்படுத்து போல நடப்பது, கத்தி தீர்ப்பது

எல்லா தம்பதிகளுக்கும் மிகப்பெரிய வாக்குவாதங்கள் சண்டைகள் என்று நடப்பது இயல்புதான். வாக்குவாதத்தில் ஈடுபட்டு யார் சரி யார் தவறு என்று தீவிரமான சண்டைகள் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாக்குவாதத்தை நீட்டிக்கக் கூடாது, நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இருவருமே முடிவு செய்ய வேண்டும்.

இதில் ஒருசில பெண்கள், அதிகமாக கத்தி கணவனை உதாசீனப்படுத்தும் பொழுது அது மோசமான உறவாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆண்கள் அதனை தவிர்க்க முயற்சி செய்கிறார்கள்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, இரண்டு பேரும் மற்றவர் தரப்பைப் புரிந்து கொண்டு பிரச்சனையை சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு எப்பொழுது பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டே இருப்பது தீர்வாகாது என்று ஆண்கள் கருதுகின்றனர்.

கணவனை நினைத்து பெருமைப்படுவது

எவ்வாறு உங்களின் காதலை அன்பை வெளிப்படுத்தும் போது ஒரு ஆண் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ, அதேபோல கணவரை நினைத்து ஒரு மனைவி பெருமைப்படும் பொழுது அதை விட 10 மடங்கு அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள். கணவனைப் பற்றி பெருமையாக பேசுவது, அவருடைய திறன்களை மற்றவர்களிடம் சொல்லி பறைசாற்றிக் கொள்வது, அதற்காக பரிசுகள் வழங்குவது – இவையெல்லாம் ஆண்களின் எதிர்பார்ப்புகள்.

ஆண்களுடைய முயற்சிகளுக்கும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தை நீங்கள் உடல் மொழி வழியாக, பரிசுகள் வழியாக வெளிப்படுத்துவதை ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவும் அன்பை, நேசத்தை காண்பிக்கும் வழியாகும்.

நன்றி சொல்லுவது

ஆண்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்; அல்லது எதேனும் காயப்படுத்திவிட்டால் சாரி என்ற வார்த்தைகளை சொல்வதன் மூலம் நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது ஆண்களுக்கு மிக பெரிய விஷயம் என்பதை பெண்கள் உணர வேண்டும்!

Also Read : கணவன் மனைவி பரிதாபங்கள்...இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை நீங்கள் உங்கள் கணவருக்கு வெளிப்படுத்துவதை அவர் மிகவும் விரும்புவார். நேசிப்பது ஒரு வகை என்றால், நேசிக்கப்படுவது மற்றொரு அலாதியான விஷயம். அதை நீங்கள் நன்றி தெரிவிக்கும் வழியாக உங்கள் பார்ட்னர் இடம் வெளிப்படுத்தலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Husband Wife, Love Tips, Relationship Tips