• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Relationship Secrets: ஒரு பெண்ணை லைஃப் பார்ட்னராக்க ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Relationship Secrets: ஒரு பெண்ணை லைஃப் பார்ட்னராக்க ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி என்பது நமக்கு எப்படி தெரிந்த அடிப்படை விஷயமோ, அது போல ஒவ்வொரு பெண்ணும் வேறுவேறு மாதிரி தான் என்பதை புரிந்து அப்ரோச் செய்ய வேண்டும்.

  • Share this:
தற்போதைய நவீன காலத்தில் காதல், கல்யாணம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பம் மூலம் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதை எல்லாம் தாண்டி அந்த உறவுகள் அனைத்துமே வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடினால் பெரும்பாலும் இல்லை என்று தான் பதில் வருகிறது.

தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் ஆண்கள் முனைப்பு காட்டினாலும், தங்கள் தேர்வு செய்யும் பார்ட்னரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுவதே பல ஆண்கள் செய்யும் முக்கிய விஷயமாக இருக்கிறது. பெண்கள் என்று வரும் போது பல நேரங்களில் ஆண்கள் துல்லியமாக இருப்பதில்லை. எனவே காதல் அல்லது கல்யாணம் எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய ஒரு பெண்ணை தேடும் ஆண்கள் , சில முக்கியமான விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

முதல் அணுகுமுறை:

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி என்பது நமக்கு எப்படி தெரிந்த அடிப்படை விஷயமோ, அது போல ஒவ்வொரு பெண்ணும் வேறுவேறு மாதிரி தான் என்பதை புரிந்து அப்ரோச் செய்ய வேண்டும். நீங்கள் அப்ரோச் செய்ய போகும் பெண்ணின் கேரக்டர் எப்படி என்பதை பொறுத்து, அவர்களிடம் உங்களது முதல் அணுகுமுறை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது இங்கே மிக சரியாக வேலை செய்யும் என்பதை கருத்தில் கொண்டு ஃபர்ஸ்ட் அப்ரோச்சையே, பெஸ்ட் அப்ரோச்சாக மாற்றி காட்ட வேண்டும்.

பேச்சில் கவனம்:

நீங்கள் பார்ட்னராக்க நினைக்கும் பெண்ணுடனான மீட்டிங்கின் போது நீங்கள் அறவே செய்ய கூடாத விஷயம், அவரை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை அல்லது அவரைப் பற்றி உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பேச கூடாது. அந்த பெண் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள், என்ன விரும்புகிறாள் என்பதை அவளுடனான பேச்சில் நீங்கள் கண்டுபிடித்து அது சம்பந்தமாக அவரிடம் பேசி நல்ல துவக்கத்தை கொடுக்கலாம். அவளுடைய விருப்பங்களை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், உயரமாக இருப்பவர்களுக்கு உங்கள் முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்தேன் போன்ற நீங்கள் மனதில் நினைப்பவற்றை அவளிடம் பேசி விடாதீர்கள்.

Also Read:  Ind v Eng: இங்கிலாந்து அணியின் பலவீனங்கள்: மைக்கேல் வாகனின் மேட்ச் கணிப்பு!

முதல் அபிப்பிராயம்:

உங்கள் மீதான முதல் அபிப்பிராயம் குறிப்பிட்ட பெண்ணை உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல முடிவை எடுக்க வைக்கும் என்பதால் உங்கள் தோற்றத்தை சிறப்பாக வைத்து கொண்டு டேட்டிங் செல்வது நல்லது. முதல் சந்திப்பில் உங்கள் மீது ஏற்படும் முதல் அபிப்பிராயம் சிறந்த உறவுக்கான அடித்தளமாக அமையும் என்பதால் இதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நம்பிக்கை:

ஒரு பெண்ணை கவர்வதற்கான சிறந்த வழி பேச்சிலும், செயலிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துவது. டேட்டிங்கின் போது எந்த இடத்திலும் நம்பிக்கையின்றி பேசுவதோ, நம்பிக்கையற்ற செயலிலோ ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அவர் முன் நீங்கள் இருக்கும் போது எதை பேசினாலும், செய்தாலும் நம்பிக்கையுடன் இருப்பது உங்கள் மீதான ஈர்ப்பு அவருக்கு மேலும் அதிகரிக்கும்.

Also Read:   இந்தப் பக்கம் சச்சின் எப்படியோ.. அந்தப்பக்கம் மிதாலி ராஜ்: ஒரு நாள் கிரிக்கெட்டில் மிதாலியின் அபார சாதனை!

வெற்றி முயற்சிகள்:

உங்கள் வாழ்வில் ஏராளமான பெண்களை நீங்கள் அப்ரோச் செய்து அவர்கள் உங்களை ரிஜெக்ட் செய்திருந்தால் நீங்கள் அவ்ர்களை அணுகும் முறையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசும் விதம், செயல்படும் அல்லது உங்களை அவர்களிடம் முன்வைக்கும் விதம் தவறாக இருப்பின் நீங்கள் விரும்பும் பெண் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பாதிக்கும். எனவே தயக்கம் மற்றும் அச்சமின்றி நீங்கள் சொல்ல நினைப்பதை நல்ல விதமாக அவரிடம் ஷேர் செய்வது அவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி ட்ரை செய்தும் நீங்கள் நினைக்கும் பெண்ணை உங்களால் கவர முடியவில்லை என்றால் அதை அவமரியாதையாக அல்லது மோசமான அடையாளமாக எடுத்து கொள்ளாதீர்கள். நாம் முன்பே சொன்னது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். தனக்கு ஏற்றவராக அந்த பெண் உங்களை அடையாளம் காணவில்லை அல்லது அவளுக்கு உங்கள் மீது ஆர்வம் ஏற்படவில்லை என்பதால் நிராகரிப்பை பெரிய விஷயமாக கருதாமல் கடந்து செல்லுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: