நமது வாழ்க்கைக்கு அழகான அர்த்தத்தை தர கூடிய வாழ்க்கை துணை அமைந்து விட்டால் அதை விடவும் சிறப்பான ஒன்று இந்த வாழ்வில் இருக்க முடியாது. வாழ்க்கை துணை நமக்கு பிடித்தது போன்று இருப்பதை விடவும், அவர் நல்ல மனிதராக இருப்பது தான் முக்கியமான ஒன்று.
இன்றைய கால கட்டத்தில் பலரும் வாழ்க்கை துணை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று வெளி தோற்றத்தை குறித்து மட்டுமே கனவு காணுகிறார்கள். இது சரியான துணையை தேர்வு செய்வதற்கு உதவாது. உண்மையான வாழ்க்கை துணை எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
வாழ்க்கைத்துணையை மதிப்பது
உண்மையான வாழ்க்கை துணை தன்னை போலவே தனது துணையையும் மதிக்கும் பண்பு கொண்டவராக இருப்பார். குறிப்பாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கு மரியாதை தரும் விதமாக அவருக்கு உறுதுனையாக இருப்பார். மேலும், அவர் செய்கின்ற எல்லா செயல்களுக்கும் மதிப்பளித்து, அன்புடன் நடத்துவார். இது போன்ற குணம் உள்ள துணை உங்களை எந்த சூழலிலும் விட்டு கொடுக்காமலும் இருப்பார்கள்.
சமூக வலைத்தளங்கள்
ஒரு சிறந்த வாழ்க்கை துணை என்பவர் எந்நேரமும் முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடங்கங்களில் நேரம் செலவழிக்க மாட்டார். அதற்கு மாறாக தனது காதல் துணையுடன் நேரத்தை செலவிடுவார். மேலும், அவருக்கென்று நேரம் செலவிடும் போது பல கருத்துக்களை பரிமாற செய்வார். மேலும் தனது துணை சொல்லும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கும் தன்மை கொண்டவராக இருப்பார்.
இதை மட்டும் கவனிச்சு பாருங்க... துணை உங்களை நேசிக்கிறாரா என ஈஸியா கண்டுப்பிடித்துவிடலாம்..!
உண்மையான துணையாக இருத்தல்
உண்மையான வாழ்க்கை துணை இன்னொருவரை எந்த சூழலில் தவிக்க விட்டு செல்ல மாட்டார். எல்லா இக்கட்டான சூழலிலும் அவர் தனது துணையுடன் உறுதுணையாக இருந்து, வேண்டிய உதவிகளை செய்வார். அதே போன்று தனது துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பான்மை கொண்டவராகவும் அவர் இருப்பார்.
அந்தரங்கம்
தனது துணையுடன் ஏற்படும் சண்டை, உறவு சிக்கல்கள் போன்றவற்றை மற்றவர்களிடம் சொல்லி குறை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் நபராக அவர் இருக்க மாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை தன் இருவருக்குள் மட்டுமே வைத்து கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருப்பார். மேலும் மற்றவர்களிடம் அவரது துணையை விட்டு கொடுக்காமல் இருப்பார்.
குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...
வெளிப்படையாக இருப்பார்
ஒரு திருமண உறவில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று வெளிப்படை தன்மை. எந்தவொரு சூழலிலும் தன்னை குறித்த விஷயங்களை மறைக்காமல் வெளிப்படையாக இருக்க கூடிய வாழ்க்கை துணைகள் எப்போதும் சிறந்தவர்கள். இந்த வெளிப்படை தன்மை தான் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கும்.
முன்னுரிமை
தனது அருகில் எவ்வளவு பேர் இருந்தாலும், தனது துணைக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுக்கும் பண்பு கொண்டவராக இருப்பவர்கள் சிறந்த வாழ்க்கை துணை. அதே போன்று எந்நேரமும் வேலையே கதி என்று இருக்காமல் தனது வாழ்க்கை துணைக்கு நேரம் ஒதுக்குவார். மேலும் தனது துணையின் வளர்ச்சி குறித்தும் யோசிக்க கூடிய மனநிலையை கொண்டவராக இவர் விளங்குவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.