முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புதுசா திருமணமான தம்பதியா..? நிதி சிக்கலின்றி திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்ய வழிகள்..!

புதுசா திருமணமான தம்பதியா..? நிதி சிக்கலின்றி திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்ய வழிகள்..!

பணம் : சில ரிலேஷன்ஷிப்களில் பணம் முக்கிய பங்காக இருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான நிதி உங்கள் பார்ட்னரிடம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவருடன் சேர்ந்து வாழும்போது உங்களுக்கான தேவைகள் மற்றும் நிதி சார்ந்து வைத்திருக்கும் இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். இது பற்றி நீங்கள் விரும்புபவரிடம் வெளிப்படையாக உரையாடுங்கள். ஏனென்றால், பின்னாளில் பணத்துக்காக சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது.

பணம் : சில ரிலேஷன்ஷிப்களில் பணம் முக்கிய பங்காக இருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான நிதி உங்கள் பார்ட்னரிடம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவருடன் சேர்ந்து வாழும்போது உங்களுக்கான தேவைகள் மற்றும் நிதி சார்ந்து வைத்திருக்கும் இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். இது பற்றி நீங்கள் விரும்புபவரிடம் வெளிப்படையாக உரையாடுங்கள். ஏனென்றால், பின்னாளில் பணத்துக்காக சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது.

பல காரணங்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற நிகழ்வை நீண்ட காலத்திற்கு தள்ளி போட செய்து விடுகின்றன

  • Last Updated :

ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது என்று இருபாலருக்கும் அரசு குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருந்தாலும், பெரும்பாலான ஆண்களுக்கு இன்று சராசரி திருமண வயது 28 முதல் 30 என்றாகி விட்டது. குடும்ப பொறுப்புகள், உடன் பிறந்தவர்களின் நிலை எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் செட்டில் ஆகும் அளவிற்கான வருமானத்திற்கு வழி செய்து கொள்வது என்று பல காரணங்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற நிகழ்வை நீண்ட காலத்திற்கு தள்ளி போட செய்து விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் புதுமணத் தம்பதியர் அனைவரும் நிதி மேலாண்மை பற்றிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

திருமணம் என்பது உற்றார், உறவினர், பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் கூட்டி வைத்து இரு நபர்களுக்கிடையே செய்து கொள்ளப்படும் வாக்குறுதி மட்டுமல்ல. பொறுப்புகள், பழக்கவழக்கங்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் மிக முக்கியமாக நிதி உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் எதிர்கொள்ள பழக வேண்டும். நீங்கள் திருமணம் செய்து கொண்டவுடன் வரும் மிகப்பெரிய மாற்றம் பணத்தை செலவிடுவதில் தான் அடங்கி இருக்கும். ஏனென்றால் வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் வகையில் உங்கள் இல்லற வாழ்வை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

எனவே உங்களது செலவு பழக்கத்தில் பெரிய மாற்றங்களை செய்ய நேரிடும். புதிய வாகனங்கள், வீடுகளை வாங்குவதற்கான விருப்பங்கள், எதிர்காலத் திட்டமிடளுக்கு ஏற்ற பாலிசிகள் மற்றும் முதலீடுகள் உள்ளிடவை புதிதாக உங்கள் செலவு பட்டியலில் சேரும். அப்போது நீங்கள் சேமிப்பு, செலவு மற்றும் கடன் உள்ளிட்டவை பற்றிய சகிப்புத்தன்மையை பெற்று யதார்த்த நிலைக்கு உங்களை பழக்கி கொள்வது அவசியம். திருமண வாழ்வு உங்களது வழக்கமான நிதி பழக்கவழக்கங்களை முற்றிலும் மாற்றும் என்பதால், உங்கள் துணையுடன் தீவிரமாக கலந்தாலோசித்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி செல்ல முறையான ஒரு நிதித்திட்டமிடலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

வெளிப்படைத்தன்மை: உங்கள் துணை எதெற்கெல்லாம் பணம் செலவிடுவார், அவரது வழக்கமான நிதி பழக்கவழக்கங்கள் என்ன என்பது பற்றி வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களது செலவு முறை பற்றி அவரிடம் அனைத்தையும் தெரிவித்து விடுங்கள். செலவு விஷயங்களில் வெளிப்படையாக இருப்பது எந்தவொரு சூழ்நிலையிலும் தம்பதியர் இடையே நிதி சிக்கல் எழாமல் இருக்க உதவும்.

நிதி இலக்குகளை திட்டமிடுங்கள்: தம்பதியர் இருவரும் இணைந்து வருங்காலத்திற்காக ஆக்கபூர்வமான நிதித் திட்டத்தை வகுத்தால், சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் செலவழிப்பது மற்றும் தேவைகளுக்கு பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதற்கு பெரிதும் உதவும்.

சொத்து பராமரிப்பு: புதுமண தம்பதியர் தங்கள் சொந்த குடும்பங்களை சேர்ந்த சொத்துக்கள் அல்லது எஸ்டேட் முதலீடுகள், அல்லது கடன்கள் உள்ளிட்ட பொறுப்புகளை திருமணத்திற்கு பின் நிர்வகிக்க நேர்ந்தால், அதை துணையிடம் வெளிப்படையாக சொல்லி விடுவது என்பது ஒழுங்கமைக்கப்பட்ட நிதித் திட்டத்துடன் இருவருக்கும் செயல்பட உதவும்.

தம்பதியர் தங்களது வங்கி கணக்குகள் மற்றும் வரி தொடர்பான ஸ்டேட்மெண்ட்ஸ்களை இணைத்து கொண்டால், இருவரும் சமமான பங்கு வகிப்பீர்கள். மேலும் அனைத்து செலவுகளிலும் இருவரின் பங்களிப்பு இருக்கும். இது புதுமண தம்பதியருக்கு ஒரு சமநிலையான கணக்கை(balanced account) பதிவு செய்ய உதவும்.

மாதாந்திர பட்ஜெட்: இவை எல்லாவற்றும் விட மிக முக்கியமானது மாதாந்திர பட்ஜெட். நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட நிதி கட்டமைப்பை பின்பற்றுவது தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிக்கவும் உதவும். தொடர்ந்து உங்களது மாதாந்திர செலவுகளை கண்காணிப்பது சேமிப்புகளை அதிகரிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். தவிர எதிர்கால / ஓய்வூதிய காலங்களுக்காக திருமண வாழ்வின் துவக்கத்திலேயே உடல்நலம், வீடு மற்றும் பிற முதலீடுகளில் கவனம் செலுத்தினால் வாழ்வு எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

top videos

    First published:

    Tags: Healthy sex Life, Newly married couple, Personal Finance, Relationship