மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் பலவித வேற்றுமைகள் இருக்கலாம். நமது விருப்பு வெறுப்புகள் முதல் ஆசைகள் வரை எல்லாவற்றிலும் நமக்கும் பிறருக்கும் வேறுபாடு இருப்பதுண்டு. நாம் இருப்பதை போலவே மற்றவர்களும் இருந்தாக வேண்டும் என நினைக்க கூடாது. நாம் செய்யும் விஷயங்கள் நமக்கு சரியாக இருக்கலாம்; அதுவே பிறருக்கு தவறானதாக தெரியலாம். இது எல்லாருக்கும் மாறுபடும்.
இவை எல்லாவற்றையும் நிர்ணயிப்பது நம் எண்ணங்கள் தான். எது நடந்தாலும் பிறரின் நிலையில் இருந்து அதை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். நமது எண்ணங்களை செயல்படுத்துவது மனநிலை தான். சிலருக்கு மோசமான மனநிலை மாற்றங்கள் அவ்வப்போது உண்டாகும். ஒரு சிலருக்கு இந்த எண்ணங்கள் பல காலமாக தவறானதாக இருந்து வரும். இந்த பதிவில் எந்தெந்த குணாம்சங்கள் நம்மை மோசமானவராக மாற்றி விடும் என்பதை பற்றி பார்ப்போம்.
மன்னிப்பு :
தவறு செய்யாதவர்களே இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நாம் செய்கின்ற தவறுகளின் மூலம் தான் சரியான பாதையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவர் தவறு செய்து விட்டார் என்பதற்காகவே அவரை வெறுத்து ஒதுக்குவது நியாயம் இல்லை. நாமும் பல நேரங்களில் தவறு செய்வதுண்டு. அதை மட்டும் மற்றவர்கள் மன்னிக்க வேண்டும் என்றும், பிறர் செய்ததை நாம் மன்னிக்க கூடாது என்கிற மனநிலை நம்மை மோசமானவராக மாற்றி விடும். எதுவாக இருந்தாலும் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மனம்விட்டு பேசி அந்த பிரச்சனையை அப்போதே சரிசெய்து விடுங்கள்.
அதீத குழப்பங்கள் :
ஒருவர் ஒரு தவறை செய்து விட்டார் என்றால் அதை மீண்டும் அவர் செய்யவே மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிற போக்கில் நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது. இது உங்களின் மீது பிறருக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தும். இதற்கு அர்த்தம் நீங்கள் ஒருவர் செய்யும் தவறை எல்லா நேரங்களிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. அவரின் செயலை பொறுத்து இன்னொரு முறை நீங்கள் அவருக்கான வாய்ப்பை தரலாம். மேலும் அதை பற்றி நினைத்து கொண்டே உங்கள் மனநிலையை கெடுத்து கொள்ளாதீர்கள். அவரவர்களை அவரவர் போக்கிலே விடுங்கள், காலம் அதை பார்த்துக் கொள்ளும்.
’எப்படி நடந்து கொள்வார்’ என்று கணிக்க முடியாத பாஸை எதிர்கொள்ள சில டிப்ஸ்..
நம்பிக்கை இன்மை :
நாம் நினைத்தபடி சில விஷயங்கள் நடக்காமல் போனால் முழு நம்பிக்கையும் இழந்தது போன்று சிலர் உணர்வார்கள். இது சாதாரண விஷயம் தான்; இதை அடுத்த முறை சரிசெய்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கை மனநிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் உங்களின் செயல்பாடுகளின் மீதும் பிரதிபலிக்கும். வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலை வேண்டும். இதற்கு உங்களிடம் உள்ள நல்ல குணாம்சங்களை அடிக்கடி நினைத்து பார்த்து கொள்வது உதவும்.
குறிப்பிட்ட நிலை :
பிறரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்காதீர்கள். இது ஒருவேளை உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து, உங்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அந்த நபரை வெறுத்து ஒதுக்கினால் உங்கள் வாழ்வில் மிஞ்சுவது கசப்பான அனுபவங்களே. எனவே எதன் மீதும் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைப்பது நல்லதல்ல. அதே போன்று தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை விமர்சனம் செய்து வருவதும் உங்கள் மீது அதிருப்தியை உண்டாக்கும்.
மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி, உங்களை சுற்றி உள்ளவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.