இந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..!

பெண்களே இந்த கட்டுரை உங்களுக்கு உதவலாம்..!

இந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..!
பெண்களே இந்த கட்டுரை உங்களுக்கு உதவலாம்..!
  • News18
  • Last Updated: October 15, 2019, 9:54 PM IST
  • Share this:
ஆண்கள் பெண்களை ஏமாற்றவும், பெண்கள் ஆண்களை ஏமாற்றவும் பல நேரங்களில் காதலைப் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சி பூர்வமான இந்த ஏமாற்றம் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத சிலர்தான் இறப்பை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

வலி என்பது இருபாலருக்கும் ஒன்று என்றாலும் அதிலிருந்து வெளியேற கிடைக்கும் வழிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகக் குறைவு. அதேபோல் காதலில் ஏமாற்றப்பட்டு அது பெரிய அளவில் பேசப்பட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குதான் அதிக ஆபத்தை உண்டாக்குகிறது. எனவேதான் ஆண்களின் காதல் ஏமாற்றத்தைக் காட்டிலும் பெண்களின் காதல் தோல்வி மிகவும் அக்கறையோடு கையாளப்படுகிறது. எனவே பெண்கள் எளிதில் ஏமாறாமல் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம் என்பதை உணர்த்தவே இந்தக் கட்டுரை.

தோள் கொடுக்கும் ஆண்கள் : அதாவது தனிமையில் இருக்கும் அல்லது காதலில் தோல்வியடைந்த பெண்களுக்கு சிறந்த அன்பும் அக்கறையும் செலுத்தி நட்பு பாராட்டுவார்கள். அந்த சமயத்தில் உங்கள் கவலைகள், புலம்பல்களை கேட்க ஆள் கிடைக்கும்போது அவரின் அரவணைப்பை சந்தேகிக்க மாட்டீர்கள். எனவே இப்படி நீங்கள் தனிமையில் , காதல் தோல்வியில் இருப்பதை பயன்படுத்தி உங்களை அரவணைக்கும் ஆண்கள் மீது சந்தேகம் கொள்வது நல்லது.


மற்றவர்களை எதிர்பார்க்கும் ஆண்கள் : இந்த வகை ஆண்கள் தங்களின் முன்னேற்றம் எதிர்காலம் குறித்து திட்டங்கள் இல்லாமல் பெற்றோர்களை நம்பி இருப்பார்கள். உணர்ச்சி மற்றும் நிதி உதவிகளுக்காக ஒரு நபர் வேண்டும் என்ற எண்ணத்துடன் காதல் வயப்படுவார்கள். அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே செலவுகள் செய்ய வேண்டும். உங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கும் நம்பிக்கை அளிக்க மாட்டார்கள். உங்களின் தேவை, ஆசைகளுக்காக ஒரு போதும் முயற்சிக்க மட்டார்கள். இவர்களுடன் உங்கள் காதல் வாழ்க்கை எந்த அளவிற்கு நீடிக்கும் என்பது சந்தேகமே..!தேவைக்காக எட்டிப்பார்க்கும் நபர் : காதலின் ஆரம்ப காலகட்டத்தில்தான் உங்களோடு இணக்கமாக இருப்பார்கள். பின் உங்களின் சந்திப்பு அவருக்கு ஏதேனும் தேவைகள் இருக்கும்போது மட்டுமே நிகழும். அதாவது பணத் தேவை, அவரின் வாழ்க்கையில் பிரச்னை, உடல் தேவை என்பன போன்ற அவரின் தேவைகளுக்கு மட்டுமே உங்களிடம் அன்பாக பேசுவார்கள். நேரில் சந்தித்துப் பேசுவார்கள். மற்ற நேரங்களில் நீங்களாக பேசினாலும் காரணங்களைச் சொல்லி தட்டிக் கழிப்பார்கள். தேவைகள் முடிந்ததும் அல்லது வேறு நபர் கிடைத்ததும் உங்கள் காதலை தட்டிக் கழிக்கவும் தயக்க மாட்டார்கள்.அடுக்கடுக்காக பொய் பேசுவோர் : இந்த வகை குணம் கொண்டோரை நீங்கள் சந்தேகிப்பதே மிகக் கடினம். அந்த அளவிற்கு உங்களை பொய்களாலும், வார்த்தை ஜாலங்களாலும் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அவர்களின் தந்திரமான அணுகுமுறையால் எதையும் உங்களிடம் சாதித்துவிடுவார்கள். அவர்களின் நிஜம் உங்களுக்குத் தெரிய வரும்போது நிச்சயம் பெரும் துயரம் தாக்க நேரிடலாம்.

பணம் செலவழிக்க கஞ்சன் : இவர்கள் பணம் மட்டுமல்ல எந்த விஷயத்திற்கும் தன்னை மட்டுமே யோசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். உங்களுக்காக பணம் செலவு செய்யவும் மிகுந்த கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன அர்பணிப்பை கூட செய்ய தயங்குவார்கள். உங்களுக்கான இக்கட்டான சூழ்நிலைகளிலும் பண உதவிகள் செய்யத் தயங்குவாகள். உங்களிடம் மட்டுமல்ல நண்பர்களிடமும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading