Home /News /lifestyle /

காதலி அல்லது மனைவி உங்கள் மீது அன்பை இழப்பதற்கான காரணம் இதுதான்

காதலி அல்லது மனைவி உங்கள் மீது அன்பை இழப்பதற்கான காரணம் இதுதான்

பொறாமை குணம்

பொறாமை குணம்

Relationship Goals | ஆனால், பெரும்பாலான ஆண்கள் பொதுப்படையாக செய்யும் சில தவறுகளால், தங்கள் காதலி அல்லது மனைவியின் அன்பை இழக்கின்றனர். நீங்கள் செய்யும் எந்த காரியம் உங்கள் வாழ்க்கைத் துணையை வெறுப்படைய வைக்கிறது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக இருக்கும். முதலில் உங்கள் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும், எவையெல்லாம் பிடிக்காது என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஆண்கள் தங்கள் காதலி அல்லது மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்ற அன்பு அவர்களிடம் இருந்து தனக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான ஆண்கள் பொதுப்படையாக செய்யும் சில தவறுகளால், தங்கள் காதலி அல்லது மனைவியின் அன்பை இழக்கின்றனர். நீங்கள் செய்யும் எந்த காரியம் உங்கள் வாழ்க்கைத் துணையை வெறுப்படைய வைக்கிறது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொய் சொல்வது

தங்கள் கணவர் அல்லது காதலன் மீது பெண்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆண்கள் சொல்லும் அத்தனை விஷயத்தை அவர்கள் நம்புவார்கள். அதே சமயம், ஏதோவொரு சூழலில், நீங்கள் பொய் சொல்லி, அதை உங்கள் மனைவி அல்லது காதலி கண்டுபிடித்து விட்டால், அதற்கு பிறகு உங்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். பின்னர், நீங்கள் எதை சொன்னாலும் உங்கள் மீது சந்தேகம் வரும். இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சிரமம்.

சுயநலம்

சுயநலமிக்க ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே, பிடிக்காது. எப்போதும் தன் மீது அக்கறை கொண்டிருக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அவர்கள் சொல்லாமலே, நீங்களே கண்டறிந்து செய்தீர்கள் என்றால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அத்துடன், உங்கள் மீது எப்போதும் அபாரமான நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

Relationship Lies

சுத்தமின்மை

சுத்தமில்லாத ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது. அழுக்கு ஜீன்ஸ், சாக்ஸ் போன்றவற்றை நீங்கள் அணிபவர் என்றால், நிச்சயம் அந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வீட்டில் ஈரமான துண்டு அல்லது அழுக்குத் துணிகளை அங்கும், இங்குமாக நீங்கள் போட்டு வைத்தால் நிச்சயம் சண்டை பிடித்து விடுவார்கள். சாப்பிடும் போதும், சுத்தமான பழக்க வழக்கங்களை நீங்கள் கடைப்பிடிப்பது அவசியம்.

Also Read : தம்பதியருக்குள் நல்லுறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும்..?

பிற பெண்களிடம் வழிந்து பேசுவது

தன்னுடைய காதலி அல்லது மனைவி கிளி போல இருந்தாலும், வேறு சில பெண் தோழிகளிடம் வழிந்து பேசுவது ஒரு சில ஆண்களின் பழக்கமாக இருக்கும். அதுபோன்ற நபர்களை பெண்கள் வெறுத்து ஒதுக்கி விடுவார்கள்.

Also Read : கணவன் மனைவிக்குள் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது..! 

வீட்டுக்கு தாமதமாக வருவது

இன்றைய சூழலில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். அப்படி இருக்கையில் அலுவலக வேலை முடிந்து, வீட்டில் உங்களுடன் நேரத்தை கழிக்க பெண்கள் விரும்புவார்கள். ஆனால், நீங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு, தினந்தோறும் தாமதமாக வந்தீர்கள் என்றால், அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Healthy Life, Husband Wife, Relationship

அடுத்த செய்தி