திருமண வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே அல்லது தெரிந்து நாம் செய்கின்ற சில விஷயங்கள் நமக்கு பிரச்சினையை உண்டு செய்வதாக அமைந்து விடுகின்றன. கணவனும், மனைவியும் கடைசி வரையில் இணை பிரியாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் நம்மை வாழ்த்தும் உறவுகள் மற்றும் சுற்றத்தாரின் எண்ணமாக இருக்கும்.
நாமும் கூட அந்த எண்ணத்தில் தான் வாழ்க்கையை தொடங்கியிருப்போம் என்றாலும் கூட, சில சமயங்களில் நம்மை அறியாமல் நாம் செய்யும் விஷயங்கள் சண்டை, சச்சரவுகளுக்கு அல்லது நாள்பட்ட பிரிவுகளுக்கு காரணமாக அமைந்து விடும். எந்தெந்த விஷயம் பிரச்சினைக்கு உரியதாக மாறுகிறது என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
கடுமையுடன் நடந்து கொள்வது
கணவன் மனைவி மீது அல்லது மனைவி கணவன் மீது அன்பு செலுத்தாமல் எப்போதும் கடுமையான தொனியில் பேசுவது அல்லது எப்போதும் அவர்களை கண்டிக்கும் வகையில் பேசுவது நாளடைவில் வெறுப்புக்கு வழிவகை செய்யும்.
நீங்களாக கற்பனை செய்து கொள்வது
உங்கள் பார்ட்னர் மனதில் என்ன இருக்கிறது, அவர்களது உணர்வு என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் நீங்களாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுவது அல்லது சண்டையிடுவது என்பது பிரச்சினையை ஏற்படுத்தும்.
சர்பிரைஸ் இல்லாத வாழ்க்கை
திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இடையே அவ்வபோது ஏதாவது சர்பிரைஸ் அல்லது ரொமான்ஸ் இருக்க வேண்டும். சும்மா வெறுமனே நகர்ந்து செல்லும் வாழ்க்கை போர் அடிப்பதாக மாறிவிடும்.
நம் இஷ்டத்திற்கு செய்வது
பார்ட்னரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளிக்காமல் நம் இஷ்டத்திற்கு எந்தவொரு விஷயத்தையும் முன்னெடுத்துச் சென்றால் அது ஏமாற்றம் அளிப்பதாக அமையும்.
காஃபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வார்களா..! புதுமையான ஆய்வு தரும் தகவல்
நீடித்த மௌனம்
தம்பதியரிடையே கல, கலப்பான பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். சில சமயம் எதையுமே பேசாமல் கனத்த மௌனம் சாதிப்பது கூட பிரச்சினைக்கு வழிவகை செய்யும்.
சுயநலமாக இருப்பது
திருமண வாழ்க்கை தோல்வி அடைவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று சுயநலம் ஆகும். பார்ட்னரின் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.
பாலியல் ரீதியாக திருப்தியின்மை
வாழ்க்கையில் மற்ற விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தாலும், பாலியல் ரீதியாக திருப்தியின்மை இருந்தால் அதுவும் கூட பிரிவுக்கு வழிவகை செய்யும்.
நல்ல வாழ்க்கை துணைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? இதை படியுங்கள்...
ஒருவருக்கு, ஒருவர் துணை நிற்பது
எந்தவொரு பிரச்சினையிலும் பிறர் முன்பாக உங்கள் பார்ட்னருக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். மாறாக அவர்கள் அவமானம் அடைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.
உறவுகளை விமர்சிப்பது
உங்கள் பார்ட்னருடைய குடும்ப உறவுகள் அல்லது அவரது நண்பர்கள் போன்றோரை நீங்கள் மரியாதை குறைவாக விமர்சனம் செய்தால் அது மோதலுக்கு வழிவகுக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.