உறவில் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

பெண்களின் மனதை புரிதுகொள்வது அத்தனைக் கடினம் கிடையாது.

Sivaranjani E
Updated: January 14, 2019, 10:54 PM IST
உறவில் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
File
Sivaranjani E
Updated: January 14, 2019, 10:54 PM IST

உறவுகள் வாழ்க்கைக்கான அடித்தளம். அதை சரியாக கட்டமைத்துக் கொண்டாலே வாழ்க்கையின் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக ஆண், பெண் உறவுமுறையில் கவனமாக இருக்கிறார்களோ இல்லையோ பிரச்சனை என்று வந்தால் அதிலிருந்து தப்பிக்க மட்டுமே முயற்சி செய்கின்றனர். குறிப்பாக பெண்களின் மனதை புரிதுகொள்வது மிகவும் கடினம் என்ற வார்த்தையை பல ஆண்கள் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில் அது அத்தனை கடினம் கிடையாது.


காதலில் பூரணத்துவமாக இருங்கள்




பெண்கள் எப்போதும் பர்பெக்‌ஷனை எதிர்பார்ப்பார்கள். ஆண்களுக்கு அது கொஞ்சம் குறைவுதான். இந்த இடத்தில் நீங்கள் ஸ்கோர் செய்துவிட்டால் பாதி பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம்.


 உதாரணமாக உங்கள் மனைவி வார்ட்ரோபை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் துணியை எடுக்கும் போது மடித்து வைத்திருக்கும் உடைகளை எல்லம் கலைத்து விடுவீர்கள். இதை வாடிக்கையாக செய்து கொண்டிருந்தால் உங்கள் மனைவிக்கு கோபம் ஏற்பட்டு சண்டை வரும். எனவே நீங்கள் அந்த உடைகளை கவனமுடன் எடுத்து பயன்படுத்தி வாருங்கள். உங்கள் மனைவிக்கே ஆச்சரியம் வந்துவிடும். இப்படி உங்கள் மனைவி பார்த்து பார்த்து செய்யும் ஒரு விஷயத்தை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் சீரியஸாக சிந்தித்துப் பாருங்கள்.


பொய் சொல்லாதீர்கள்


Loading...

 நீங்கள் காதலர்களாக இருக்கும்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதான் பார்த்துக் கொள்வதற்கான சூழல் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் நம் அன்புக்குறியவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே.! ஆனால் பல ஆண்கள் நம்மைக் கண்கானிக்கிறார்களோ என்ற நினைப்பில் பொய் சொல்லி மாட்டிக் கொள்வார்கள். இதனால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு அதிகபட்சமான கோபத்தை ஏற்படுத்துகிறது. சிலர் இதனால் காதல் முறிவு முடிவுக்குக்கூட வந்துவிடுவார்கள். எனவே முடிந்தவரை உண்மையைப் பேசுங்கள்.


மரியாதை செலுத்துங்கள்



 ஆண் பெண் உறவு முறையில் உலகின் ஒட்டுமொத்தப் பெண்களும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் மரியாதை. ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை என்பது மிகவும் அவசியமானது. பெண்கள் அதை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் சமூகக் கட்டமைப்பு அந்நிலைக்கு தள்ளியிருப்பதே காரணம். உறவு முறையில் சம உரிமை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மனைவி ஏதேனும் வீட்டு நிதி நிலைக் குறித்த யோசனைகள் சொல்லும்போது அதை அலட்சியப்படுத்தி தட்டிக்கழிக்காதீர்கள். வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால் அவரின் தொழில் கொள்கைகளுக்கு மரியாதைக் கொடுங்கள்.


அமெரிக்க தினசரி நாளிதழான யு.எஸ்.எ டுடே கடந்த 2013 ஆண்டு ஒரு சர்வே நிகழ்த்தியது. அதில் உறவு முறையில் ஆண் பெண் அதிகம் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த கேள்வி எழுப்பியிருக்கிறது. முடிவில் 84% பெண்கள் என்னை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அமெரிக்க வாழ் பெண்களுக்கே இந்த நிலை என்றால் நம் நாட்டுப் பெண்களைச் சிந்தித்துப் பாருங்கள்.


பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்


 சில ஆண்கள் தன் நண்பர்கள் அல்லது உறவினர்கள் குழுமியிருக்கும்போது அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டி கிண்டல் செய்வதும் அவமரியாதை செய்வதுதான். சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரின் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.


உதாரணமாக பல ஆண்கள் தன் மனைவியின் சமையல் குறித்து பல இடங்களில் குறை கூறுவார்கள். உண்மையிலேயே உங்கள் மனைவி பாராட்டுப் பெற வேண்டி எத்தனை மெனக்கெட்டு சமைப்பார்கள் தெரியுமா? சிலர் குறைக் கூறுவது மட்டுமின்றி கிண்டலும் செய்வார்கள். இது அவர்களுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும். விளையாட்டாய்தான் சொன்னேன் என்று நீங்கள் கூறுவீர்கள். விளையாட்டு வினையாகும் தெரியும் தானே?


  உங்கள் மனைவி சமையலில் மட்டும்தான் கைத்தேர்ந்தவராக இருக்க வேண்டுமா? சமையல் தவிர்த்து, உங்கள் மனைவிக்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும். அதைச் சொல்லி பாராட்டுங்கள். உங்கள் மனைவி நிதி நிலையில் நல்ல ஆலோசகராக இருக்கலாம். டெக்னாலஜி பயன்படுத்துவதில் சிறந்தவராக இருக்கலாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை மற்றவர்களிடம் கூறக் கேட்கும் போது உங்கள் மனைவி எத்தனை ஆனந்தப்படுவார்கள். அது அவரை ஊக்கப்படுத்தும் விஷயமாகவும் இருக்கும். இதன்மூலம் நீங்கள் எந்த அளவிற்கு அவரை கவனிகிறீர்கள், ரசிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும். இதனால் உங்கள் மீதான காதலும் அதிகரிக்கும்.


பகிரக் கற்றுக் கொள்ளுங்கள்


உங்கள் பிரச்சனைகளை மனைவிடம் கூறி பகிர்ந்து தீர்வு காணுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்ப்பதும் அதுதான். என் தோழியின்(30) கணவர்(36) மிகவும் திறமைசாலி, நிதி நிலையில் கைத்தேர்ந்தவர். தன் மனைவிடம் நிதி குறித்த எந்த ஆலோசனையும் செய்ய மாட்டார்.  மாதச் சம்பளத்தைக் கூட சொல்லமாட்டார். திடீரென கார் வாங்குவது, வீடு கட்டுவது, செல்போன் வாங்குவது என  மனைவிக்கு சர்பிரைஸ் செய்வார். தோழியும் நம் கணவர் நன்றாக சம்பாதிக்கிறார். சரியாகவே முதலீடு செய்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

 திடீரென ஒருவர் வீட்டிற்கு வந்து உங்கள் கணவர் எங்களிடம் கடன் வாங்கியிருந்தார். 3 மாதங்களாக பணம் செலுத்தவில்லை. இந்த மாதம் கட்டவில்லையெனில் கார் வீடுகளை முடக்கிவிடுவோம் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன என் தோழி என்னிடம் கூறி மன வேதனையடைந்தார். இதை தன் கணவரிடம் கேட்டபோது நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தலையிடாதே என்று தடாலடியாகக் கூறியிருக்கிறார். 3 நாள் கழித்து நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் மாரடைப்பு என்று கூறி ஒரு வருடம் எந்த வேலையும் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். பின்புதான் என் தோழி தீவிரமாக இறங்கி அவர் வாங்கிய கடன் குறித்து கண்டுபிடித்த போது பல லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் என்றும் அவர் மாத வட்டி மட்டுமே 50 ஆயிரத்திற்குமேல் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியவந்தது. மருத்துவ செலவும் பல லட்சம் ஆகும் என்று கூறியிருக்கின்றனர். தோழி, உடனடியாக தன் சொத்துக்களையெல்லாம் விற்று அந்த கடன்களை அடைத்திருக்கிறாள். மருத்துவ செலவுகளையும் பார்த்திருக்கிறாள். தன் கணவரையும் நோயிலிருந்து மீட்டாள். அவர் அப்போதுதான் தன் மனைவிடம் ”நான் இந்நிலையில் இருந்திருந்தால் இத்தனை தைரியத்துடன் முடிவெடுத்திருப்பேனா என்று தெரியவில்லை. உன்னைக் கேட்காமல் அனைத்து முடிவுகளையும் நானே எடுத்தது தவறு” என்று வருந்தியிருக்கிறார்.


இப்படி இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கத்தான் கணவன் மனைவி சரிபாதியாக வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அவர் ஆரம்பத்திலேயே மனைவியிடம் ஆலோசனை செய்து முடிவுகள் எடுத்திருந்தால் இத்தனைப் பெரிய பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம். இப்படிப் பிரச்சனைகளைப் பகிர்ந்து வாழ்வதால் ஒருவர்மேல் ஒருவருக்கு நம்பிக்கையும் அதிகரிக்கும். நமக்காக ஒருவர் இருக்கிறார் என்கிற தைரியமும் ஏற்படும்.


நம்பிக்கை வையுங்கள்



மிக முக்கியமாக பெண்கள் எதிர்பார்க்கும் விஷயம் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது. உங்கள் மனைவி குறித்து யாரேனும் குறைக் கூறினால்  அதை ஏற்க மறுத்து வாதிடுங்கள். ஏனெனில் மற்றவர்களை விட உங்களுக்குத்தான் அவர் மிகவும் பரிட்சயமானவர். நீங்களும் அவர்களை நம்பவில்லையென்றால் அதைவிட பெரும் துயரம் வேறெதுவும் இருக்க முடியாது.  எனவே மனைவி மீது நம்பிக்கைக் கொண்டு அவர்களை சுந்ததிரமாக இருக்க விடுங்கள். சுய முடிவுகளை எடுக்க விடுங்கள்.   இன்றைய சமூகக் கட்டமைப்பு பெண்கள் அவர்களுப் பிடித்தார் போல் வாழ்வதற்கே போராட வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் அவர்களின் ரசனைகள் மற்றும் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இராமல் ஊக்கமளித்தால் உங்களை நினைத்து பெருமைக் கொள்வார்கள். உங்கள் மீது காதலோடு மரியாதையும் வலுக்கும்.


இப்படி வாழ்க்கையின் சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்களை கவனித்து கையாண்டாலே பிரச்சனைகள் இருக்காது. உங்கள் வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும்.

First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626