Home /News /lifestyle /

ஆண்கள் உங்களை ஏமாற்றும்போது சொல்லும் பொய்கள் இவை தான்..

ஆண்கள் உங்களை ஏமாற்றும்போது சொல்லும் பொய்கள் இவை தான்..

உங்கள் பார்ட்னர் அவரது தவறுகளை மறைக்க மிகுந்த எச்சரிக்கையுடனும், மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வார்.

உங்கள் பார்ட்னர் அவரது தவறுகளை மறைக்க மிகுந்த எச்சரிக்கையுடனும், மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வார்.

உங்கள் பார்ட்னர் அவரது தவறுகளை மறைக்க மிகுந்த எச்சரிக்கையுடனும், மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வார்.

பொய் சொல்லும் ஒருவரை எளிதாக கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக, ஏமாற்றும் ஒருவரை மிக எளிதாக கண்டுபிடித்து விட முடியும். உங்கள் பார்ட்னர் அவரது தவறுகளை மறைக்க மிகுந்த எச்சரிக்கையுடனும், மிகுந்த புத்திசாலித் தனத்துடனும் நடந்து கொள்வார். ஆனால், எல்லா நேரங்களிலும் அது அவருக்கு சாதகமாக இருக்காது. உங்களை சமளிப்பதற்காக பல்வேறு பொய்களையும், புனைக் கதைகளையும் அவர் சொல்லக் கூடும்.

என்ன மாதிரியான பொய்களை உங்கள் பார்ட்னர் சொல்கிறார், எப்போதெல்லாம் அதை சொல்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், அவர் பேசும் வார்த்தைகளில் உண்மை எது, பொய் எது என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, ஆண்கள் உங்களிடம் பொதுவாக சொல்லக் கூடிய சில பொய்கள் குறித்து இங்கு இங்கே பார்க்கலாம்.

வேலையை காரணம் காட்டி சமாளிப்பது: 

இரவு நீங்கள் ஜோடியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உங்கள் கணவரின் ஃபோனுக்கு ஒரு அழைப்பு வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதுவும், உடனடியாக சில வேலைகளை செய்து கொடுக்குமாறு அவருக்கு சொல்லப்பட்டது என்றால், அவர் உங்களை ஏமாற்ற தொடங்குகிறார் என்று அர்த்தம். ஆண்கள் எப்போதுமே தங்கள் வேலையை காரணம் காட்டிதான் நிறைய விஷயங்களை சமாளிப்பார்கள்.

also read : இந்த 5 குணங்கள் இருக்கும் பெண்களை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்..

தினசரி தவறாமல் ஜிம்முக்கு செல்வது: 

திருமணத்திற்கு முன்பு ஆண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவது இயல்பான ஒன்றுதான். ஆனால், திருமணத்திற்குப் பிறகு எல்லோருக்கும் இது சாத்தியம் ஆகாது. குடும்ப பொறுப்புகள் கூடி விடும். ஆனால், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உங்கள் பார்ட்னர் தினசரி ஜிம்முக்கு செல்கிறார் என்று சொன்னால், அதை சாக்காக வைத்து வேறு யாரோ ஒருவரை சந்திக்கக் கூடும் அல்லது உடலின் கட்டுக்கோப்பை மேம்படுத்தி யாரையேனும் இம்ப்ரஸ் செய்ய திட்டமிடக் கூடும்.

வீட்டை விட்டு அவ்வபோது வெளியே செல்வது:

உங்கள் பார்ட்னர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்பை அவர் தேடிக் கொண்டிருப்பார். ஒரு நிமிடம் வீட்டில் இருப்பார், அடுத்த நிமிடம் காணாமல் போய்விடுவார். சாட் செய்வது அல்லது கால் செய்து பேசுவது போன்ற வாய்ப்புகளுக்காக அவர் அடிக்கடி வெளியே செல்ல விரும்புவார்.

திடீர், திடீரென சண்டையிடுவது:

உங்களுடன் காரணமே இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். அப்போது வாக்குவாதம் முற்றி, நீங்கள் திட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில், அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, எரிச்சல் அடைந்தவரைப் போல காண்பித்து வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். யாரையேனும் சந்திக்க செல்வதற்காக அவர் இதுபோல நடந்து கொள்வார்.

பிசினஸ் டிரிப்: 

உங்கள் பார்ட்னர் உங்களை ஏமாற்றும்போது அடிக்கடி சொல்லும் சமாளிப்பு இதுதான். அடுத்த சில நாட்களுக்கு பிசினஸ் காரணமாக அவர் வெளியூர் செல்கிறார் என்றால், எங்கு செல்கிறார், எங்கு தங்குகிறார், உடன் செல்வது யார் என்பது குறித்து விசாரியுங்கள். அவர் புதிய காதலியுடன் சேர்ந்து ஊர் சுற்ற திட்டமிட்டிருக்கக் கூடும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Relationship Tips

அடுத்த செய்தி