Happy Father's Day 2020 : வெளியூரில் சம்பாதிக்கும் அப்பாவின் அருமையை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்..!

தன் தேவைகளையெல்லாம்  அம்மா செய்வதால் அவர்தான் செய்கிறார் என்றும் அப்பா ஊரில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக இருக்கிறார் என்ற எண்ணம்தான் பிள்ளைகளுக்கு இருக்கும்.

Happy Father's Day 2020 : வெளியூரில் சம்பாதிக்கும் அப்பாவின் அருமையை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்..!
வைரல் வீடியோ
  • Share this:
பிள்ளைகளுக்கான தேவைக்காக வெளிநாட்டில் பணி செய்துக்கொண்டு பணம் அனுப்பிக் கொண்டிருக்கும் தந்தையின் அருமை குழந்தைகளுக்கு  தெரிவதில்லை. தன் தேவைகளையெல்லாம்  அம்மா செய்வதால் அவர்தான் செய்கிறார் என்றும் அப்பா ஊரில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக இருக்கிறார் என்ற எண்ணம்தான் பிள்ளைகளுக்கு இருக்கும்.

ஆனால் அவருடைய பொறுப்பும், பங்களிப்பும் என்ன என்பதை அம்மாக்களாகிய நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்ற வீடியோ டிக்டாக்கில் வைரலாகப் பரவி வருகிறது.

அதில் அப்பா மகனுடன் பேச விரும்புகிறார். ஆனால் மகனோ பேச மாட்டேன் எனக் கூற தந்தை அந்த குரலைக் கேட்டு உடைந்துபோகிறார். செல்ஃபோனை வைத்துவிட்டு அம்மா அப்பா மகனுக்காக செய்தது என்னென்ன என்பதை மகனின் பாணியிலேயே புரிய வைக்கிறார்.


@kannan7994683ஒவ்வொரு மகன் கிட்டயும் அவருடைய அம்மா இதுபோல் சொல்லி வளர்க்க வேண்டும் நன்றி தோழி♬ original sound - Saranya


உடனே மகனும் அப்பாவிடம் பேசுகிறேன் செல்ஃபோனில் அழையுங்கள் என்கிறார். இந்த வீடியோ மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் தகும்.

தந்தை குடும்பத்தைக் காக்க மெழுகுவர்த்தியாய் கரைகிறார் என்ற வாக்கியத்தைக் கேட்டிருப்போம். அதை இந்த வீடியோ உதாரணமாக்கியுள்ளது.

 
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading