ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உருமாறும் பாடி ஷேமிங் கலாச்சாரம்... டேட்டிங் ஆப்ஸுகளில் எதிரொலிப்பதாக பெண்கள் வேதனை..!

உருமாறும் பாடி ஷேமிங் கலாச்சாரம்... டேட்டிங் ஆப்ஸுகளில் எதிரொலிப்பதாக பெண்கள் வேதனை..!

உடல்பருமன்

உடல்பருமன்

சுமார் 46%-க்கும் அதிகமான டேட்டிங் யூஸர்கள் பாடி ஷேமிங்கை கையில் எடுக்காமல் உடலமைப்பு எப்படி இருந்தாலும் அழகு தான் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், பலரின் விருப்பம் மெல்லிய உடலமைப்பாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் பருமனால் உருவத்தில் குண்டாக இருக்கும் நபர்கள் எங்கு சென்றாலும் இயல்பான உடல்வாகில் இருப்பவர்களை விட அதிகம் பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள். தவிர கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள். மற்ற விஷயங்களை விட டேட்டிங் என்று வரும் போது உடல் பருமன் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு அல்லது அவமானங்கள் மிக அதிகம். காதல் வாழ்கையை துவக்க ஆர்வமுடன் இருக்கும் பல நபர்களை ஆண், பெண் பாலின பாடுபாடின்றி பல வழிகளில் பாதிக்கிறது உடல்பருமன்.

இதனிடையே பிரபல டேட்டிங் ஆப்ஸாக இருக்கும் QuackQuack, ஒரு சராசரி மனிதனின் டேட்டிங் வாழ்க்கையில் உடல் பருமன் ஏற்படுத்தும் பாதிப்பை ஆய்வு செய்ய சர்வே ஒன்றை நடத்தியது. tier 1 & tier 2 நகரங்களை சேர்ந்த 23 - 33 வயதுக்குட்பட்ட யூஸர்களிடையே இந்த ஒப்பினியன் போல் நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் சுமார் 15,000 யூஸர்கள் பங்கேற்றனர். இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற யூஸர்களிடம் உங்களுக்கு இருக்கும் எடை பிரச்சனைகள் டேட்டிங்கில் உங்களின் உறவுகளை பாதித்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்ததில் சுமார் 27% யூஸர்கள் உடல் பருமன் காரணமாக தாங்கள் வழக்கமான அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளை எதிர்கொண்டதாக கூறி இருக்கின்றனர். அதிக எடை காரணமாக எதிர்கொண்ட அவமானங்களை கருத்தில் கொண்டு உடலில் இருக்கும் தேவையற்ற எடையை இழந்த பிறகும் கூட இழந்த தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை மீண்டும் பெறுவது சவாலாக இருப்பதாக வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போது சோஷியல் மீடியாக்களில் ஃபோட்டோக்களை அப்லோட் செய்வதற்கு பல வித ஃபில்டர்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. 20 - 25 வயதுக்குட்பட்ட 33% இளம் யூஸர்கள் எல்லா நேரங்களிலும் தாங்கள் சிறப்பாக தோற்றமளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு ஒரு டேட்டிங் ஈசியாக வெற்றியடையும். உடல் பருமனான நபர் உண்மையான காதலுக்கு தகுதியானவர் அல்ல என்று பலர் எப்படி நினைக்கிறார்கள் என்று புரியவில்லை என கூறி இருக்கிறார்கள்.

இந்த டேட்டிங் ஆப்ஸை பயன்படுத்தும் 28 வயதுக்கு மேற்பட்ட பெண் யூஸர்களில் சுமார் 45% பேர் எடையை காரணம் காட்டி தங்கள் மேட்சிங்கை புறக்கணித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதே போல 23-26 வயதுடைய யூஸர்களில் சுமார் 21% பேர் உடல் எடையை பராமரிக்கும் ஒருவர் தங்களுக்கு பொருத்தமானவராக இருக்க கூடும் என கருதுவதாக கூறி இருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும் உடல் பருமனை ஊக்குவிக்க கூடாது என விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சுமார் 46%-க்கும் அதிகமான டேட்டிங் யூஸர்கள் பாடி ஷேமிங்கை கையில் எடுக்காமல் உடலமைப்பு எப்படி இருந்தாலும் அழகு தான் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், பலரின் விருப்பம் மெல்லிய உடலமைப்பாக இருக்கிறது. அதாவது குறிப்பாக டேட்டிங் செய்யும் போது ஒருவருக்கு அமையும் மேட்சிங் பார்ட்னர் அவரது உடல் எடையை பொறுத்து என்பதே நிலையாக இருந்து வருகிறது. அதே போல உடல் பருமன் தொடர்பான பாகுபாட்டை ஆண்கள், பெண்கள் என இருவருமே எதிர்கொள்வதை சர்வே காட்டுகிறது. 28 வயதுக்கு மேற்பட்ட ஆண் யூஸர்களில் 28% பேர் தங்கள் எடை காரணமாக பல நிராகரிப்புகளை எதிர்கொண்டதை வெளிப்படுத்தியுள்ள அதே நேரம், 25 - 30 வயதுடைய பெண்களில் சுமார் 31% பேர் தங்கள் உடல் எடையை பெரிதாக நினைக்காத மேட்சிங்கை கண்டறிவதில் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர்.

Also Read : Dating Tips : முதல்முறை டேட்டிங் செல்லும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

எனினும் ட்ரெடிஷ்னல் டேட்டிங் ஃபார்மெட் மூலம் லவ் பார்ட்னரை கண்டறியும் முயற்சியில் தோல்வியுற்ற 47% பேர், விரிச்சுவல் வேர்ல்டில் சரியான பார்ட்னரை கண்டறிந்துள்ளதை சர்வே காட்டுகிறது. இவர்களில் 28% பேர், 26-28 வயதுடையவர்கள். ஆன்லைன் டேட்டிங் பிளாட்ஃபார்ம்கள் பார்ட்னரை நேரில் சந்திப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். QuackQuack-ன் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரி ரவி மிட்டல் கூறுகையில் எங்கள் ஆப்பில் மாதத்திற்கு சுமார் 24 மில்லியன் சேட்கள் பதிவாகிறது. மேலும் எங்கள் யூஸர்கள் உடல் பருமனை விட உடற்பயிற்சி தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதை நாங்கள் கவனிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Dating apps, Obesity