பணியிடத்திலோ.. பொதுவெளியிலோ.. இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..!

இந்த வார்த்தையை அடிக்கடி தேவையில்லாமல் பயன்படுத்துவதால் உங்களின் தன்னம்பிக்கைக் குறையும்..மற்றவர்களுக்கும் உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும்.

news18
Updated: July 20, 2019, 8:23 AM IST
பணியிடத்திலோ.. பொதுவெளியிலோ.. இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..!
மன்னிப்பு
news18
Updated: July 20, 2019, 8:23 AM IST
அது அப்படி ஒன்றும் பெரிய வார்த்தை அல்ல. போகிற போக்கில் சொல்வதுதானே என்ற மனநிலையில்தான் பலரும் இந்த வார்த்தையை தினமும் அசாதாரணமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால் அதையே தமிழில் பயன்படுத்திப் பாருங்கள் அதன் வீரியம் தெரியும்.

சற்று சிந்திந்து பாருங்கள்.. ரெஸ்டாரண்ட், பணியிடம், பஸ், ரயில் என பொதுமக்கள் நிறைந்த இடங்களில் தினம் தினம் சாதாரணமாக வாயிலிருந்து வரும் வார்த்தை ' Sorry' என்பதுதான். சற்று சிந்தித்துப் பாருங்கள்..இன்று இந்த நொடிக்குள் அந்த வார்த்தையை எத்தனை முறைப் பயன்படுத்தியிருப்பீர்கள். Sorry என்ற வார்த்தையை உண்மையான காரணத்திற்காக பயன்படுத்துவதைக் காட்டிலும் தேவையே இல்லாத இடங்களிலும் மன்னிப்புக் கோருவதுதான் வழக்கமாகிவிட்டது.

Sorry என்ற வார்த்தை பிரிட்டிஷ்காரர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு தடவை Sorry கேட்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில்.. எட்டு பேரில் ஒருவர் ஒரு நாளைக்கு 20 முறை Sorry கேட்பதாகக் கூறுகிறது அந்த ஆய்வுக் கட்டுரை.
மன்னிப்பு என்பது, மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். மொத்த தவறும் உங்கள் மீதுதான் என்றால் Sorry கேட்கலாம். உறவில் பிரச்னை. மன்னிப்புக் கேட்பதால் உறவைத் தக்க வைக்க முடியும் என்றால் Sorry கேட்கலாம். யாரையேனும் மனம் புண்படும் அளவிற்கு பேசிவிட்டீர்கள், நடந்து கொண்டீர்கள் எனில் Sorry கேட்கலாம். இவற்றைத் தவிர்த்து.. அடிக்கடி மன்னிப்புக் கேட்கிறீர்கள் எனில்..அதற்கு மதிப்பு உண்டா என்பதை நீங்களே சிந்தியுங்கள்..!

மன்னிப்புக் கேட்கும் பழக்கம் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையை கொன்றுவிடும் என்று கூறுகிறது. என்னதான் அதன் வீரியம் தெரியாமல் போகிற போக்கில் மன்னிப்புக் கேட்டாலும் அதைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருந்தால் உங்கள் மன உறுதி வலுவிழந்து நம்பிக்கை அகன்றுவிடும் என்கிறது ஆய்வு. இந்த பழக்கம் மற்றவர்களுக்கும் உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். இதனால் உங்கள் கரியரும் பாதிக்கப்படும்.

Loading...எல்லாம் சரி இதை எவ்வாறு திருத்திக்கொள்வது...

Sorry என்ற வார்த்தைக்கு பதில் இனி.. தவறை குறிப்பிட்டதற்கு Thank you என்ற தொனியில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துங்கள். இது பாசிடிவ் உணர்வை அளிக்கும். அவருடனான உரையாடலையும் நேர்மறையாக மாற்றும்.

தவறை சுட்டிக் காட்டும்போதே குறுக்கிட்டு மன்னிப்புக் கேட்பதைத் தவிறுங்கள். உங்கள் பக்கம் தவறு இருக்கிறதா என்பதை சற்று சிந்தித்து யோசனை செய்த பின் மன்னிப்புக் கேளுங்கள். அப்படியும் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் மன்னித்துவிடுங்கள் என்று தமிழில் இனி Sorry கேட்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய் மொழியில் சொல்லும்போதுதான் அதன் ஆழம் சிலருக்குப் புரியும்.

சில நேரங்களில் அதி சிறிய விஷயமாக இருக்கும்பட்சத்தில் எதுவுமே கூறாமல் அமைதியாய் விட்டுவிடுவது நல்லது. பெரிய பிரச்னையாக இருக்குமாயின் சிந்திந்து Sorry கேளுங்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...