ஹோம் /நியூஸ் /lifestyle /

சமூக ஊடகங்களால் ப்ரேக் அப் ஆகலாம் - எப்படி தெரியுமா?

சமூக ஊடகங்களால் ப்ரேக் அப் ஆகலாம் - எப்படி தெரியுமா?

கோப்பு படம்

கோப்பு படம்

சமூக ஊடகங்களில் எந்தவொரு நபரும் தங்களுடைய குறைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒத்த சிந்தனை உடைய மக்களை நட்பு ரீதியாக இணைக்கும் பாலமாக சமூக ஊடகங்கள் இருந்து வருகின்றனர். அதே சமயம், ருசிகரமான பதிவுகள், ரீல்ஸ் வீடியோக்கள், சினிமா மற்றும் அரசியல் விமர்சனங்கள் என்று பலதரப்பு விஷயங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறுகின்றன.

  இன்றைக்கு நம் சக அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடம் கூட சமூக ஊடகங்கள் வாயிலாகவே பேச வேண்டியுள்ளது. புதிய நண்பர்களை உருவாக்கிக் கொடுப்பது, அன்பை பரிமாறிக் கொள்வது, வணிக ரீதியிலான தொடர்புகளையும் கூட ஏற்படுத்திக் கொடுப்பது என சமூக வலைதளங்கள் பல வகைகளில் உதவிகரமாக இருந்தாலும், அவற்றால் சில பாதிப்புகளும் உண்டு.

  வீட்டில் உள்ள வாழ்க்கை துணையுடன் நேரம் செலவழிக்காமல், நீங்கள் எந்த நேரமும் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடந்தால் நிச்சயமாக சண்டை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம், சமூக ஊடகங்களை நீங்கள் அளவோடு பயன்படுத்தினாலும் கூட, உங்கள் மனதுக்குள் உங்களை அறியாமலேயே பல மாற்றங்களை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

  இதையும் வாசிக்க: ஜெயிச்சுக் காட்டணுமா? இந்த 7 பழக்கங்கள ஃபாலோ பண்ணுங்க! வெற்றி உங்களைத்தேடி வரும்!

  சமூக ஊடகங்களால் ஏற்படும் தவறான புரிதல்கள், நாளடைவில் வளர்ச்சி அடைந்து பிரிவுக்கு வழிவகை செய்யும். ஆகவே, சமூக ஊடகங்களால் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  காதலுக்கு நேரமின்மை

  எந்த நேரமும் நீங்கள் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடந்தால் உங்கள் அன்புக்குரிய கணவன் அல்லது காதல் மனைவியுடன் பொழுது போக்குவதற்கான நேரம் என்பதே இல்லாமல் போய்விடும். தம்பதியரில் யார் ஒருவர் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடந்தாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவது நிச்சயம்.

  ஒப்பீடு மனப்பான்மை

  சமூக ஊடகங்களில் எந்தவொரு நபரும் தங்களுடைய குறைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களைப் பற்றிய பாசிட்டிவ்வான கருத்துக்களை மட்டுமே பதிவிடுவார்கள். அது மட்டுமே வாழ்க்கை என்று நாம் நம்பிக் கொண்டு, நம் வாழ்க்கை துணை ஏன் அதுபோல் இல்லை என்று ஒப்பீடு செய்ய கிளம்பிவிடுவோம். இது தவறான போக்கு ஆகும்.

  பொறாமை

  சமூக ஊடகங்களில் உங்கள் பார்ட்னருக்கு இருக்கு ரசிகர்கள் அல்லது ரசிகைகள், அவர்களது பதிவுக்கு வரும் எக்கச்சக்க லைக் மற்றும் கமெண்ட் போன்றவை உங்கள் மனதில் கொஞ்சம் பொறாமை உணர்வை ஏற்படுத்தக் கூடும்.

  கருத்து வேறுபாடு

  தனி வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், உங்களுடைய ஃபோட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். ஆனால், உங்கள் மனைவியோ அல்லது கணவனோ அதை விரும்பாமல் கட்டுப்பாடு விதிக்கும் போது இருவருக்கும் இடையே மன கசப்புகள் ஏற்படும்.

  தொலைதூர பந்தம்

  சமூக ஊடகங்களால் பல விதமான தீமைகள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டாலும், தொலைதூரத்தில் பிரிந்து வாழும் தம்பதியர் அல்லது குடும்ப உறவுகள் போன்றவர்கள் இடையே நெருக்கமான பந்தம் ஏற்படுத்த இது ஒரு பாலமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Lifestyle, Love breakup, Social media