திருமணமான பிறகு, புதுமணத் தம்பதிகள் இருவருமே நிறைய சமாளிக்க வேண்டி இருக்கும். அது புதிய உறவினர்களைச் சந்திப்பதாக இருக்கலாம் அல்லது திருமணம் மற்றும் குடும்பத்தின் மீதான புதிய பொறுப்புகளைக் கையாள்வதாக இருக்கலாம். எப்படிப்பட்ட ஒருவருக்கும் இது மிகவும் சவாலான சிக்கலாகவும், முன்பின் அனுபவம் இல்லாத விடயமாகவும் இருக்கலாம்.
அதனால் தான் திருமணமான முதல் வருடம் பெரும்பாலான புதுமண தம்பதிகளுக்கு ஒரு "சத்திய சோதனையாக" கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வாழ்க்கை போக்கு தீர்மானம் செய்யப்படும்.
இந்த சத்திய சோதனையின் கீழ் வெகு சிலர் மிகவும் திறம்பட செயல்படலாம். ஆனால் பெரும்பாலானோர்ருக்கு உதவி தேவைப்படுகிறது. இதுபோன்ற குழப்பத்தில் இருக்கும் புதுமணத் தம்பதிகளில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் திருமணம் சார்ந்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த சில புத்திசாலித்தனமான, பயனுள்ள டிப்ஸ் இதோ
சேர்ந்து திட்டமிடுங்கள்!
உங்கள் புதிய திருமணத்தின் முதல் சில மாதங்களில் மிகவும் மகிழ்ச்சியாக கடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அது ஹனிமூன் பீரியட்; அப்படித்தான் செல்லும். இருப்பினும் அதற்கு முன்பாகவே அல்லது அந்த காலகட்டத்திலே கூட உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்கள் ஆகிய இரண்டையும் பற்றி திட்டமிடத் தொடங்குவது நல்லது. குறிப்பாக இருவருக்குமான திட்டங்களை வகுப்பது, கலந்து பேசுவது போன்ற வழக்கத்தில் ஈடுபடுங்கள். இது பெரிய அளவிலான மன அழுத்தத்தையும், தற்காலிக சச்சரவுகளையும் தடுக்க உதவும்.
நீங்கள் இருவரும் சண்டையிட்ட பிறகு நினைவு கூருங்கள்!
உச்சகட்ட மகிழ்ச்சி ஒருபக்கம் இருக்க, திருமணமான முதல் சில மாதங்களில் சண்டைகள் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, நீங்கள் இருவரும் உங்கள் முதல் பெரிய சண்டைக்குப் பிறகு, அதை நீடிக்காது இருக்கும் நோக்கதின் கீழ், அமைதியாக அமர்ந்து நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அழகான நினைவுகளை பற்றி பேசுங்கள். வெளியே சென்றது, சமைத்து உண்டது, திருமண நிகழ்வுகள் போன்றவைகளை பற்றி பேசுங்கள். இது பரிச்சய உணர்வுகளைத் தொடங்க வழிவகுக்கும்.
உங்கள் குடும்பத்துடன் பிணைப்பு!
புதுமண தம்பதிகள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அதில் அவரவர் குடும்பத்தை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். அவர்கள் உங்களுக்கு சரியான பாதையை, முறையான வழியை காட்ட உதவலாம், அதே சமயம் எப்போதும் அவர்களை ஈடுபடுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றாதீர்கள், இல்லையெனில் அவர்கள் உங்கள் மத்தியில் அதிகமாக தலையிடலாம்.
பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள்!
கடினமான உணர்வுகள் எதுவும் ஏற்படாதவாறு நீங்களும் உங்கள் மனைவியும் அனைத்து வகையான வேலைகளையும் பிரித்துக்கொள்ள வேண்டும். அது வீட்டு வேலையாக அல்லது பிற வேலையாக இருக்கலாம்; அனைத்தையும் சமமாகப் பிரிக்க வேண்டும். இது உங்கள் உறவின் சமநிலையை பராமரிக்க உதவும். இல்லையெனில் நீங்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்ட ஆரம்பிக்கலாம்.
உங்கள் துணைக்கு நீங்கள் எப்போதுமே ‘முதல் சாய்ஸ்’ இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழியுங்கள்!
நீங்கள் பெறும் பேரன்பை திருப்பிக்கொடுக்க தயங்க வேண்டாம். கணவரிடமோ, மனைவியிடமோ அன்பை வெளிப்படுத்த தயக்கம் அறவே இருக்க கூடாது. ஏனெனில் உங்கள் லைஃப் பார்ட்னரால் தான் தேவைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற முடியும் மற்றும் உங்களின் நேர்மறையாக வைத்திருக்க முடியும். அன்பை பரிமாறிக்கொள்வது என்பது - நம்பிக்கை, நேர்மை, புரிதல் என கிட்டத்தட்ட அனைத்திற்குமே வழிவகுக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage Life, Marriage Problems, Relationship Fights, Relationship Tips