Home /News /lifestyle /

உங்கள் வாழ்க்கைத் துணை உணர்ச்சி ரீதியாக உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை புரிந்து கொள்வது எப்படி..?

உங்கள் வாழ்க்கைத் துணை உணர்ச்சி ரீதியாக உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை புரிந்து கொள்வது எப்படி..?

காதல்

காதல்

”உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம்’’ என எந்தவொரு விஷயத்திலும் இதே வசனத்தை சொல்வார்கள். இது ஒரு வகையில் தான் நினைத்ததை செய்ய வைக்கும் ஆதிக்கம் தான்.

எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடிய கணவர் அல்லது மனைவி உங்களுக்கு அமைந்திருக்கிறார்களா? ரொம்பவும் கவலை வேண்டாம். 10 குடும்பங்களை கணக்கில் கொண்டால் 9 குடும்பங்களில் இதுதான் நிலை. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை உணர்ச்சி ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதை அறியாதவராக அல்லது உணராதவராக நீங்கள் இருக்கக் கூடும்.

உதாரணத்திற்கு, “உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம்’’ என எந்தவொரு விஷயத்திலும் இதே வசனத்தை சொல்வார்கள். இது ஒரு வகையில் தான் நினைத்ததை செய்ய வைக்கும் ஆதிக்கம் தான். அதாவது, அவர்கள் சொன்னதை செய்யாவிட்டால் உணர்ச்சி வயப்பட்டு கோபம் அடைவார்கள். இதுபோல நிறைய விஷயங்கள் உண்டு. அவற்றை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் எதையும் சொந்தமாக முடிவு செய்ய இயலாது :

சமூக ரீதியான எந்தவொரு காரியத்தையும் நீங்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை உங்கள் வாழ்க்கை துணை முடிவு செய்வார். அதாவது, பிறரிடம் நீங்கள் எப்படி பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, எந்த விஷயம் என்றாலும் என்னிடம் சொல்லாமல் செய்யக் கூடாது என்ற நிர்பந்தத்தை உங்கள் மீது ஏற்படுத்துவார்கள். இதை ஒரு வகையான ஆபத்தான அறிகுறி ஆகும்.

Relationship Lies

பிறர் முன்னிலையில் எரிந்து விழுவது :

மற்றவர்கள் முன்னிலையில் நம்மை அவமதிக்க யாருக்குமே உரிமை கிடையாது. அது பெற்றோர் என்றாலும் அப்படித்தான். ஆனால், 4 பேர் இருக்கும் சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை அவ்வபோது குரலை உயர்த்தி பேசி, உங்களுக்கு எதிராக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். எரிந்து விழுந்து பேசுவதால் எந்தவித பலனும் கிடைக்காது. மாறாக, இருவருக்கும் இடையே வெறுப்புணர்ச்சி தான் மேலோங்கும்.

பிற பெண்களிடம் வழிந்து பேசும் உங்கள் கணவர் அல்லது காதலரை கையாளுவது எப்படி..?

மிரட்டிப் பணிய வைப்பது :

உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் வாழ்க்கை துணைவர் எப்போதுமே ஒரு விஷயத்தை எளிமையாக, அமைதியாக சொல்லவே மாட்டார்கள். குறிப்பாக, “அப்புறம் பாரு’’ என்ற தொனியில் மிரட்டியபடியே பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த மிரட்டல் என்பது இருவருக்கும் இடையே பிரிவை உண்டாக்கும்.



உங்களை நீங்கள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும் :

எப்போதுமே ஆரோக்கியமான விவாதம் இன்றி, உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது என்றால், இதை உணர்ச்சி ரீதியான ஆதிக்கம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து எப்போதும் பாதுகாப்பு அரண் அமைத்து நீங்கள் வாழ முடியாது.

மிகத் தீவிரமாக குறை சொல்வது :

ஒன்றன் மீது ஒன்றாக குறை சொல்லி, சொல்லி திட்டுவார்கள். இதனால், நம்மை நாமே குற்றவாளியாக உணரத் தொடங்குவோம். தன்னம்பிக்கை இழக்கும் சூழல் வரும். இதை நீங்கள் பொறுத்துக் கொண்டீர்கள் என்றால், இதேபோன்று குறை கூறும் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship Tips

அடுத்த செய்தி