ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்திற்கான காரணம் இதுதானா..?

ஆண்களின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்திற்கான காரணம் இதுதானா..?

ஆண்களின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்திற்கான காரணம்

ஆண்களின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்திற்கான காரணம்

சுற்றியிருப்பவர்கள் முன்பு தனது சுயமரியாதை, நன்மதிப்பு, கம்பீரம் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய பெரும் சுமை ஆண்களுக்கு உள்ளது. பெரும்பாலான ஆண்கள் தங்களை ஸ்ட்ராங்கானவர்களாக காட்டிக் கொண்டாலும், சிலர் மனம் உடைந்து போவது, சுயமரியாதை குறைவது, பாதுகாப்பின்மை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமூகத்தை பொறுத்தவரை எப்போதுமே ஆண் என்றாலே அவர் உறுதியான மனப்பான்மையும், திடமான மன உறுதியும் கொண்ட எஃகு மனிதன் போல் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சுற்றியிருப்பவர்கள் முன்பு தனது சுயமரியாதை, நன்மதிப்பு, கம்பீரம் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய பெரும் சுமை ஆண்களுக்கு உள்ளது.

பெரும்பாலான ஆண்கள் தங்களை ஸ்ட்ராங்கானவர்களாக காட்டிக் கொண்டாலும், சிலர் மனம் உடைந்து போவது, சுயமரியாதை குறைவது, பாதுகாப்பின்மை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இப்படியான நிலைமைகளில் ஆண்களுக்கு தான் ஒரு ஆண் என்ற எண்ணம் காயப்படுகிறது. அப்படி தனது ஆண்மை காயப்பட்டதாக கருதும் நபர்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில அறிகுறிகள் மூலமாக கண்டறியலாம்.

1. சத்தமாக பேசுவது:

தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அஞ்சி நடுங்கும் வகையில், சத்தமான குரலில் பேசுவது தான் ஒரு ஆண் என்பதை நிரூபிக்க விரும்பும் நபர்களின் தொனியாகவே இருக்கும். இவர்கள் எப்போதுமே பேசும் தொனியும், குரலும் மென்மையாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள்.

2. அமைதியற்றத் தன்மை:

கொஞ்சம் நேரம் கூட இவர்களால் அமைதியாக இருக்க முடியாது. எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஓட்டம், இந்த வகை ஆண்களிடம் காணப்படும். செய்து முடிந்த வேலையை திரும்ப, திரும்ப சரி பார்ப்பது, எதிலும் திருப்தி அடையாத மனநிலையுடன் காணப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தன்னால் மட்டுமே இந்த காரியத்தை சரியாக செய்து முடிக்க முடியும் என்ற எண்ணமும், அதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

Also Read : முதிர்ச்சியடைந்த காதலுக்கும் சிறுபிள்ளைத்தனமான காதலுக்கும் இதுதான் வேறுபாடு!

3. எளிதில் கோபப்படுவது:

தனக்கு நேர்ந்த அவமானங்கள், சுயமரியாதை காயப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத ஆண்கள், எளிதில் கோபப்படும் நபர்களாக இருப்பார்கள். ஒரு சின்ன தவறுக்கூட உச்சபட்ச தண்டனை தரும் அளவிற்கு அவர்களது கோபம் கட்டுப்பாடற்றதாக இருக்கும். தனது ஆளுமையை நிரூபிப்பதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்ல தயராக இருப்பார்கள்.

4. அளவுக்கு அதிகமாக யோசிப்பது:

சுற்றியிருப்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி அதிகம் கவலைபடும் நபர்களாக இருப்பார்கள். இதனால் கூடுதல் மன அழுத்தம், தேவையற்ற குழப்பத்திற்கு ஆளாவார்கள். இந்த வகை ஆண்களால் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

5. பழக கடினமான நபர்கள்:

சமூகத்தில் சிறப்பான அங்கீகாரம் பெற நினைக்கும் ஆண்கள் எளிதில் பழக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் தங்களது ஆண்மை காயம் பட்டதாக நினைக்கும் நபர்கள், தங்களது வழியை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்களாகவும், யாருடனும் எளிதில் பழக விரும்பாத கடினமான நபர்களாகவும் இருப்பார்கள்.

6. நிகழ்கால நினைவே இருக்காது:

ஆண்மை காயப்பட்டதாக நினைக்கும் ஆண்கள் எப்போதும் நிகழ் காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை எண்ணி கவலைப்படும் நபர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியான தருணங்களையும், சந்தோஷமான வாழ்க்கையையும் வாழாமல் தேவையில்லாத எண்ணம் ஓட்டம் காரணமாக வாழ்க்கையை இழக்கும் நபர்களாக இருப்பார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Anger, Relationship Tips