ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Love Tips: உங்கள் எக்ஸ் மீது இன்னும் காதல் குறையவில்லையா..? மீண்டும் சேர நினைக்கிறீர்களா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Love Tips: உங்கள் எக்ஸ் மீது இன்னும் காதல் குறையவில்லையா..? மீண்டும் சேர நினைக்கிறீர்களா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சிந்தனை : நீங்கள் உடலுறவு கொள்ளும் நபரைப் பற்றி சிந்திக்காமல் உங்களை உடல் ரீதியாக திருப்திப்படுத்துவது பற்றி மட்டும் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், அது சாதாரண செக்ஸ் தான். ஆனால் நீங்கள் அவரின் தேவைகளைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்றாலோ, அவரின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தீர்கள் எனில் அது அவர் மீதான காதல். நீங்கள் காதலிக்கும் நபருடன் உடல் ரீதியாக ஈடுபடும்போது அவருடன் மிகவும் மென்மையாக இருப்பீர்கள். அப்படியெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

சிந்தனை : நீங்கள் உடலுறவு கொள்ளும் நபரைப் பற்றி சிந்திக்காமல் உங்களை உடல் ரீதியாக திருப்திப்படுத்துவது பற்றி மட்டும் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், அது சாதாரண செக்ஸ் தான். ஆனால் நீங்கள் அவரின் தேவைகளைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்றாலோ, அவரின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தீர்கள் எனில் அது அவர் மீதான காதல். நீங்கள் காதலிக்கும் நபருடன் உடல் ரீதியாக ஈடுபடும்போது அவருடன் மிகவும் மென்மையாக இருப்பீர்கள். அப்படியெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவர் மீது காதல் தோன்றி அந்த காதலை வெளிப்படுத்தி, அதை ஏற்றுக்கொள்வதற்கு நேரம், காலம் மற்றும் முயற்சி ஆகியவைத் தேவை. அதே போல் தான் அதிலே இருந்து முழுதாக விடுபடுவதற்கும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

முன்னாள் காதலன் அல்லது காதலியை எக்ஸ் என்று குறிப்படுவது பழக்கமாகி விட்டது. பல காரணங்களுக்காக நீங்கள் உங்கள் எக்ஸை விட்டுப் பிரிந்தாலும், மீண்டும் உங்கள் மனம் அவரையே தேடுகிறதா? உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை நீங்கள் இன்னும் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மீது காதல் தோன்றி அந்த காதலை வெளிப்படுத்தி, அதை ஏற்றுக்கொள்வதற்கு நேரம், காலம் மற்றும் முயற்சி ஆகியவைத் தேவை. அதே போல் தான் அதிலே இருந்து முழுதாக விடுபடுவதற்கும்.

பிரேக்அப் ஆகி ஒரு வருடம் ஆனாலும், ஏன் இன்னும் என்னால் என் காதலன் / காதலியை மறக்க முடியவில்லை?

பிரிந்து சென்ற காதலை, மறப்பது அத்தனை சுலபமில்லை. எவ்வளவு வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் இருந்தாலும், காதல் மறக்க முடியாத பல நினைவுகளை அள்ளித் தந்திருக்கும். அதை நீங்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்த நபரை மறப்பதற்கு நீண்ட காலம் ஆகும். பரிசுகள் வாங்கி, அழகான தருணங்களை உருவாக்கி, அனைத்தையும் பகிர்ந்த நாட்கள், விலகிச் சென்ற பின்னும் நினைவில் தங்கி பாதித்துக் கொண்டே இருக்கும். அதனால், உங்கள் எக்ஸ் இடமிருந்து முழுவதுமாக விலகிச் சென்றிட முடியாது. நீங்கள் மற்றொரு உறவில் இணைந்தால் கூட, இன்னொருவரை காதலிக்கத் தொடங்கினால் கூட, உங்களின் தற்போதைய உறவுக்கு இது பாதிப்பாக இருந்தால் கூட, உங்கள் எக்ஸ் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.

நீங்கள் உங்கள் முன்னாள் காதலன்/காதலியை இன்னும் விரும்புகிறீர்களா?

உங்கள் கடந்த கால காதலை மறக்க முடியாது:

நீங்கள் எப்போதோ பிரிந்து சென்றிருக்கலாம். உங்கள் உறவு சில மாதங்கள் மட்டுமே கூட இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களுடன் செலவிட்ட அந்த நாட்களையே அசைப்போட்டுக் கொண்டிருக்கக்கூடும். நீங்கள் உங்கள் எக்ஸ் உடன் எவ்வளவு காலம் உடன் இருந்திருக்கிறீர்களோ, பிரிவில் இருந்து மீண்டு வர, அதில் பாதியளவு காலம் தேவைப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. நீங்கள் இணக்கமான, நெருக்கமான மற்றும் பராமரித்துக் கொண்ட காதலர்களாக இருந்தீர்கள் என்றால் அந்த பிரிவில் இருந்து வெளிவரும் காலம் அதிகமாகலாம்.

Love Tips : காதலில் ஒருபோதும் இந்த 6 விஷயங்களை மட்டும் விட்டு கொடுத்துடாதீங்க..!

உங்கள் எக்ஸ் பற்றியே பேசிக்கொண்டு இருப்பீர்கள்

அவ்வபோது, உங்கள் பிரிந்து சென்ற காதலைப் பற்றியும், எக்ஸ் பற்றியும் பேசுவது இயல்பானது. ஆனால், அடிக்கடி நீங்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது, நீங்கள் முழுதாக விலகி வரவில்லை என்பதைக் குறிக்கிறது. நீங்கள் தொடர்ந்து இப்படிச் செய்வது, உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரைக் கூட சோர்வடையச் செய்து விடும்.

புதிய காதலும், பழைய நினைவுகளுடன் நீங்களும்

நீங்கள் தற்போது புதிய உறவில், அழகான, இணக்கமான மற்றும் ரொமாண்டிக்கான உறவில் இருந்தாலும் கூட, நீங்கள் அடிக்கடி உங்கள் எக்ஸ் பற்றி நினைப்பது, அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, உங்கள் புதிய உறவில் உங்களால் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் அனைத்தையும் உங்கள் எக்ஸ் உடன் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் முழுவதுமாக விலகி வர நீண்ட காலம் ஆகும் என்பது கசப்பான உண்மை.

ஸ்பீட்-டயலில் எக்ஸ் எண்

பிரேக்கப் ஆன பிறகு, ஒட்டுமொத்தமாக தொடர்பை துண்டிக்க வேண்டும் என்பதைக் கூறவில்லை. பிரிந்த பிறகும், எக்ஸ் மொபைல் எண் உங்கள் தொலைபேசியில் இருப்பது, சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவரைத் தொடர்பு கொள்வது சரியான அறிகுறி அல்ல. உங்கள் நாள் மோசமாக இருந்தாலும், வேலை பளு அதிகமாக இருந்தால், வீட்டில் சண்டை என்றால், உடனே நீங்கள் ஸ்பீட்-டயலில் இருக்கும் உங்கள் எக்ஸ் எண்ணுக்கு அழைத்தால், நீங்கள் அவரை இன்னும் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி

திருமணங்கள் மட்டுமல்ல, காதலும் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது போல அவ்வளவு பொருத்தமான காதல், இணை உங்களுக்குக் கிடைத்திருக்கலாம். அந்த காதலில், எந்த எதிர்மறை விஷயமும் கண்டுபிடிக்கவே முடியாமல் போயிருக்கலாம். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கையில் உங்கள் காதலைத் தவிர எதுவுமே சரியானதாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகளைக் கண்டுபிடித்தால், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முடியும் என்று பலரும் கூறியுள்ளனர்.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பாராட்டுகள்..! இனியும் இப்படியெல்லாம் ஒருவரை பாராட்டாதீர்கள்..!

கவனச்சிதறல்

மிகவும் பிஸியான வாழ்க்கை, நேரமின்மை என்று இருந்தாலும், உங்கள் நினைவு உங்கள் எக்ஸ் பற்றியே இருக்கிறது என்றால், நீங்கள் முழுமையாக உறவில் இருந்து பிரியவில்லை. பிரேக்கப் ஆன பிறகு, மனதை வெறுமையாக வைக்காமல், நாள் முழுவதும் எதிலாவது கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான சிந்தனையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Love breakup, Love Tips