நீங்கள் எப்போதுமே உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதியா? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

சுயநலம்

சுய சிந்தனையில் நீங்கள் மூழ்கிப் போகிறீர்கள் என்பதற்கான முக்கியமான மற்றும் வெளிப்படையான அறிகுறி

  • Share this:
எப்போதுமே தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும், தன்னுடைய நலத்தை பற்றியே சிந்திக்குக் கொண்டிருக்கும், தனக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்கும் நபர்கள் நம்மிடையே உண்டு. எந்த சுயநலவாதியும், ‘உங்களை பெரும்பாலும் பற்றி மட்டுமே நினைக்கிறீர்கள்’ என்று கேட்பதை விரும்பமாட்டார்கள். அதே போல, தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்களுடன் இருப்பது மிகவும் கடினமானது.

இதைப் போல சுய-சிந்தனையில் ஆழும் நபர், சுயநலவாதி என்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். மேலும், தங்களை அதிகமாக நேசிக்கும் பொருட்டு, மனநலத்தை கெடுத்துக் கொள்வார்கள், மற்றவர்களையும் காயப்படுத்துவார்கள். அதனாலேயே, இவர்களிடம் பழகுவதற்கு நிறைய நபர்கள் தயங்குவார்கள், விலகியே இருப்பார்கள்.

இதே போல, உங்களை சுற்றி உள்ளவர்கள் விலகி செல்வதை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நபராக இருக்கலாம். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுய-சிந்தனையில் ஆழ்பவராக மாறிக்கொண்டு வருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே.இறுதி முடிவு எடுப்பவர் நீங்களாகவே இருப்பீர்கள் :

சுய சிந்தனையில் நீங்கள் மூழ்கிப் போகிறீர்கள் என்பதற்கான முக்கியமான மற்றும் வெளிப்படையான அறிகுறி, எல்லா இறுதி முடிவுகளையும் எடுப்பது நீங்களாகவே இருக்கும். அது, சாதாரண டின்னராக இருக்கலாம் அல்லது விடுமுறையாக இருக்கலாம், எல்லாரும் என்ன அணிந்து கொள்ள வேண்டும் என்பது முதல் முதலீடு செய்வது முதல் விலை மதிப்புள்ள பொருட்கள் வாங்குவது வரை உங்கள் முடிவே, இறுதி முடிவு.

எல்லாருமே உங்களுக்கு போட்டி என்று நினைக்கிறீர்கள்

நீங்கள் அனைவரையுமே போட்டியாக நினைக்கலாம். உங்கள் திறமைகள், சாதனைகள் பற்றி எப்போதுமே பெருமை பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள அனைவரையுமே போட்டியாக நினைக்கிறீர்கள். அவர்களை எப்படியாவது வென்றிட வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்வீர்கள்.

உங்கள் கணவர் கடுமையான கோபக்காரரா..? அவரை சமாளிக்க சூப்பரான சில டிப்ஸ்..!

சூழ்ச்சியாக மற்றவர்களை உங்கள் பக்கம் திருப்புவதில் கை தேர்ந்தவர்

மேனிபுலேஷன் என்று கூறப்படும், மற்றவர்களை உங்களுக்கு ஏற்றது போல மாற்றிக் கொல்லும் திறன் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறீர்கள் என்று அர்த்தாம். உணர்வு ரீதியாக அச்சுறுத்துவது, தற்காத்துக் கொள்ள அடுத்தவர்களை பகடையாக்கும் செயல்கள் ஆகியவற்றை நீங்கள் சுலபமாக செய்வீர்கள். எனவே, உங்களின் இந்த நடவடிக்கைகளால், உங்களுக்கு யாருமே உதவி செய்ய முன்வரத் தயங்குவார்கள்.நச்சுத்தன்மை நிறைந்த குணநலன்

நீங்கள் யாருக்காகவும் இரக்கப்பட மாட்டீர்கள். அடுத்தவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப் படாமல், என்ன சொல்ல வேண்டுமோ, அதை சொல்கிறேன் என்பதை நிலைநிறுத்துவீர்கள். அதே போல, ஒரு உறவைக் காத்துக்கொள்ள, என்ன சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, சரளமாக, பொய் சொல்லி, போலியான ஆறுதலைத் தர தயங்கமாட்டீர்கள்.

எப்போதும் நீங்கள் தான்!

யார் எதைப்பற்றி பேசினாலும், அந்த உரையாடலை உங்களை பற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்று மாற்ற முயற்சி செய்வீர்கள். போலியான பாராட்டும், பேச்சும் கூறி, மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசுவதற்கான விஷயங்களை முன்னிறுத்துவீர்கள்.அனைவரும் உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்

எந்த இடத்தில் இருந்தாலும், அனைவரின் ஈர்ப்பு மையமாக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள், அல்லது மற்றவர்களை அதற்காக வருத்தப்படும் அளவுக்கு நீங்கள் ஏதேனும் செய்யக்கூடும். அலுவலக மீட்டிங், பயிற்சி, நண்பர்களுடன் இருக்கும் போது, ஏன் குடும்பத்திலும், உங்களை மையப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

 
Published by:Sivaranjani E
First published: