• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் அதிக சென்ஸிட்டிவான ஒரு நபர் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்...

நீங்கள் அதிக சென்ஸிட்டிவான ஒரு நபர் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்...

சென்சிடிவ் நபர்

சென்சிடிவ் நபர்

திக சென்ஸிட்டிவிட்டி ஒரு ஆளுமைப் பண்பாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க உளவியல் சங்கம் (ஏபிஏ) பெரிய 5 ஆளுமைப் பண்புகளில் ஒன்றாக இதை வகைப்படுத்தவில்லை.

  • Share this:
அதிக சென்ஸிட்டிவ் கொண்ட நபராக இருப்பது உங்களை தனித்து அல்லது வித்தியாசமாக உணர வைக்கும். நீங்கள் ஈசியாக எரிச்சலடைய கூடிய நபர் என்றால், அதிக சென்ஸிட்டிவ் தன்மை கொண்டவர் நீங்கள். இருப்பினும் சென்ஸிட்டிவ் அதிகம் இருப்பது ஒரு கோளாறு அல்ல, அதுவும் ஒரு ஆளுமை பண்பு தான் என்றும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதிக சென்ஸிட்டிவிட்டி ஒரு ஆளுமைப் பண்பாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க உளவியல் சங்கம் (ஏபிஏ) பெரிய 5 ஆளுமைப் பண்புகளில் ஒன்றாக இதை வகைப்படுத்தவில்லை.

அதிக சென்ஸிட்டிவ் திறன் கொண்ட நபருக்கு உண்மையில் அதிகசென்ஸிட்டிவ் திறன் கொண்ட நரம்பு மண்டலம் உள்ளது. இந்த பண்பை கொண்டுள்ளவர்கள் பிறர் தங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். உங்களை பற்றிய மற்றவரின் உண்மை கருத்துக்கள், உங்கள் மீதான நியாயமான விமர்சனங்கள், கிசுகிசுக்கள் என அனைத்துமே உங்களை சீண்டி தொந்தரவு செய்யும். கீழே நீங்கள் சென்ஸிட்டிவ் தன்மை உடையவர் என்பதை உணர்த்துவதற்கான சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.

கவன சிதறல்:

உங்களை பற்றி யாராவது ஏதாவதொரு கருத்தை அல்லது விமர்சனத்தை நேரடியாக சொல்லாமல், தொலைதூரத்திலிருந்து சொன்னால் கூட நீங்கள் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கவலைப்படுவீர்கள். உதாரணமாக வேலை பார்க்கும் இடத்தில் உயரதிகாரியிடமிருந்து ஒரு மெயில் வருகிறது. உங்கள் வேலையில் ஒரு திருத்தம் செய்ய சொல்லி அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அந்த மெயிலை படித்த பிறகு அதை விட்டு அடுத்த வேலைக்கு செல்லாமல், எதற்கு திருத்தம் செய்ய சொன்னார், ஏன் சொன்னார் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு எதோ அலுவலக பணியில் முழுவதும் தோல்வி அடைந்தது போல உணருவீர்கள். வேலையில் கவனம் செலுத்தாமல் உங்கள் மனநிலை அமைதியற்றதாகி பதற்றம், கவலையாக உணருவீர்கள்.



சத்தம் :

வீடு, அலுவலகம் மற்றும் பயணங்களின் போது உங்கள் அருகில் இருப்போர் உணவு அல்லது நொறுக்கு தீனியை சத்தமாக சாப்பிடும் சத்தம் உங்களை மிகவும் எரிச்சலடைய செய்யும். இதை பார்க்கும் பலர் நீங்கள் ஓவராக ரியாக்ட் செய்கிறீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அனாவசிய சத்தங்களை நீங்கள் வெறுப்பீர்கள். இந்த நிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் உரத்த ஒலிகளை விரும்பாத சென்ஸிட்டிவ் தன்மை உடையவர். நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் இதை புறக்கணிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.

பொதுவெளியில் எரிச்சல் :

பொதுவெளியில் பலர் முன்னிலையில் யாராவது உங்களை பற்றி சிறிதாக ஏதாவது சொல்லி விட்டால் கூட நீங்கள் கடும் எரிச்சலுக்கு ஆளாவீர்கள். நீங்கள் மற்றவரை பற்றி எதாவது பலர் முன் கூறும் போது, ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து பேசும் பழக்கம் கொண்டவராக இருக்கும் போது, சிலர் அதை பற்றி கருத்தில் கொள்ளாமல் இப்படி பலர் இருக்கும் போது நம்மை பற்றி கூறுவது ஏன் என்று சிந்தித்து அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். எதையும் பலர் இருக்கும் போது சொல்வதற்கு முன் யோசித்து பேசாதவர்களை நீங்கள் வெறுப்பீர்கள்.



கேலி :

மற்றவர்கள் நகைச்சுவைக்காக உங்களை கேலி செய்யும் போது நீங்கள் விரக்தி அல்லது கோபத்தை உணர்ந்தால் சென்ஸிட்டிவ் தன்மை கொண்ட நபராக இருக்கிறீர்கள். மற்றவர்களின் கேலியை உங்களால் சிறிதும் பொறுத்து கொள்ள முடியாமல் அவர்களின் செய்கை உங்களை தொந்தரவு செய்யும்.

ஒரு பெண் கூட உங்களை திரும்பி பார்க்கவில்லையா..? அப்ப இதை செய்து பாருங்கள்..

நெரிசலான இடங்களை தவிர்ப்பது:

கூட்டம் அதிகமுள்ள அல்லது நெரிசலான இடங்களுக்குச் செல்வதற்கு நீங்கள் மிகவும் தயக்கமாக, சங்கடமாகவும் உணர்கிறீர்கள் என்றால் அந்த உமர்த்திறன் உங்களை பெரிதும் ஆட்கொள்கிறது என்று அர்த்தம். உரத்த சத்தம், சலசலப்பு மற்றும் கூட்ட நெரிசல்கள் உங்கள் மனம் ஏற்று கொள்ள ஏதோ ஒரு விதத்தில் மறுக்கிறது. ஒருவேளை தவிர்க்க முடியாமல் நீங்கள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு சென்றால் மிகவும் எரிச்சலாக உணர்வீர்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: