Home /News /lifestyle /

நீங்கள் ஒருவர் மீது கண்மூடித்தனமான அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள்

நீங்கள் ஒருவர் மீது கண்மூடித்தனமான அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள்

காதல்

காதல்

கண்ணை மூடி கொண்டு ஒருவர் மீது நீங்கள் அன்பு செலுத்தினால், இறுதியாக உங்களுக்கு வலியையும், வேதனையையும் அது தரக் கூடும்.

யார் ஒருவர் மீதும் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவது நல்லதல்ல. ஒருவர் மீது நீங்கள் நிபந்தனையற்ற அன்பு வைத்துள்ளீர்கள் என்றாலும் கூட, உங்கள் நடவடிக்கைகள் என்ன, நீங்கள் பேசும் வார்த்தைகள் என்ன என்பது குறித்து நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கண்ணை மூடி கொண்டு ஒருவர் மீது நீங்கள் அன்பு செலுத்தினால், இறுதியாக உங்களுக்கு வலியையும், வேதனையையும் அது தரக் கூடும். ஆகவே, நாம் ஒருவர் மீது அளவற்ற அடிமைத்தனத்துடன் அன்பு கொண்டிருகிறோமா என்பது பின்வரும் அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சினைகளை புறம் தள்ளுவது

எந்தவொரு உறவும் சிக்கல்கள் இன்றி அமையாது. ஒரு உறவை வழிநடத்திச் செல்லுகையில் எண்ணற்ற தடைகளும், பிரச்சினைகளும் குறுக்கிடும். உங்கள் ஃபார்ட்னருடன் செலவிடும் நேரத்தை கெடுப்பதாகக் கூட அவை அமையும். அது போன்ற சமயங்களில் பிரச்சினை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்க்காமல், இனி வரும் காலம் நன்றாக இருக்கும் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், குறிப்பிட்ட அந்த நட்புறவில் நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்று பொருள்.

உயர்வும், தாழ்வும்

ஒரு சமயத்தில் உங்கள் நட்புறவு குறித்து மிகவும் உயர்வாக, உலகிலேயே சிறந்ததாக கருதிக் கொண்டிருப்பீர்கள். மற்றொரு சமயத்தில் அதே நட்புறவு தரம் தாழ்ந்ததாகத் தோன்றும். இப்படி நிலையானதொரு எண்ணத்தில் இல்லாமல், உயர்வும், தாழ்வும் மாறி, மாறி வந்து கொண்டே இருந்தால், உங்கள் நட்புறவு வலுவானதாக இல்லை என்றே பொருள். இந்த ஏற்ற, இறக்கங்களுடன் இதை தொடர்வதைக் காட்டிலும், அதை விட்டு விலகுவதே சிறந்தது.



எப்போதும் அதையே நினைத்துக் கொண்டிருப்பது

பழகும் சமயங்களில் இருவரை பற்றி பேசுவது, சிந்திப்பது இயல்பானது. மற்ற சமயங்களில் நம் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் நம் கவனம் அமைய வேண்டும். அப்படி இல்லாமல், எப்போதும் உங்கள் அன்புக்குரியவர் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தால், அவருக்கு நீங்கள் அடிமையாகிக் கொண்டுள்ளீர்கள் என்றே அர்த்தம்.

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

எதுவும் சரி என்று தோன்றாது

எப்போதுமே நீங்கள் குழப்ப நிலையில் இருப்பீர்கள். உங்களுக்கான பாதையை நீங்களே மறந்து விடக் கூடும். ஒருவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கும்போது உங்களை பற்றிய நினைப்பு உங்களுக்கு இருக்காது. ஏனென்றால், உங்கள் நட்புறவில் இருப்பவரை சுற்றியே உங்கள் சிந்தனை முழுவதும் இருக்கும். ஆகவே, நீங்கள் செய்யும் எந்தவொரு காரியமும் உங்கள் சரி என்று தோன்றாது.



உங்கள் மீதே நம்பிக்கை இழப்பீர்கள்

எல்லையில்லாத பந்தம் என்ற ஒன்றில் நீங்கள் சிக்கியிருக்கும்போது, உங்கள் திறமை என்னவென்று உங்களுக்கே மறந்துவிடும். எப்போதும், நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். எந்தவொரு விஷயமானாலும், அதுகுறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் உங்கள் மீது உங்களுக்கே முழுமையான வெறுப்பு தோன்றிவிடும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship Tips

அடுத்த செய்தி