Home /News /lifestyle /

உங்கள் மீது பிறர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

உங்கள் மீது பிறர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

காதல்

காதல்

நண்பர் என்றாலும், அல்லது உங்கள் கணவன் அல்லது மனைவி என்றாலும் உங்கள் மீது ரகசியமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பதை நீங்கள் தக்க சமயத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன் என்ற பெயரில், உங்கள் தனிப்பட்ட சுதந்திரம், வாழ்க்கை உள்ளிட்டவற்றில் ஊடுருவி, ஒரு நபர் தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதைத்தான் ஆதிக்கம் என்கிறோம். பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் நபர்கள், அதை ரொம்பவே ரகசியமாக செய்வார்கள். ஆதிக்கத்தால் யார் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களாலேயே அதை உணர முடியாது. உணர்வு ரீதியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆதிக்கமும் நல்லதல்ல.

நண்பர் என்றாலும், அல்லது உங்கள் கணவன் அல்லது மனைவி என்றாலும் உங்கள் மீது ரகசியமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பதை நீங்கள் தக்க சமயத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், காலம் முழுவதும் அடுத்த நபரின் விருப்பத்தின்படி வாழுவதே உங்கள் கடமை என்றாகிவிடும். ஆகவே, ஒரு நபர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது

ஒரு நபர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறேன் என்ற பெயரில், உங்கள் குணாதிசயம், பழக்க, வழக்கங்கள் குறித்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார். இதில், உண்மையிலேயே ஏதேனும் நல்ல விஷயம் இருந்தால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். மாறாக, உங்களின் இயல்பான குணங்கள் குறித்து சர்வ காலமும் குறை சொல்லிக் கொண்டிருக்கும்போது உங்களுக்கே உங்கள் மீது ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படக் கூடும். நாளடைவில் உங்களை நினைத்து நீங்களே அதிகமாக கவலைப்பட தொடங்குவீர்கள். இது பிறர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதன் தொடக்கம் ஆகும்.



நம்பிக்கை இழக்க வைப்பது

ஆதிக்கம் செலுத்தும் நபர்கள், உங்கள் எண்ண ஓட்டங்களில் ஊடுருவி உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து விடுவார்கள். இதனால், நீங்கள் எந்தவொரு காரியத்தை செய்யும்போதும் உங்கள் மீது நம்பிக்கை ஏற்படாது. உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ள தொடங்குவீர்கள் அல்லது நம்மால் இதை செய்ய முடியுமா என்று சந்தேகம் அடைய தொடங்குவீர்கள்.

உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

உங்கள் மீது நிபந்தனைகள்

நம் மீது ஆதிக்கம் செலுத்தும் நபர் செய்யும் மிக மோசமான காரியம் இது. அவர்களுடன் பழகுவதற்கு இன்னென்ன நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களுக்கு கட்டளையிடுவார்கள். ஆனால், நீங்கள் எந்தவித நிபந்தனைகளையும் அவர்கள் மீது விதிக்க முடியாது. அந்த நபர்கள் விதிக்கும் நிபந்தனைகளை செய்யாவிட்டால், உங்களை நீங்களே குற்றவாளியாக உணரும்படி செய்து விடுவார்கள்.



உங்கள் பலவீனங்களை பயன்படுத்திக் கொள்வார்கள்

ஒரு நபரின் ஆதிக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும்போது, உங்கள் பலவீனம் எது என்பதை அவர்கள் மிக நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு, உங்களை கட்டுப்படுத்த தொடங்குவார்கள். சில சமயம், உங்களைப் பற்றி பிறரிடம் எண்ணற்ற குறைகளை சொல்லி, உங்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி விடுவார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship Tips

அடுத்த செய்தி