• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் நண்பர்கள் போலியாக பழகுகிறார்களா..? கண்டறிய இந்த நடவடிக்கைகளை கவனியுங்கள்..!

உங்கள் நண்பர்கள் போலியாக பழகுகிறார்களா..? கண்டறிய இந்த நடவடிக்கைகளை கவனியுங்கள்..!

போலியான நண்பர்கள்

போலியான நண்பர்கள்

எத்தனை வகையான நண்பர்கள் இருந்தாலும், போலியான நண்பர் என்ற வகையினர் உங்கள் நண்பனாக இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • Share this:
‘நீங்கள் என்ன செய்தாலும், அதைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கு தெரிவில்லை என்றால், அது முக்கியமானது அல்ல’ என்று மிகவும் சரியாகக் கூறினார் பார்னி ஸ்டின்ஸ்டன். நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக, உற்சாகமாக இருக்கும். நாம் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் நண்பர்கள் தான். எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும், நண்பர்கள் இருப்பது அதை சுலபமாக எதிர்கொள்ள உதவும்.

நம் அனைவருக்குமே பல விதமான நண்பர்கள் குழு இருக்கிறது. பள்ளி நண்பர்கள் முதல் பணியிட நண்பர்கள் வரை, பயண நண்பர்கள் முதல் ஆலோசனை கேட்கும் நண்பர்கள் வரை. அதிலே, சிலரை மட்டுமே நாம் சிறந்த நண்பர்களாக, ‘பெஸ்ட்டி’ எனப்படும் ‘பெஸ்ட் ஃபிரெண்டாகவும் கருதுகிறோம்.

எத்தனை வகையான நண்பர்கள் இருந்தாலும், போலியான நண்பர் என்ற வகையினர் உங்கள் நண்பனாக இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் தன்னுடைய சுயநலத்துக்காக, தேவைக்காக சர்க்கரையை தூவியது போன்று பேசுபவர்கள். என்ன நடந்தாலும், இவர்களின் நட்பு மட்டுமின்றி, தகவல் தொடர்பையும் உடனே முழுவதுமாகத் துண்டிக்க வேண்டும். போலி நண்பர்களிடம் இருந்து விலகியும் இருப்பது நல்லது.

போலி நண்பர்கள் என்பதை கண்டறிவது எப்படி? உங்கள் நட்பு வட்டாரத்தில், பின்வரும் அறிகுறிகள் காணப்படுகிறதா என்று பாருங்கள். பின்வருவன போலி நண்பர்களின் அறிகுறிகள்.



தேவை இருந்தால் மட்டுமே அழைப்பார்கள் / பேசுவார்கள் :

உங்கள் மொபைல் ஃபோனில் அவர்களின் பெயர் கொண்ட அழைப்பு டிஸ்ப்ளே ஆகிறதா? ‘பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னுடைய நாய்க்குட்டியை இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்?’ என்று, தொடங்குவார்கள். இதிலே அவர்களின் கோரிக்கை இருக்காது. ‘இதைச் செய்’ என்ற உத்தரவு தான் இருக்கும். இதைப் போன்ற நண்பர்கள், அவர்களுக்கு உங்களின் உதவி தேவைப்பட்டால் முதலில் அழைப்பது உங்களைத்தான். நீங்களும் நண்பர் தானே என்று அவர்களுக்கு உதவி செய்தால், அடுத்த அழைப்பு சில மாதங்களுக்கு அவர்களிடம் எந்த அழைப்பும் எதிர்பார்க்காதீர்கள். குறைந்த பட்சம், உடனடியாக வேண்டுமெனில், உங்களுக்கு தான் அழைப்பு வரும்.

உங்கள் மீது மரியாதை இருக்காது :

அவர்கள் நக்கல் நையாண்டி செய்வதில் கைதேர்ந்தவர்கள். மறைமுகமாக, உங்களை கேலி செய்வது, விளையாட்டுப் பேச்சு என்று அவமானப்படுத்துவது, பாராட்டு என்று பெயரில் கிண்டல் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்வார்கள். இந்த செயல்கள் உங்களுக்கு மிகவும் அசௌகரியமாக உணர வைக்கும்.

நண்பர்களை கேலி கிண்டல் செய்வது தவறில்லையே! ஆனால், சில நேர்ணகளில் மட்டும் தான். எப்போதுமே ஒருவரை கேலி செய்வது நல்ல பழக்கம் இல்லை. ஒருவர் தொடர்ந்து உங்களை கேலி செய்வதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருந்தாலும், அவர்களோடு பழகுவது எளிதல்ல.

காதல் வாழ்க்கையில் அடிக்கடி சண்டையா? கோபத்தை கட்டுப்படுத்த இவற்றை பின்பற்றினால் ‘லைஃப் கூலாகும்’!

அவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்பவர்களா?

நண்பர்கள் எதற்காக? நம்முடைய மகிழ்ச்சியை மட்டுமின்றி, துன்பத்தையும் பகிரத்தான். மனதில் குமைந்திருப்பதைக் கொட்டிக் தீர்க்க ஒரு நண்பன் நிச்சயமாகத் தேவை. ஒரு ஞாயிறு அன்று, ஐஸ்க்ரீம் பார்லரில் அல்லது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டே, உங்கள் மனதில் இருப்பதை கொட்டித் தீர்க்கலாம். ஆனால், சில நேரங்களில், நமக்கு கிடைத்திருக்கும் நண்பர்கள் தங்களுடைய சோகமான, துன்பமான தருணங்களை மட்டுமே பகிர்வார்கள்.

‘சொல்லுடா என்ன பிரச்சனை’ என்று அவர்கள் அழைக்கும் போதே நீங்கள் சொல்லும் அளவுக்கு பிரச்சனைகளை மட்டுமே உங்களுடன் பகிரும் நண்பர்கள் இருப்பார்கள்.

அதிலும் தவறில்லை. ஆனால், ஒவ்வொரு முறை தங்கள் துன்பங்களை பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து, ஆலோசனைகளை, தீர்வுகளைக் கேட்பார்கள். ஆனால், நீங்கள் கூறிய எதையும் சிந்திக்காமல், தானாகவே அல்லது நீங்கள் கூறியதற்கு எதிராக முடிவு செய்து, மறுபடியும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்!



உங்களைப் பற்றி ‘எல்லாம்’ தெரிந்து கொள்ள ஆசை :

சில நபர்கள் உங்களிடம் நட்பாக இருப்பதற்கு முக்கியக் காரணம், உங்களைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டு, உங்கள் முதுகுக்குப் பின்னே புறம் பேசுவார். உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவே நட்பாக நெருங்கிப் பழக முயற்சி செய்வார்கள்.

காலை முதல் இரவு வரை என்ன செய்கிறீர்கள், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது பற்றி எல்லாம் கூற உங்களை தொந்தரவு செய்வார்கள்.

இந்த மாதிரியான நபர்களுக்கு, பொதுவாகவே மற்றவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதில் பேரார்வம் இருக்கும். சில நேரங்களில், அந்த ஆர்வத்துக்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பலிகடா ஆகலாம். இந்த மாதிரி போலியான நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது.

துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

மன்னிப்பா? முடியாது!

சில நபர்களிடம் பொதுவாக காணப்படும் குணம், யாரிடமும் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இதிலே, மோசமாக நடந்து கொண்டு, பலரைக் காயப்படுத்தினாலும், அதனை மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலும், இவர்கள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

உண்மையான நண்பர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். நீங்கள் நண்பர்களை மன்னித்து விடுவீர்கள் என்ற குணமும் தெரிந்திருக்கும். இதையே, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, உங்களை அல்லது பிறரை காயப்படுத்தி / மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தங்கள் நடத்தைக்கு நியாயம் கற்பிப்பார்கள்.

நீங்கள் அதை சுட்டிக்காட்டும் போது, அதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நடித்து, உங்களிடம் பேசுவதைத் தவிர்த்து, அவர்கள் செய்த தவறுக்கு, உங்களுக்கு குற்ற உணர்ச்சி தோன்றுவது போல உணரச் செய்வார்கள்.



உடுக்கை இழந்தவன் கை போல...

நமக்கு தேவையான நேரத்தில் நண்பர்கள் அருகில் இருக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில், அவசரத்தில், சிக்கலில், நீங்கள் தேடினாலும் அவர்கள் கிடைக்க மாட்டார்கள்.

உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் அல்லது இருப்பார்களா?

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், போலியான நண்பர்கள் உங்கள் அருகில் இருப்பார்கள், ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு. முதலாவது, தங்களுக்கு கேட்ட பெயர் வரக்கூடாது. இரண்டாவது, அவர்களை அனைவரும் நேசிக்க வேண்டும் / யாரும் எதிர்க்கக் கூடாது.

தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருவது போல இருந்தால், நீங்கள் தீயில் மாட்டிக் கொண்டாலும், அருகில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அதவாது, சுயநலவாதிகள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: