உங்கள் துணை உங்களை விரும்புகிறாரா அல்லது காதலிக்கிறாரா..? குழப்பத்தைத் தீர்க்க கிளிக் செய்க..!

உங்கள் மீது அன்பு காட்டுகிறார் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் விஷயங்களை செய்வதில்லை என புலம்புகிறீர்களா?

உங்கள் துணை உங்களை விரும்புகிறாரா அல்லது காதலிக்கிறாரா..? குழப்பத்தைத் தீர்க்க கிளிக் செய்க..!
உங்கள் துணை உங்களை விரும்புகிறாரா அல்லது காதலிக்கிறாரா..?
  • Share this:
நீங்கள் காதலிக்கிறீர்கள் அல்லது திருமண உறவில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்காகவே இந்தக் கட்டுரை. உங்கள் காதல் துணை உங்கள்மீது அன்பு காட்டுகிறார் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் விஷயங்களை செய்வதில்லை என புலம்புகிறீர்கள் எனில் தெளிவு கொடுக்கவே இந்தக் கட்டுரை. அவர் உங்களை காதலிக்கிறாரா அல்லது விரும்புகிறாரா என்று பார்க்கலாம்.

அவரிடம் நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்கள். சௌகரியமாக இருக்கிறீர்கள். அதேசமயம் உணர்வு ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவராக இருப்பார். எமோஷ்னலாக உங்களுடன் விலகியே இருப்பார்.

ஐ லவ் யூ என்ற வார்த்தையை முதலில் எப்போதும் நீங்கள் தான் சொல்வீர்கள். பதிலிக்கு ஐ லவ் யூ சொன்னாலும் உங்களை நேருக்கு நேர் கண்களை பார்த்து சொல்ல மாட்டார்.


கொரோனா ஊரடங்கு : தம்பதிகள் இருவரும் சேர்ந்து இந்த காரியங்களைச் செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்..!

அவர் உங்கள் வளர்ச்சிக்காக உதவுவார். உங்களை பாராட்டுவார். யாரும் உங்களை பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு பார்த்துக்கொள்வார். உங்களை அப்படியே ஏற்றுக்கொள்வார். இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் காதல் விடுபடுவது போன்ற உணர்வு தோன்றும். அவர் உங்களை நினைக்கிறாரா..உங்களுக்காக யோசிக்கிறாரா , வருத்தப்படுகிறாரா என்ற சந்தேகமும், கேள்வியும் இருந்துகொண்டே இருக்கும்.

அவர் எவ்வளவு செய்தாலும் காதல் குறைவாக இருப்பது போலவே இருக்கும். படங்கள் ,மற்றவர்களின் காதலைப் பார்க்கும்போது ஏக்கம், ஏதோ ஒரு குறை இருப்பது போல் இருக்கும்.

உங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற கவலை எப்போதும் இருக்கும். அதாவது உங்களுடன் பேச நேரம் ஒதுக்க மாட்டார். நண்பர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட உங்களுக்கு கொடுக்க மாட்டார். அருகில் தனிமையில் இருந்தாலும் காதல் உணர்வுகளோடு பேசவோ, ரொமாண்டிக்காகவோ இருக்க மாட்டார். நண்பர்களுடன் இருப்பது போலேயே உங்களுடனும் நடந்து கொள்வார்.

எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்படும் துணையுடன் வாழ்கிறீர்களா..? சமாளிக்க இதோ வழிகள்..

காதலை நீங்கள் வெளிப்படுத்தினாலும், ரொமாண்டிக்காக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது. அதை தவிர்க்க நினைப்பார். பதிலுக்கு அன்பாகவோ, காதல் வார்த்தைகளையோ வெளிப்படுத்த மாட்டார்.

இப்படி மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தென்பட்டால் அவருக்கு உங்கள் மீது காதல் (love) அல்லாமல் விருப்பம் (like) மட்டும் இருக்கலாம். இருந்தாலும் இதனால் தொய்வு அடையாமல் அவருக்கு உங்கள் மீது காதல் வர என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்..!

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading