ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நெருங்கிய நண்பர் மனதிற்குள் உங்களை வெறுப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

நெருங்கிய நண்பர் மனதிற்குள் உங்களை வெறுப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

நெருங்கிய நண்பர் மனதிற்குள் உங்களை வெறுப்பதை உணர்த்தும் அறிகுறிகள்

நெருங்கிய நண்பர் மனதிற்குள் உங்களை வெறுப்பதை உணர்த்தும் அறிகுறிகள்

நமது வெற்றிகளை நம்மை விட அதிகம் கொண்டாடும் நபர்களாக நமது நண்பர்களே இருப்பார்கள். இதுவே பொதுவான வழக்கம். ஆனால் உங்களிடம் போலியாக நட்பு கொள்ளும் நபர்களுக்கு உங்களுடைய எத்தகைய வெற்றியையும் கொண்டாட மனம் வராது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

BFF எனப்படும் பெஸ்ட் பிரெண்ட் பார் எவர் என்ற இன்பம், துன்பம், இளமை, முதுமை என அனைத்து சமயங்களிலும் கூட வரும் நட்பு கிடைப்பது வரம். நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி நிறைகளை பார்க்க நண்பர்களால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி குறைகளை பார்க்காத நட்பு எல்லாருக்கும் கிடைப்பது கிடையாது. சில நேரங்களில் உங்கள் மிகப்பெரிய எதிரி உங்கள் நெருங்கிய நண்பராக கூட ஆகலாம். உங்கள் BFF உங்களை இரகசியமாக வெறுக்கக்கூடும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இதோ...

1. உங்களைப் பற்றி மோசமாக பேசுவதை கேட்டிருப்பீர்கள்:

உற்ற நண்பர் அல்லது தோழி உங்களைப் பற்றியே மோசமாக விமர்சித்து பேசுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?. அது பற்றி நீங்கள் கேட்கும் போது அவர் விளையாட்டாக பேசியதாக கூறினால், அவருடனான நட்பை நல்ல முறையில் முடித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. உங்களை உண்மையாக விரும்பும் எந்த ஒரு நபரும் உங்களை கேவலப்படுத்த மாட்டார்கள். உங்களை நேசிக்காத மற்றும் பாராட்டாத ஒருவருடன் நட்பு கொள்வது தேவையற்றது.

2. உங்கள் சாதனைகளை கொண்டாடாத நட்பு:

நமது வெற்றிகளை நம்மை விட அதிகம் கொண்டாடும் நபர்களாக நமது நண்பர்களே இருப்பார்கள். இதுவே பொதுவான வழக்கம். ஆனால் உங்களிடம் போலியாக நட்பு கொள்ளும் நபர்களுக்கு உங்களுடைய எத்தகைய வெற்றியையும் கொண்டாட மனம் வராது. எவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் அடைந்திருந்தாலும் உங்கள் உற்ற நண்பர் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றால், அதில் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம்.

3. உங்களை ஊமையாக்குவார்கள்:

உங்களின் எளிய தவறுகளை உங்கள் BFF தொடர்ந்து சுட்டிக்காட்டினால், அவர்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை குறைவாக மதிப்பிட முயல்கிறார்கள் என அர்த்தம். மாற்றத்தை நோக்கி நீங்கள் முன்னேறினால் எங்கே பிரகாசித்துவிடுவீர்களோ என்ற எண்ணத்தில் அனைத்தையும் கெடுக்க முயல்வார்கள்.

4. உங்களை சந்திக்க முயலமாட்டார்கள்:

எப்போதுமே உங்களை சந்திக்கவோ, பேசவோ வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்காது. பதிலுக்கு அவரைத் தேடி நீங்கள் தான் செல்ல வேண்டி இருக்கும், எப்போதும் சந்திக்கத் திட்டமிட்டு, தொடர்பைத் தொடங்குபவர்களாக நீங்கள் இருப்பதைக் கண்டால், அவர்கள் உங்களை அதிகம் விரும்பாததால் இருக்கலாம்.

வெற்றிகரமான திருமண வாழ்வுக்கு பாலிவுட் ஜோடிகள் பகிர்ந்த ஆலோசனைகள்!

5. உங்களைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்:

மோசமான நாள், அலுவலக பிரச்சனைகள், காதல் பிரிவு, உறவுச்சிக்கல் என உங்களுடைய எந்த பிரச்சனையைப் பற்றி நீங்கள் பேசினாலும், உங்கள் உணர்வை புரிந்துகொண்டு ஆறுதலாக பேசமாட்டார்கள். ஆம், உங்கள் புலம்பல்களுக்கு குரல் கொடுத்தாலும், உண்மையான ஆர்வம் காட்ட மாட்டார்கள் மற்றும் கேள்விகளைக் கேட்க மாட்டார்கள் அல்லது உங்களை நன்றாக உணரவைக்க எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள்.

6. உங்களை கேலி செய்வார்கள்:

உங்கள் பெஸ்ட் பிரண்ட் சுற்றி இருப்பவர்களுடன் சேர்ந்து உங்களை கேலி செய்வது, அவர்கள் உங்களை மதிக்காததாலும், உங்களைப் பற்றி நீங்கள் மோசமாக உணர விரும்புவதாலும் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை சொல்வதை நிறுத்தும்படி அவர்களிடம் கேட்பது நல்லது.

பெற்றோரின் வளர்ப்பு முறையை குறை சொல்வது குழந்தை மற்றும் பெற்றோரை எப்படி பாதிக்கும்..?

7. சோர்வாக உணர்வீர்கள்:

உங்கள் காதலியுடன் தொடர்புகொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? அவர்களுடன் பேசிய பிறகு நீங்கள் தொடர்ந்து மனதளவில் சோர்வடைகிறீர்களா? சரி, உங்கள் ஆற்றலை வேறு இடத்தில் செலுத்த வேண்டிய நேரம் இது! உங்கள் நட்பும் உறவுகளும் உங்களுக்கு அமைதியைத் தர வேண்டும், மேலும் உங்களை மோசமான மனநிலையில் இருந்து மீட்க வேண்டும்.

First published:

Tags: Friendship, Relationship Tips