இந்திய கலாசாரத்தில் பாலியல் குறித்து பேசுவது வெட்கம் நிறைந்த விஷயமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் கூட பாலியல் குறித்து பேசவது பெருங்குற்றம் என்ற எண்ணம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நிலவுகிறது. ஏன் இத்தகைய நிலை நீடிக்கிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஏனென்றால் தாம்பத்யம் என்பது மனம் சார்ந்ததாக அல்லாமல் வெறுமனே உடல் சார்ந்தது என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர்.
பாலியல் நல ஆலோசகரும், பயிற்றுநருமான சீமா ஆனந்த் இதுபோன்ற தவறான புரிதல்களை களைய வேண்டும் என்று இணையதளம் மூலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பாலியல் நலன் குறித்து காமசூத்ரா குறிப்புகளுடன் கூடிய ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலமாக தெரிவித்து வருகிறார். ‘நியூஸ் 18’ செய்தி நிறுவனம் அவரிடம் பிரத்யேகமாக பேட்டி கண்டது. அப்போது பாலியல் தொடர்பான பல கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக நீங்கள் உடைக்க விரும்பும் சில கட்டுக்கதைகள் என்ன?
பாலியல் உறவு என்பது பெண்ணின் உடல் சார்ந்தது என்று பலரும் கருதுகின்றனர். ஒரு பெண் உடலுறவு கொண்டால், அவருக்கு வயதான தோற்றம் தென்பட தொடங்கிவிடும் எனக் கூறுகின்றனர். பெண் உடலுறவு கொண்டால், அவரது தொடை அளவுகள் பெரியதாக மாறிவிடும், அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் நடை மாறிவிடும் என்ற கட்டுக்கதை நிலவுகிறது.
இது எல்லாவற்றையும் விட உடலுறவு கொண்டால் ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பு இலகுவானதாக மாறிவிடும் எனக் கூறுகின்றனர். இதுபோன்ற நிறைய தவறான தகவல்கள் உலா வருகின்றன. ஒவ்வொரு நல்ல விஷயத்தின் பின்னாலும் சில தவறான புரிதல் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாலியல் தூண்டல் என்பது ஒரு கலை என்று நீங்கள் குறிப்பிடுவது குறித்து விளக்க முடியுமா?
பேரின்பம் என்பது மிக முக்கியமானது என்று பழங்காலத்தில் இருந்தே இந்தியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆற்றல் என்பது ‘சக்தி’ ரூபமாக வெளிவருகிறது என நம்புகின்றனர். நம் வாழ்க்கை முழுவதும் நாம் அனுபவிக்க கூடிய விஷயம் என்னவென்று யோசியுங்கள்? அது பாலியல் உறவு தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டால் என்ன ஆகும்?
Also Read : பெண்கள் ஆர்கசம் பற்றி பரவலாக கூறப்படும் கட்டுக்கதைகள்..!
விளக்கை அணைப்பதும், மேக் அப் களைவதும், அதே பொசிஷனில் முயற்சிப்பதுமாக இருந்தால், நாளடைவில் அது சலித்து விடும். அதுவே உங்களுக்கு பெரிய கஷ்டமான கடமைகளில் ஒன்றாக மாறிவிடும். அதற்குப் பிறகு உங்கள் மனதில் குதூகலம் என்பதே இருக்காது. ஆக, இதை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் வெவ்வேறு உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆகவே தான் முன் விளையாட்டுகள் குறித்து காமசூத்ராவில் விவரிக்கப்பட்டுள்ளது. முன் விளையாட்டுகள் என்றால் ஒருவருக்கு, ஒருவர் கதை சொல்வதில் தொடங்கி பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் கொஞ்சம் ஆபாசமாக அல்லது கிசுகிசு பேசுவதன் மூலமாக நம் எண்ணங்களை தூண்ட முடியும்.
பாலியல் குறித்து பேசுவதால் பெண்கள் விமர்சிக்கப்படுவது குறித்து?
பெண்கள் விமர்சிக்கப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் பாலியல் ரீதியாக நகைச்சுவை செய்தால், அதை வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு செய்கின்றனர். அதுகுறித்து பேசி மகிழ்கின்றனர். ஆனால், நாகரீகமான வகையில், பேரின்பம் குறித்து நீங்கள் பேச நினைத்தால் அது அசௌகரியமானதாக இருக்கும்.
பாலியல் கல்வி எவ்வளவு முக்கியமானது, அதை எப்படி அமல்படுத்துவது?
பாலியல் கல்வி மிக, மிக அவசியமாகும். பெரும்பாலான மக்கள், ஒருவர் எப்படி பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார் என்ற கேள்வியைத் தான் முன்வைக்கின்றனர். அது நிகழும்போது அதற்கான பதில் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம், பாலியல் உறவு என்றால் உணர்வு ரீதியானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு நபரை தொடாமலே கூட, அவர்களை பார்க்கும்போதே உங்கள் உடலில் சில மாற்றங்கள், உணர்வுகள் ஏற்படுவதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படி பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் கற்பிக்க தேவையில்லை. ஆனால், அதை எப்படி உணர வேண்டும் என்றுதான் கற்பிக்க வேண்டும் என்றார் சீமா ஆனந்த்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sexual Health, Sexual Wellness