Home /News /lifestyle /

பெண்கள் மெத்தையில் எதிர்பார்க்கும் கிக்கான வார்த்தைகள்... இப்படி பேசினால் மிகவும் பிடிக்குமாம்...

பெண்கள் மெத்தையில் எதிர்பார்க்கும் கிக்கான வார்த்தைகள்... இப்படி பேசினால் மிகவும் பிடிக்குமாம்...

தாம்பத்தியம்

தாம்பத்தியம்

ஹெவியான உணவுக்கு முன் ஸ்டார்டர்ஸ் என்பதைப் போல, தாம்பத்ய உறவின் தொடக்கமாக அமைவது அன்பான முத்தங்கள். நம் பார்ட்னர் நம் மீது எவ்வளவு அன்பும், ஆசையும் கொண்டுள்ளார் என்பதை முத்தங்களை கொண்டு கணக்கீடு செய்து விடலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆணும், பெண்ணும் இணையும் தாம்பத்ய வாழ்க்கை என்பது இனப்பெருக்கத்திற்கு மட்டுமல்லாமல் இருவரின் உடலும், உள்ளமும் பேரின்பம் அடைவதற்கான வழிமுறையாக இருக்கிறது. பாலியல் உறவு என்பது உள்ளக் கிளர்ச்சியும், உடல் கிளர்ச்சியும் இரண்டறக் கலந்த விஷயம் என்று கூறலாம். அதாவது, உடலில் கிளர்ச்சியை தூண்டுவதற்கு, பார்ட்னரை கிறங்கடிக்கச் செய்யும் வகையில் மனம் இறங்கி பேச வேண்டும்.

    உடல் கிளர்ந்து எழுந்து இன்பத்தில் கலக்கும்போது அது மனதுக்கும் மகிழ்ச்சியை தரும். மெத்தையில் ஒரு வார்த்தை கூட பேசாமலும் தாம்பத்ய வாழ்க்கை சாத்தியம் தான் என்றாலும் கூட, கொஞ்சம் கிக்காக பேசிக் கொண்டே அதை முன்னெடுத்தால் பாலும், தேனும் கலந்ததைப் போல சுவை மிகுந்து காணப்படும்.

    ஆனால், வெட்கம் காரணமாக கிக்காக பேசுவதற்கு பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அதே சமயம், தன்னுடைய கணவர் அப்படி பேச வேண்டும் என்று எதிர்பார்பார்கள். உள் மனதில் ரசிக்கவும் செய்வார்கள். ஆகவே, நீங்கள் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



    முத்தம் கொடுப்பது ரொம்ப பிடிச்சிருக்கு

    ஹெவியான உணவுக்கு முன் ஸ்டார்டர்ஸ் என்பதைப் போல, தாம்பத்ய உறவின் தொடக்கமாக அமைவது அன்பான முத்தங்கள். நம் பார்ட்னர் நம் மீது எவ்வளவு அன்பும், ஆசையும் கொண்டுள்ளார் என்பதை முத்தங்களை கொண்டு கணக்கீடு செய்து விடலாம். அதே சமயம், மனைவியை முத்தமிடும்போது, முத்தமிடுவது எவ்வளவு தூரம் பிடித்திருக்கிறது என்பதை விவரிக்க தயங்காதீர்கள். இது பாலியல் உறவின்போது நம்பிக்கையை அதிகரிக்கும்.

    உஷார்... விந்தணுக்களை பாதிக்கும் இந்த 5 உணவுகளை ஆண்கள் தொடவே கூடாதாம்...

    ரொம்ப அழகா இருக்க

    உங்கள் மனைவியை உள்ளாடைகளுடன் பார்க்கும் தருணத்தில், அழகை வர்ணிக்க தவற வேண்டாம். ஏனென்றால், தன் கணவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அழகான உள்ளாடைகளை உங்கள் மனைவி தேர்வு செய்திருக்க கூடும். அதை நீங்கள் ஆமோதித்து பாராட்டும்போது இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    நல்ல மனமாக இருக்கிறது

    மனித உடலுக்கு என்று ஒரு வாசம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களின் கூந்தல் மனம் வீசும் என்ற பழமொழியே உள்ளது. அந்த வகையில், உங்கள் மனைவியின் மனம் எப்படி இருக்கிறது என்று விவரித்து பேசுங்கள். இது குதூகலத்தை கொடுக்கும்.



    மிக மென்மையாக இருக்கிறாய்

    மெத்தையில் ஒரு பெண் ஆடையின்றி இருக்கும்போது, பெண்ணின் உடலை, சருமத்தை நீங்கள் எந்த அளவுக்கு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை விவரிக்க வேண்டும். குறிப்பாக பெண்மைக்கு அடையாளமான மென்மையை வர்ணிக்க தவறாதீர்கள்.

    Pubic Hair Removal: பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?

    திறன்களை பாராட்ட வேண்டும்

    பாலியல் உறவின்போது உங்களை மகிழ்விப்பதற்காக, பெண் சுய தூண்டுதலில் சில விஷயங்களை செய்வார்கள். சில சமயம் அவர்கள் டாப் ரைடிங் பார்ட்னராக இருக்கலாம் அல்லது நீங்கள் சுய இன்பம் அடைய உதவி செய்யக் கூடும். அத்தகைய தருணங்களில் நீங்கள் எந்த அளவுக்கு மெய்மறந்து போனீர்கள் என்பதை கட்டாயம் வெளிப்படுத்தவும்.



    உன்னால் பேரின்பம் அடைந்தேன்

    ஆடையின்றி இருக்கும் தன்னை கணவர் எவ்வளவு தூரம் வர்ணிக்கிறார், பாலியல் உறவின் மூலம் கிடைத்த இன்பத்தை எந்த அளவுக்கு கொண்டாட்டமாக கருதுகிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என ஒரு பெண் எதிர்பார்க்க கூடும். ஆகவே, இவை குறித்து பேசுவது தாம்பத்ய உறவில் மகிழ்ச்சிக்கான போனஸ் விஷயங்களாக அமையும்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Sex, Sex Desire

    அடுத்த செய்தி