• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலுறவில் சுகாதாரத்தை பின்பற்றுவது மட்டுமல்ல..இந்த விஷயங்களையும் கடைபிடிக்க வேண்டும்..!

உடலுறவில் சுகாதாரத்தை பின்பற்றுவது மட்டுமல்ல..இந்த விஷயங்களையும் கடைபிடிக்க வேண்டும்..!

ஒரு ஆய்வு 1,194 பெற்றோர்களை ஆய்வு செய்தது. பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வதாக பதில் அளித்துள்ளனர். இத்தனை முறை உடலுறவா என வேடிக்கையாகத் தோன்றினாலும், எப்படியாவது பாசிடிவான ரிசல்டை பெற்றிட வேண்டும் என்ற கவலை , மன அழுத்தமே இதற்குக் காரணம்.

ஒரு ஆய்வு 1,194 பெற்றோர்களை ஆய்வு செய்தது. பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வதாக பதில் அளித்துள்ளனர். இத்தனை முறை உடலுறவா என வேடிக்கையாகத் தோன்றினாலும், எப்படியாவது பாசிடிவான ரிசல்டை பெற்றிட வேண்டும் என்ற கவலை , மன அழுத்தமே இதற்குக் காரணம்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பாலியல் தொற்று(STI) மற்றும் பாலியல் நோய்களுக்கு (STD) உள்ளாகின்றனர். கருத்தரிப்பு, காண்டம் உபயோகம் போன்றவை குறித்து தெரிந்து கொண்டால், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

  • Share this:
உடலுறவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பாலியல் தொற்று(STI) மற்றும் பாலியல் நோய்களுக்கு (STD) உள்ளாகின்றனர். கருத்தரிப்பு மற்றும் காண்டம் உபயோகம் ஆகியவைகள் குறித்து தெரிந்து கொண்டால், இதுபோன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அதற்கு சில பாதுகாப்பான மற்றும் முன்னெச்சரிக்கை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அவை என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.


உடலுறவு தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் : மனைவி அல்லது கணவரிடம் உங்களின் முந்தைய உடலுறவு குறித்த தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இது உங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஒருவருக்கு இருந்தாலும், அந்த தொற்று மற்றவருக்கும் பரவும் என்பதால், பார்ட்னரிடன் முந்தைய உடலுறவு குறித்து மறைப்பது நல்லதல்ல. ஒருவேளை பகிர்ந்து கொள்ளும்பட்சத்தில் உரிய சிகிச்சை எடுத்து முன்கூட்டியே அந்த தொந்தரவுகளில் இருந்து மீண்டுவர முடியும்.


உடல் பரிசோதனை :  வருடத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறையாவது உடலை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக, உடலுறவு கொள்வதற்கு முன்பாக பரிசோதனை செய்து கொள்வது இருவருக்கும் நோய் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக இருக்கும். ஒருவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றால், பார்ட்னரை உடல் பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.


தடுப்பூசி : ஹூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மற்றும் ஹெபாடிடிஸ் ஏ, பி ஆகிய வைரஸ்கள் பொதுவாக உடலுறவு மூலம் பரவும் தொற்று நோய்களாகும். இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் இறப்பை தழுவக் கூட வாய்ப்புகள் உள்ளது. மேலும், உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என்பதால், இந்த நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது நல்லது.


கருத்தடை : உடலுறவு மூலம் கரு உருவாவதை தடுக்க கருத்தடை முறைகள் உள்ளன. இந்த முறைகளை பின்பற்றும்போது உடலுறவு மூலம் தொற்றும் பாலியல் தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். அதாவது, உயர்தரமான காண்டம்கள் சந்தைகளில் விற்பனையாகின்றன. ஆண், பெண் இருவரும் பாதுகாப்பான காண்டம்களை பயன்படுத்தி உடலுறவை அனுபவிப்பதுடன், தொற்றுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.


உடல் சுகாதாரம் : உடலுறவுக்கு செல்லும் முன்பு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், உறுப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். எப்போது உடலுறவுக்கு செல்லும் முன்பு, இருவரும் சிறுநீர் கழித்தபிறகு உடலுறவை மேற்கொள்ளுதல் நல்லது. ஏனென்றால், சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றுகள் உடலுறவு மூலம் உடலுக்குள் மீண்டும் செல்ல வாய்ப்புகள் உள்ளன. தனிநபர் சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை மட்டுமே பாதுகாப்பான பாலியல் தொற்றுகளில் இருந்து ஒருவரை பாதுகாக்கும்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: