குழந்தை பிறந்த பிறகு, வாழ்க்கை மாறிவிடும். குழந்தை பெற்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கணவன் மனைவியாக இருந்தவர்கள் பெற்றோராக மாறிய உடன், உறவில் மாற்றம் வரும். குழந்தை பிறந்த சில வாரம் முதல் மாதங்கள் வரை, பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது.
முதல் முறை குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பிறந்த சில காலம் வரை பாலியல் உறவில் ஈடுபடுவது என்பது பற்றி பல தயக்கங்கள் இருக்கும். உடல் ரீதியாக உணர்வு ரீதியாக பலவித மாற்றங்களை எதிர்கொண்டு பெண்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் மாறுபடும், மற்றும் ஈடுபட முடியுமா என்ற கேள்வி எழும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்த பிறகு செக்ஸில் ஈடுபடுவதற்கு இதுதான் சரியான நேரம், இது தவறானது என்று என்று குறிப்பிட்ட கால அளவு எதுவும் கிடையாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். குழந்தை பிறந்த பிறகு செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஜெயிப்பூரில் உள்ள மிஷ்கா ஐவிஎப் மையத்தின் மகப்பேறியல் ஆலோசகர் மற்றும் நிர்வாக இயக்குனரான மருத்துவர் ருச்சி பந்தாரி இதைப்பற்றி கூறுகையில், ‘குழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு வஜைனால் சோர்நஸ், ரத்தப் போக்கு மற்றும் உடல் ரீதியான தீவிரமான சோர்வு ஆகியவை ஏற்படும்.
இவை, பாலியல் செயல்பாடுகளை அசௌகரியமாக அல்லது விரும்பத்தகாததாக மாற்றும். எனவே, குழந்தை பிறந்த பிறகு, ரத்தப் போக்கு நிற்கும் வரை இன்டர்கோர்சை தவிர்க்க வேண்டும். இதற்கு குறைந்தது குழந்தை பிறந்த பிறகு 4 முதல் 6 வாரங்கள் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.
மனதளவில் தயாராக வேண்டும்
மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் உடல் ரீதியாக ஒரு பெண் பாலியல் உறவுக்கு தயாராக வேண்டும் என்று கூறுவது ஒரு பக்கம் இருக்கையில், மன ரீதியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் டெலிவரிக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு ஒரு பெண் தயாராக இருப்பது மிகவும் முக்கியம்.
போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்று குழந்தை பிறந்த பிறகு பல புதிய அம்மாக்கள் ஏகப்பட்ட உணர்ச்சிபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பின்மை, படபடப்பு, டிப்ரெஷன், மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இவற்றில் இருந்து முழுவதுமாக வெளியில் வரும் வரை ஒரு பெண்ணால் பாலியல் உறவில் ஈடுபாடு கொள்ள முடியாது. எனவே இதை கணவன் புரிந்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பது லிபிடோவை பாதிக்கும்
நிபுணர்களின் தகவல்படி, தாய்ப்பால் கொடுப்பது ஒரு பெண்ணுடைய ஹார்மோன்களை பாதிக்கும். அதுமட்டும் இல்லாமல் பாலியல் ஆர்வத்தை குறைக்கும். எனவே, தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை பெண்ணுக்கு பாலியல் உறவு மீதான விருப்பம் தோன்றாது. ஆனால், இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஒருசிலருக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
பிரசவத்திற்கு பின் உறவில் ஈடுபட சில டிப்ஸ்...
> முதலில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட தயாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும்.
> பாலியல் உறவுக்கு தயாராகும் முன்பு, மனதளவில் நீங்கள் இருவரும் நெருக்கமாக இருக்க வேண்டும்.
> பெனட்ரேட்டிவ் செக்ஸ் ஈடுபட்டால், வலி அல்லது அசௌகரியமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு அசௌகரியமாக இருந்தால், தவிர்க்கலாம் அல்லது மாஸ்டர்பெற செய்யலாம். தேவைப்பட்டால், நெகிழ்வுத் தன்மைக்கு லூப்ரிகன்ட் பயன்படுத்தலாம்.
> பெண்கள், செக்சில் ஈடுபடும் முன்பு, உங்கள் உடல் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது என்பதைப் பார்க்க, உங்களை நீங்களே ‘டச்’ செய்து பார்க்கலாம்.
> உங்களுக்கு அசௌகரியமாக அல்லது சந்தேகங்கள் இருந்தால், உங்கள் மருத்துவரை ஆலோசிக்கலாம்.
> தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலும், உடல் முழுவதுமாக சரியாகும் வரை, அடுத்த கர்ப்பத்தை தவிர்க்க வேண்டும் என்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, கருத்தடை சாதனம் பயன்படுத்தலாம்.
குழந்தை பிறந்த பிறகு, பெண்கள் உடல் ரீதியாக மன ரீதியாக பாலியல் உறவுக்கு தயாராக, கணவர் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வதும் அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.