பெண்களிடம் உள்ள ஒரு சில குணங்கள், பண்புகள், நடந்து கொள்ளும் விதம் ஆகியவை ஆண்களை எளிதில் ஈர்த்துவிடும். பார்வைக்கு அழகு, நெற்றியில், கன்னத்தில் விழும் முடிக்கற்றை, கண்களால் சிரிப்பது, சிரிக்கும் போது கண்கள் ஓரத்தில் ஏற்படும் மெல்லிய சுருக்கம், உள்ளிட்ட பல விஷயங்கள் ஆண்களை எளிதில் ஈர்க்கும். ஆனால், தோற்றம், உடல் மொழி என்பதைக் கடந்து பெண்களிடம் உள்ளார்ந்த பல விஷயங்களை ஆண்கள் கவனிக்கிறார்கள் என்பதே உண்மை. பெண்களிடம் இவை இருந்தால், காந்தம் போல ஈர்க்கப்படுகிறோம் என்று ஆண்கள் கூறிய ஐந்து விஷயங்கள் இங்கே.
ஒரு பெண் எப்படி பேசுகிறார்
பெண்கள் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை ஆண்கள் அதிகம் கவனிக்கிறார்கள். ஆழமான, அழுத்தமான குரலில் மற்றும் தைரியமாக பேசும் பெண்களால் ஆண்கள் உடனடியாக ஈர்க்கப்படுகிறார்கள். மற்றவர்களிடம் பேசும் தொனியும், குரலும் இன்ஸ்டன்ட் அட்ராஷனாக இருக்கின்றன.
புத்திசாலித்தனமான உரையாடல்கள்
திரைப்படங்களில் தான் பெண்களை லூசு பெண்களாக சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆண்கள் புத்திசாலித்தனமான மற்றும் ஸ்மார்ட் ஆன பெண்களை தான், பெரிதும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஒரு பெண்ணுடன் உரையாடும் பொழுது அவர் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார், மற்றவர்களை எவ்வளவு சரியாக உள்வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள் என்பதை ஆண்கள் தீவிரமாக கவனிக்கின்றனர். ஒரு பெண்ணுடன் பேசுவது போரடித்தால், ஆண்கள் எளிதில் ஆர்வம் இழந்து விடுவார்கள்!
சொல்லும் செயலும் வேறுபட கூடாது
ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்ய வேண்டும், அதன் படி நடக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்கலாக, பொறுப்பான பெண்ணாக இருக்க முடியும். வெறும் வார்த்தைகளால் கோட்டை கட்டும் பெண்கள், அல்லது சொல்வது ஒன்றும், அதற்கு எதிர்மாறாக நடப்பதுமாக இருக்கும் பெண்களையும் ஆண்கள் விரும்புவதில்லை.
உங்களுக்கு புடிச்சவங்க உங்களையே சுத்தி சுத்தி வரணுமா? டாப் 5 லவ் டிப்ஸ்..
கம்ஃபர்ட் சோனில் இல்லாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
தற்போது பல துறைகளில் சாதிக்கும் பெண்கள், கம்ஃபர்ட் சோனில் இருப்பதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. வேலை, உறவு, புதிய முயற்சிகள் என்று எல்லாவற்றிலும் புதிய முயற்சிகளை தைரியமாக எதிர்கொள்ள விரும்பும் பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
கணவன்,மனைவி ஐடி துறையில் வேலை... லேப்டாப் பயன்படுத்துவது கர்ப்பமாகும் வாய்ப்பை தடுக்குமா?
நகைச்சுவை உணர்வு உள்ள பெண்கள்
எப்படி நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள ஆண்களால் பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ, அதே போல, ஆண்களும் நகைச்சுவை உணர்வு உள்ள பெண்களை அதிகம் விரும்புகிறார்கள். தன்னை சிரிக்கவைக்கும் பெண்ணால் உடனடியாக ஒரு ஆண் ஈர்க்கப்படுகிறான். இதற்கு பின்னால் பல உளவியல் காரணங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில், சென்ஸ் ஆஃப் ஹியூமர் என்பது செக்சியாகவும் இருப்பதாக பல ஆண்கள் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.