பெண்களே... கணவரிடம் இந்த விஷயங்களுக்கெல்லாம் ’நோ’ சொல்லப் பழகிக்கொள்ளுங்கள்..!

பல நூற்றாண்டுகளாகப் திருமண உறவில் கணவரிடம் பிடிக்கவில்லை என்றாலும் அடிமையாக செயல்படும் சில விஷயங்களை மாற்றி அமைக்க பெண்ணியவாதிகளும் முற்படுகின்றனர்.

Web Desk | news18
Updated: September 24, 2019, 7:04 PM IST
பெண்களே... கணவரிடம் இந்த விஷயங்களுக்கெல்லாம் ’நோ’ சொல்லப் பழகிக்கொள்ளுங்கள்..!
திருமணம்
Web Desk | news18
Updated: September 24, 2019, 7:04 PM IST
பெண்கள் சில இடங்களில் தன் கணவராகவே இருந்தாலும் நோ சொல்லித்தான் ஆக வேண்டும். அதை கணவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் திருமண உறவில் கணவரிடம் பிடிக்கவில்லை என்றாலும் அடிமையாக செயல்படும் சில விஷயங்களை மாற்றி அமைக்க பெண்ணியவாதிகளும் முற்படுகின்றனர். அப்படி மிக முக்கிய விஷயங்களை முன் வைக்கிறது இந்தக் கட்டுரை.

கடவுச் சொற்களைப் பகிர நோ  : கணவராகவே இருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உங்களுடைய கடவுச் சொற்களை பகிராதீர்கள். செல்ஃபோன் பாஸ்வேர்டைக் கேட்டால் கூட முழு மனதோடு விருப்பம் இல்லை எனில் பகிராதீர்கள். வங்கியின் கடவுச் சொற்களையும் பகிராதீர்கள். இப்படி உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் உங்கள் விருப்பம் இல்லாமல் கணவராகவே இருந்தாலும் அனுமதிக்காதீர்கள்.

உடலுறவில் விருப்பம் இல்லையென்றால் நோ : இது இந்த கட்டுரையில் மட்டுமல்ல. அஜித் படம் நேர் கொண்ட பார்வை வருவதற்கு முன்னரே பெண்ணியவாதிகள் தினம் தினம் பேசிக்கொண்டிருக்கும் விஷயம்தான் இது. கணவராகவே இருந்தாலும் உடலுறவுக் கொள்ள விருப்பம் இல்லை எனில் வேண்டாம் என்றால் தொட அனுமதி கிடையாது. எனவே மனைவியாக நீங்கள் உங்கள் விருப்பத்தை தெரிவிக்க அனைத்து உரிமைகளும் உண்டு.


திருமணத்திற்கு பின் பெற்றோருக்கு நிதி உதவி செய்ய மறுத்தால் நோ : இந்தியக் குடும்பங்களில் திருமணத்திற்குப் பிறகு பெண் சம்பாதிக்கும் பணம் புகுந்த வீட்டிற்குத்தான் தர வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் உண்டு. ஆனால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை பிறந்த வீட்டிற்குத் தரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமைக் கிடையாது. எனவே கொடுக்கக் கூடாது என்று கணவர் சொன்னால் யோசிக்காமல் நோ சொல்லுங்கள். விருப்பம் இருப்பின் கணவருக்கு கொடுப்பதில் தவறில்லை.உங்கள் கரியர் விருப்பங்களுக்கு தடையிட்டால் நோ : குழந்தைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தை கவனிக்க வேண்டும். மாமியார் மாமனாரை வீட்டில் இருந்து உபசரித்து பார்த்துக்கொள்ள வேண்டும் போன்ற காரணங்களுக்காக உங்கள் வேலையை விடச் சொன்னால் முடியாது என சொல்லுங்கள். இதனால் நீங்கள் அடைய நினைத்த இடம், இலக்கிற்கு, கனவிற்கு தடையாக கணவர் இருக்கிறார் எனில் முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். இக்கட்டான சூழ்நிலைகள் , மாற்று வழிகள் இல்லாத சூழல்கள் இருக்கும் பட்சத்தில் உங்கள் வேலையை விடச்சொன்னால் சிந்தித்து முடிவெடுங்கள்.

Loading...

அசௌகரியமான உடலுறவுக்கு அழைத்தால் நோ : சில ஆண்கள் உடலுறவில் சில விஷயங்களை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள். அதில் அந்தப் பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றாலும் நிர்பந்தனை செய்வார்கள். அப்படியான சூழலில் பெண்கள் கட்டாயம் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். பெண்ணின் சங்கடமான உணர்வை கணவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...