முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நேர்மறையாக சிந்திப்பதில் இருக்கும் ஆபத்து என்ன..? சத்குரு விளக்கம்..!

நேர்மறையாக சிந்திப்பதில் இருக்கும் ஆபத்து என்ன..? சத்குரு விளக்கம்..!

தவறான ஒரு இடத்தில் நேர்மறையாகவே நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு மோசமான விஷயங்கள் நிகழலாம். எதுவானாலும், எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

தவறான ஒரு இடத்தில் நேர்மறையாகவே நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு மோசமான விஷயங்கள் நிகழலாம். எதுவானாலும், எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

தவறான ஒரு இடத்தில் நேர்மறையாகவே நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு மோசமான விஷயங்கள் நிகழலாம். எதுவானாலும், எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

  • 2-MIN READ
  • Last Updated :

கேள்வியாளர் : நேர்மறையாக சிந்திப்பது குறித்தும், அது உங்கள் வாழ்வை எப்படி மாற்றமுடியும் என்பது குறித்தும் நிறைய போதனைகள் உள்ளன. நேர்மறையாக சிந்திப்பது கர்மாவிலிருந்து விடுபடுவதற்கு உதவமுடியுமா அல்லது குறைந்தபட்சம் மேன்மேலும் கர்மாவை உருவாக்குவதிலிருந்து விலக்கி வைக்குமா?

சத்குரு: மக்கள் தங்கள் வாழ்வின் ஆழத்தைத் தொலைத்துவிட்டதன் காரணம் என்னவென்றால், நேர்மறை என்ற பெயரில் அவர்களுக்கு வசதியாக உள்ளவற்றில் மட்டுமே அவர்களது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அவர்கள் மிக அற்பமானவர்களாக ஆகிவிட்டனர். அவர்களுக்கு எல்லாமே விரைவாக, விரைவாக, விரைவாக வேண்டும். எதற்குமே அர்ப்பணிப்பு இல்லை. ஒருவர் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதற்காக வருடக்கணக்காக பயில வேண்டும். அவரின் மனைவி குழந்தையைக் கூட அவர் மறந்துவிடக்கூடும் - எல்லாவற்றையும் மறந்து அவர் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஏதோ ஒன்று புலப்படுகிறது - பொருள்தன்மையின் தளத்தில் கூட இதுதான் நிகழ்கிறது.

அத்தகைய அசைவில்லாத கவனம் நவீன உலகில் பெரும்பாலும் இல்லை. ஏனெனில், "கவலை வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். எல்லாம் நன்றாகவே உள்ளன. நீங்கள் ஆனந்தமயமாகவே இருங்கள்!” என்பதைப் போன்ற போதனைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்த விதமான மகிழ்ச்சி சிதறிப்போவதைத் தவிர்க்க முடியாது என்பதுடன், மக்கள் மனரீதியாக நோய்வாய்ப்படும் சூழல்களுக்குத் தள்ளப்படுவார்கள்.

மேற்கத்திய நாடுகளில் நான் கேள்விப்படுகின்ற, இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு புகழ்பெற்ற வாக்கியம், "மகிழ்ச்சியாக இருங்கள், இந்தக் கணத்தில் வாழ்ந்திருங்கள்." தயவுசெய்து வேறு எங்கேயோ வாழ்ந்துதான் காட்டுங்களேன்! எப்படியும் நீங்கள் இந்தக் கணத்தில்தான் இருக்கின்றீர்கள். வேறு எங்கு நீங்கள் இருக்க முடியும்? இது குறித்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதுடன், அனுபவமோ அல்லது புரிதலோ இல்லாத மக்களால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் எல்லோரும் இதை மேற்கோள் காட்டுகிறார்கள்.

கர்மச் சுருள்

"சந்தோஷமாக இரு" என்பதைப் பற்றி எப்போதும் பேசும் மனிதர்களின் வாழ்க்கையை நீங்கள் கவனித்தால், அவர்களின் வாழ்க்கைமுறையைப் பொறுத்து, ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எப்போதும் இது மிக ஆழமாக உங்களைப் பாதிக்கும். ஏனெனில் உங்களின் கர்மக் கட்டமைப்பைப் பொறுத்து பல்வேறு சாத்தியங்களுக்கும் உங்களது சக்திகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. உங்கள் வலிக்கு, உங்கள் துக்கத்துக்கு, உங்கள் ஆனந்தத்துக்கு, உங்கள் அன்புக்கு என்று பகிர்வுகள் இருக்கின்றன. இது பிராரப்த கர்மா என்று அழைக்கப்படுகிறது.

இது உங்கள் மனதில் மட்டும் இல்லை. கர்மா என்பது தரவு. இந்தத் தரவைப் பொறுத்துதான் உங்கள் சக்தி செயல்படுகிறது. பிராரப்தா என்பது ஒரு சுருள் கம்பியைப் போன்றது. அது விடுபட்டாக வேண்டியுள்ளது. அவை வெளிப்படாவிட்டால் அல்லது அவற்றை நீங்கள் மறுத்தால், அவை முற்றிலும் வேறுவிதமாக வேர்விடத் துவங்கும்.

எந்தவித மனப்பாங்கும் இல்லாமல், எந்தவிதமான தத்துவமும் இல்லாமல், வெறுமனே ஏன் உங்களால் இங்கே இருக்க முடியவில்லை? விழிப்புணர்வோடு, வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள்.

அனைத்தையும் உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். எதையும் நீங்கள் மறுக்கவேண்டாம். துக்கம் வந்தால் துக்கப்படுங்கள். வருத்தம் வந்தால் வருத்தப்படுங்கள். ஆனந்தம் வந்தால், ஆனந்தம் கொள்ளுங்கள். பரவசம் வந்தால், பரவசமாக இருங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும்போது, நீங்கள் எதையும் மறுக்கவோ அல்லது தடுக்கவோ முயலவில்லை. அதேசமயம் அனைத்தும் நிகழ்கின்றன, ஆனால் நீங்கள் அதிலிருந்து விடுபட்டு இருப்பீர்கள்.

நேர்மறையாக சிந்திப்பதில் இருக்கும் ஆபத்து

மனதின் இயல்பு என்னவென்றால், "இது எனக்கு வேண்டாம்" என்று நீங்கள் கூறினால், அது மட்டும்தான் உங்கள் மனதில் நிகழும். "எனக்கு எதிர்மறை வேண்டாம்" என்று நீங்கள் கூறினால், அது மட்டும்தான் நிகழும். நேர்மறை அல்லது எதிர்மறைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? எல்லாவற்றையும் இந்த விதமாக ஏன் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள்? ஒவ்வொரு சூழலையும் அது எப்படி உள்ளதோ அந்த விதமாகவே பார்த்து, அதை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அது தொடர்பாக நீங்கள் சிறப்பாக என்ன செய்யமுடியும் என்று ஏன் பார்க்கக்கூடாது? ஒரு சூழ்நிலை நேர்மறையானதும் அல்ல, எதிர்மறையானதும் அல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது குறித்து எந்த மனோபாவங்களையும், தத்துவங்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள். எந்தவித மனப்பாங்கும் இல்லாமல், எந்தவிதமான தத்துவமும் இல்லாமல், வெறுமனே ஏன் உங்களால் இங்கே இருக்க முடியவில்லை? விழிப்புணர்வோடு, வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள்.

ஒவ்வொரு சூழலுக்கும் வெவ்வேறு விதமான எதிர்செயல் தேவைப்படுகிறது. நீங்கள் நேர்மறையாக சிந்திக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டால், ஒரு சூழலில் அது நன்றாக வேலை செய்யக்கூடும். ஆனால் மற்றொரு விதமான சூழலில் நீங்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்க வேண்டும் என்று முன்முடிவான கருத்தைக் கொண்டுள்ளீர்கள்.

மதமும், தொழில்நுட்பமும்: ஒரு விபரீதக் கலவை - சத்குரு விளக்கம்

தவறான ஒரு இடத்தில் நேர்மறையாகவே நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு மோசமான விஷயங்கள் நிகழலாம். எதுவானாலும், எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், ஒரு சூழ்நிலையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். ஒரு சூழலை அது உள்ளபடியே நீங்கள் உணர்ந்து கொள்ளும்போது, உங்களின் திறமை மற்றும் அறிவைப் பொறுத்து சிறந்த முறையில் உங்களால் செயல்பட முடியும். இது அவ்வளவு எளிமையான ஒன்றுதான்.

First published:

Tags: Isha yoga centre, Positive thinking, Sadguru